
Tamil Joke – Good night!




கோல்கப்பா : என்ன குமாரி, நாள் நெருங்கிடுச்சி எலக்க்ஷன் ரிசல்ட்டுக்கு! உன் கணிப்பு என்ன?
பூரி குமாரி : ஊர்ல கருத்து கணிப்பு சொல்றவங்களையெல்லாம் வண்டை வண்டையா திட்றாங்க கோல்! நமக்கு எதுக்கு வம்பு?
கோல்கப்பா : கரெக்ட்டுதான்..இந்த கணிப்பையெல்லாம் எப்புடி பாக்குற குமாரி?
பூரி குமாரி : ஹிஹிஹீ ..எல்லாம் பை, பையா கவனிப்பு தான்!
கோல்கப்பா : அடிப்பாவி…Clue பங்கமா இருக்கேடி!
பூரி குமாரி : சரி நீங்க சொல்லுங்க எந்த கோஷ்டி வின் பண்ணும்?
கோல்கப்பா : மே மூணு எழுத்து..அதுனால மூணு எழுத்து கட்சில ஒண்ணு ஜெயிக்கும்…
பூரி குமாரி : ஓஓஓ, அப்போ நாலு என்ன தொக்கா? நாலாம் தேதி ரிசல்ட்டு வருது..நாலு எழுத்து கட்சி தான் ஜெயிக்கும்…இது எப்புடி..ஹிஹிஹி..
கோல்கப்பா : எது எப்டியோ..நாளைக்கு அப்புறம் இந்த 2026 நம்ம காதுல கேக்குறது கொஞ்சம் குறையும்..
பூரி குமாரி : அதுவும் நம்ம “இட்டுகினு வந்து இட்டுகினு போறவர்” 2026ன்னு ஒவ்வொரு தடவை சொல்லி முடிக்குறதுக்குள்ள நான் இந்த வருஷமே முடிஞ்சிடும் நெனச்சிருக்கேன்..
கோல்கப்பா : ஆனந்தம் ஆனந்தம் பாடும், மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்…நீ மட்டும் தான் Clue குடுப்பி யா..நா கொடுத்திருக்கேன் பாரு ராகத்தோட!
பூரி குமாரி : எல்லாம் என் கெரகம்..உங்கள நம்பி சொன்னேன் பாருங்க..
கோல்கப்பா : ஏண்டி இந்த கள்ள மௌனம்? வாய தொறந்து சொல்லேன், யாரு இந்த தடவை ஆட்சி அமைப்பாங்கன்னு?
பூரி குமாரி : கடைசி நிமிஷம் வரை காட்சிகள் மாறும் கோல், பொறுமையா இருங்க.
கோல்கப்பா : ரெண்டு பார்ட்டிங்க ஏற்கனவே பவர்ல இருந்திருக்காங்க..இப்போ புதுசா ஒருத்தர் வந்து குதிச்சிருக்கார். களம் எப்புடி இருக்கு குமாரி?
பூரி குமாரி : ரெண்டு பார்ட்டிங்களும் களத்தை வளமா வெச்சிகிட்டாங்க..புதியவர் களத்தை மொத்தமா வளைச்சி வெச்சிக்கிட்டாரு …
கோல்கப்பா : ஹிஹிஹி, அருமையா ஒன் லைன்ல முடிச்சிட்ட..அட்லீஸ்ட் குத்துமதிப்பா ஒரு நம்பரை சொல்லேண்டி எல்லாருக்கும்?
பூரி குமாரி : ஏங்க எலக்சன் ரிசல்ட் என்ன சொத்து மதிப்பாங்க? குத்துமதிப்பா சொல்றதுக்கு?
கோல்கப்பா : குத்துங்க எசமானியம்மா, குத்துங்க..உன் பார்ட்னர்ன்னு கூட பாக்காம இப்படி கருணையே இல்லாமா எப்புடிடீ உன்னால சொல்ல முடியுது?
பூரி குமாரி : ஹிஹிஹி..இனிமே வாய் சும்மாதானே இருக்குன்னு எதுனா பேசுவீங்க?
கோல்கப்பா :வாய்ப்பில்லை ராஜா..வாய்ப்பே இல்ல! ஹா, வாய்ப்புன்னதும் தான் ஞாபகம் வருது? இந்த முறை எந்த கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்குன்னு நினைக்குற?
பூரி குமாரி : திருந்தவே மாட்டீங்களா கோல், நீங்க?
கோல்கப்பா : புதியவர் Just Entering Election..எவ்ளோ % வாங்குவாரு?
பூரி குமாரி : புதியவர் JEEல எவ்ளோ % வாங்குவாருன்னு தெரியல. ஆனா வாக்கு war நிச்சயம்..
கோல்கப்பா : அடியேய், என்னடி பெரும் புள்ளிய பள்ளி கூட பையன் கணக்கா சொல்லிப்புட்ட!
பூரி குமாரி : வேற என்னங்க சொல்ல முடியும்? இவர் எதிர்க்கிறது IIM & AIMS கோஷ்டி..
கோல்கப்பா : ரொம்ப படிச்சவங்களாடி?
பூரி குமாரி : இல்ல, IIMன்னா இலாக்கா இல்லாம மந்திரிய (Ilaakka Illaama Mandhiri) வெச்சிருந்த கோஷ்டி!
கோல்கப்பா : Oh My God..அப்போ AIMSம்ன்னாஆஆ?
பூரி குமாரி : மனச தேத்திக்குறீங்களா? சொல்றேன்..
கோல்கப்பா (நெஞ்சை பிடித்தபடியே) : மொத்தமா முடிச்சிவுட்ரு..கொஞ்ச நஞ்சம் ஏன் மிச்சம் வெச்சிருக்க?
பூரி குமாரி : ஹிஹிஹி..AIMSன்னா அம்மா இதயத்தின் மனசாட்சியாக (Amma Idhayaththin Mana Saatchiyaaga) இருக்குற கோஷ்டி..
கோல்கப்பா : ஹாஹாஹா..யாரு நல்ல ஸ்கோரு வாங்குறாங்களோ இல்லியோ..என் ஸ்வீட்டி, நீ ஸ்கோர் பண்ணிட்ட போ! மக்களே, இந்த ஜோக் நல்லா இருக்கும்னு எங்களுக்கே தெரியும்..அதனால முடிஞ்சவரைக்கும் உங்க கோஷ்டிகளுக்கு ஷேர் பண்ணுங்க. Bye!

