
பூரி குமாரி: ஏங்க, எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க!
கோல்கப்பா :
இரு சக்கர வண்டியில்
ஒவ்வொரு முறை
உன்னை கடக்கும்போதும்
மெதுவாய் நகர்கிறேன்.
எங்காவது ஒரு சாலை வளைவில்,
நான்கு முனை சந்திப்பில்,
நீ என் கண்ணில் படாமலிருப்பதில்லை!
எந்த அவசரத்தில் இருந்தாலும்,
மஞ்சள் பூசிய உன்னை கவனிக்காமல்
எப்படி இருக்க முடியும்?
எந்த நினைப்பில் நான்
வண்டி ஒட்டி கொண்டிருந்தாலும்,
என்னை எனக்கே நினைவூட்டும்
கடமையை தவறாமல் செய்கிறாய்!
நீ மட்டும் தனியாய் இருந்தால்,
ஒரு கணம் மட்டும்
வேகம் குறைக்கும் நான்,
நீ உன் குழுவோடு வரும்போது,
என் உச்சி முதல் கால் வரை அதிர்வதை
என்னவென்று சொல்ல?
உன்னை தாண்டி
செல்லும் போது
என் பின்னால்
இருக்கும் ஒருத்தி,
எவ்வளவு கோபமிருந்தாலும்
என்னை இறுக பற்றி
தோளில் சாய்ந்து கொள்கிறாள்!
என் தேகம் காக்கும்
வேகத் தடையே!
உன் நோக்கம் சரி தான்
வேகத் தடையே!
பூரி குமாரி: நீங்க ஒரு பைக் சைக்!
கோல்கப்பா : மக்களே! வேகத் தடை நம்ம பாதுகாப்புக்கு தான் இருக்குது! ஆனா சைட் ஸ்டாண்டை எடுத்து விட்டுட்டு அப்புறம் வண்டிய ஸ்டார்ட் பண்ணுங்க! Bye!