உருளைக்கிழங்கு : ப்ரோ, உங்கள வெச்சு நான் “பூரி கடை”னு படம் எடுக்கலாம்னு இருக்கேன்! கோல்கப்பா : ஏன்? “இட்லி கடை” னு ஒரு படம் வர போகுதே அதனாலயா?உருளைக்கிழங்கு : ஆமாம்பா! பூரிகுமாரி : கிட்னி திருட்ட பத்தி பேச சொன்னா, இந்த மீடியால இட்லி கடை, சட்னி கடைனு பேசிவிட்டு இருக்காங்க! இதுல நீ வேறயா? கோல்கப்பா : அது கிட்னி திருட்டு இல்ல, முறைகேடு! கரெக்ட்டா சொல்லுமா! பூரிகுமாரி : எல்லாம் நம்ம சாபக்கேடு! கோல்கப்பா : செல்ல குட்டி பொட்டேட்டோ, நீ ஆசை படலாம், ஆனா நம்மால முடியாது. உருளைக்கிழங்கு : ஏன் ப்ரோ? கோல்கப்பா : படமெல்லாம் கிழங்கு உன்னால எடுக்க முடியாது! கழகத்தோட ஆளுங்க தான் எடுக்க முடியும்!
கோல்கப்பா: பிரியாணி பட்டைல என் பர்த் டே நம்பரை எழுதி என்ன சர்ப்ரைஸ் பண்ணிட்ட! யூ ஆர் மை ஸ்வீட்டி!
பூரி குமாரி : இல்லீங்க, இது மணி அட்ராக்ட் பண்ற நம்பர்னு ஒரு அக்கா சொல்லுச்சு. அதான் எழுதி வெச்சேன், ஆனா தெரியாம பிரியாணி பண்ணும்போது அத போட்டுட்டேன்!
கோல்கப்பா: அடிப்பாவி, நா உன்னோட மணி பேங்க்னு இன்டேரெக்ட்டா சொல்றியா?
பூரி குமாரி : இல்லேங்க, டேரெக்ட்டாவா சொல்றேன், எனக்கு கவிதை எழுத சொன்னா பன் பட்டர்காரிக்கு எழுதுறீங்க! உங்கள லவ் பண்றவங்கள, நீங்க மதிக்கலேன்னா என்ன ஆகும்னு சொல்றேன் கேட்டுக்குங்க