மக்களே, இந்த ஷார்ட்ஸை பார்த்துட்டு நம்ம ஜோக்கை படிச்சி என்ஜாய் பண்ணுங்க..
தொண்டர் 1 : இல்ல டாக்டர், எங்க ஆட்சியை பொழைக்க வெக்க முடியாதுன்றது எங்களுக்கு புரியுது!! உங்க கிட்ட இருக்குற ஒசத்தியான கரன்ஸியெல்லாம் மாநிலம் முழுக்க எறக்கி, பணத்தை குடுத்து ஓட்ட கீட்ட வாங்கி, ஒரு ஓட்டு கூட சிந்தாம செதராம ஆட்சிக்கு குத்தி, நான் சொல்றது என்னென்னா, நீங்க நல்லா தெளிவா கேட்டுக்குங்க…ஒரு அஞ்சு வருஷம் மட்டும்…எங்க ஆட்சியை தக்க வெக்க முடியுமா? உங்க ஆஸ்பத்திரிக்கு நெறய கிட்னி கிடைக்கும்…என்ன சொல்றீங்க? என்ன?
டாக்டர் முறைக்கிறார்…
தொண்டர் 2 : டேய், கூறுகெட்ட தனமா பேசாதடா..டாக்டர் இம்புட்டு நேரம் அது பொழைக்காதுன்னு தான சொன்னாரு, கம்முனு இருடா…
தொண்டர் 2 (டாக்டரை பார்த்து) : டாக்டர் ,டாக்டர்..இதெல்லாம் எங்க ஆட்சியோட மூளைக்கு எடுத்த போட்டா …
டாக்டர் : ம்ம்ம்..
தொண்டர் 2 : இதுல ஏதாவது எடம் கிடம் தெரிய வாய்ப்பிருக்கா..??
டாக்டர் கோபமாக முறைக்கிறார்.
தொண்டர் 2 (சோகமாக) : தெரியலையா டாக்டர்..?
டாக்டர் (நர்ஸை பார்த்து சொல்கிறார்) : டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க!!!







பூரி குமாரி : ஏமிரா..மோக்ரா? என்ன கோல்? தலீவரு மல்லிப்பூ கையோட ஓட்டு போட போயிருக்காரு ?
கோல்கப்பா :ஹிஹிஹி…ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல குமாரி!
பூரி குமாரி : எலக்சனுக்கு மொதல் நாள் அழுகிறத தொடச்சிக்க கர்சீப்பூ, அடுத்த நாள் மல்லிப்பூ…மனுஷன் ட்ரெண்டிங்கிலயே இருக்காரு!
கோல்கப்பா : அடிப்பாவி, அதையும் பாத்துட்டியா…
பூரி குமாரி : தொகுதியில் தத்தளிப்பூ..நெஞ்சிலே பதைபதைப்பூ..
கையிலே என்ன பூ..மல்லிப்பூ…மல்லிப்பூ..
கோல்கப்பா : அள்ளுறியே தங்கம்..அள்ளுறியே..கால்குலேட்டர் தலீவருக்கு இந்த பாட்ட எப்புடி கனெக்ட் பண்ண?
பூரி குமாரி : அவருக்கு ஆப்போணண்டு கேண்டிடேட் யாரு?
கோல்கப்பா : நம்ம அக்காவோட மாமா…சுந்தர் சி…
பூரி குமாரி : ஹிஹிஹிஹி …சுந்தர் சி க்கு பக்க துணை குஷ்பூ, நம்ம தலீவருக்கு பக்க துணை மல்லிப்பூ….
கோல்கப்பா : அடியேய், அவரு பாரின்ல படிச்ச மனுஷன்டி..அவரு பிரைனு வேற லெவல்…
பூரி குமாரி : என்ன கோல், முட்டு பலமா குடுக்குறீங்க?
கோல்கப்பா : அவரு திராவிட வார்ப்பூ, கொள்கை கூட்ட வளர்ப்பூடி…..
பூரி குமாரி : மல்லிப்பூ மேட்டருக்கு பொருந்தலையே கோல்?
கோல்கப்பா : துளசி வாசம் மாறினாலும் மாறும், நம்ம தவசி வாக்கு மாற மாட்டான்னு ஒரு பன்ச் தெரியும்ல..அத மாதிரி எதையோ சொல்ல ட்ரை பண்றாருன்னு நெனைக்கிறேன்..
பூரி குமாரி : புரியுற மாதிரி சொல்லுங்க கோல்..
கோல்கப்பா : தலீவரு சொல்ல வர்ரதென்னன்னா, மல்லிப்பூ வெள்ளை கலர் மாறினாலும் மாறும், ஆனா என் வெள்ளை மனம் மாறாதுன்னு சொல்ல வரார்..
பூரி குமாரி : ஹிஹிஹி…உங்க டீகோடிங்க்ல தீய வெக்க!
கோல்கப்பா (முறைக்கிறார்) : அப்போ நீ சொல்லு? என்னவா இருக்கும்?
பூரி குமாரி : அவரு கட்சி பாஜகவோட கள்ள கூட்டணிலே இருக்குன்னு ஒரு பேச்சு அடிபடுதுல்ல?
கோல்கப்பா : அடியா?? மிதியோ மிதின்னு மிதிபடுது?
பூரி குமாரி : ரையிட்டு..அதேதான்.. நாங்க தாமரை கூட இல்ல…மல்லிப்பூ கூட இருக்கோம்னு சொல்ல வரார்….
கோல்கப்பா : ஹிஹிஹி…ஆத்தீ…இது வேற ரகமால்ல இருக்கு!! பவழ விழா கட்சிக்கு வந்த சோதனைக்கு, இதை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வேற என்ன இருக்க முடியும்?
பூரி குமாரி : By all means, வெற்றிக்கு Jasmine தான் துணைன்னு நம்புறார் போல தலீவர்..
கோல்கப்பா : GST பத்தி zestyயா பேசி பொளந்து கட்டுனவர, இன்னிக்கு கொசுவத்தி கேசு நாமெல்லாம் பேசுற நிலைமைக்கு வந்துட்டாரே குமாரி …அதான் வருத்தமா இருக்கு…
பூரி குமாரி : உங்க வருத்தம் இருக்கட்டும்…அவருக்கு மகளிர் சார்பா நா ஒரு செய்தி சொல்ல நினைக்குறேன்…
கோல்கப்பா : சொல்லு..சொல்லு…
பூரி குமாரி : “தகுதி வாய்ந்த” வேட்பாளரை மக்கள் என்னிக்குமே கை விட மாட்டாங்க தலீவரே..ஓட்டு கண்டிப்பா போடுவாங்க..ஆனா எந்த எலக்சன்லங்கிறதுதான் மேட்டரே!!
கோல்கப்பா : Golden words குமாரி…”தகுதி வாய்ந்த” இல்லத்தரசிங்கிற பொன்மொழிக்கு சொந்தக்காரர்…”தருவோம்னு சொன்னோம், ஆனா எப்போ தருவோம்னு சொன்னோமா”? அப்படீன்னு பகுமானமா வந்த பதிலுக்கு சொந்தக்காரர்…அவர் பொருளையே எடுத்து அவரையே போடுறதுங்குறது இது தான்..
பூரி குமாரி : டபுள் வாட்ச் கட்டி பேமஸ் ஆன மனுஷன், இன்னிக்கு டவுட்டா வாட்ச் பண்றார்ர்ர்..
கோல்கப்பா :ஹிஹிஹி..போதும்டி..என்னால முடியல…மக்களே கார்ட்டூனா பாத்து கடுப்பாய் இருப்பீங்க ஒரு மாசமா..ஜோக்கை என்ஜாய் பண்ணுங்க..சிரிங்க..புடிச்சிருந்தா, உங்க சங்கத்து ஆளுங்களுக்கு ஷேர் பண்ணுங்க..Bye..




பூரி குமாரி : என்னங்க நம்ம கடைல கூட்டமே வரல, காத்து வாங்கிட்டு இருக்கு? ஏதாவது ப்ரோமோஷன் பண்ணலாம்னு யோசிக்குறேன். நல்ல ஐடியாவா சொல்லுங்க கோல்!
(கோல்கப்பா யோசிக்கிறார்)

கோல்கப்பா : பெரிய கட்சிங்களே கூட்டணி முடிவு ஆகாம காத்து வாங்கிட்டு இருக்கு! நாம எம்மாத்திரம்?
பூரி குமாரி : அவங்களும் நாமளும் ஒண்ணாங்கா? அவங்க சீட்டிங் பார்ட்டிங்க! ஆனா, நாம சாட் பார்ட்டிங்க!!
(கோல்கப்பா போனை பார்த்து விட்டு ஆர்வமாகிறார்)
கோல்கப்பா : ஆஹா, ஒண்ணு சேந்துட்டாங்கம்மா! ஒண்ணு சேந்துட்டாங்கம்மா!!
பூரி குமாரி : யார் யாருங்க? காட்டுங்க பாப்போம்.
கோல்கப்பா : அம்மா வளர்த்த பிள்ளைகள்தான்மா!

பூரி குமாரி : அட ஆமா, இவ்வளவு நாள் மக்கர் பண்ண குக்கர், இப்போ குதூகலமா இருக்காரு போல…
கோல்கப்பா : “விட்டுக் கொடுப்பவர்கள், கெட்டு போவதில்லை”ன்னு மகராசன் சொல்லியிருக்கார்..
பூரி குமாரி : வாவ், செம ஸ்டேட்மென்ட் கோல்!
கோல்கப்பா : சரி வா, ரேபிட் பயர் கேள்வி கேக்குறேன்..மத்த கட்சிகளுக்கும் இதே மாதிரி ஒன் லைனர் டக்கு டக்குனு சொல்லு..மொதல்ல ட்ரம்ஸ் பார்ட்டிக்கு சொல்லு?
பூரி குமாரி : நோட்டுக் கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை”
கோல்கப்பா : ஹிஹிஹி, you nailed it!! ஆளும் கட்சிக்கு சொல்லு.
பூரி குமாரி : கிட்டு (kit) கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை! பொங்கல் கிட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை!
கோல்கப்பா : நன்று, நம்ம மய்ய மேனுக்கு சொல்லுமா..
பூரி குமாரி : (ராஜ்யசபா) சீட்டு கொடுப்பவர்கள், கெட்டு போவதில்லை!
கோல்கப்பா : அருமை..ஆளும் கட்சி கூட்டணிகளுக்கு ஒரு பன்ச் சொல்லு டார்லிங்..
பூரி குமாரி : முட்டுக் கொடுப்பவர்கள், கெட்டு போவதில்லை!
கோல்கப்பா : கலக்குறியே, நம்ம ஸ்டார்ட்டப் கட்சிக்கு சொல்லு..
பூரி குமாரி : சீட்டி (விசில்) அடிப்பவர்கள், கெட்டு போவதில்லை!
கோல்கப்பா : அட்டகாசம். சரி இவங்களுக்கெல்லாம் மக்கள் என்ன சொல்ல போறாங்க?
பூரி குமாரி : கெட்டு போனவர்களுக்கு, ஓட்டு போடுவதில்லை!!
கோல்கப்பா : என் வெல்ல கட்டி, ஊர் அக்கபோருக்கெல்லாம் சொல்லிட்ட! நம்ம கடைக்கு என்ன பேனர் வெக்கலாம் சொல்லு?
பூரி குமாரி : ட்ரீட்டு கொடுப்பவர்கள், கெட்டு போவதில்லை!!!

கோல்கப்பா : அருமை! அருமை!! மக்களே அவங்க கல்லா கட்டுறதுக்கு கூட்டணில ஜெல்லாய்ட்டோம்னு சொல்வாங்க…நல்ல ட்ரீட்மெண்டா அவங்களுக்கு குடுங்க!
பூரி குமாரி : ஆமாங்க, ட்ரீட்மெண்ட் கொடுப்பவர்கள், கேட்டு போவதில்லை!!! Bye.
