கோல்கப்பா : மாதாஜி, இப்போது அதிரச யோகம் ஆரம்பித்திருக்கிறதாமே? அதை பற்றி விளக்குங்கள்.
மாதாஜி : கோல்கப்பா, அது அதிரச யோகமில்லை, அதிசார யோகம்! நீ இன்னும் தீபாவளி மூடிலிருந்து வெளியே வரவில்லையா?
கோல்கப்பா : ஹிஹிஹி, மன்னித்துக் கொள்ளுங்கள் மாதாஜி. அடியேனுக்கு அறிவு அவ்வளவு தான்!
மாதாஜி : பரவாயில்லை, உன் சந்தேகம் என்ன கேள்?
கோல்கப்பா : ஆளும் தரப்புக்கு அதிசார யோகம் எப்படி இருக்கிறது மாதாஜி?
மாதாஜி : அதிசார யோகம் என்ற வார்த்தையை கூட அவர்கள் காதால் கேட்க விரும்ப மாட்டார்கள்!
கோல்கப்பா : ஏன் மாதாஜி?
மாதாஜி : அதிசாரத்தில் “சார்” இருக்கிறது அல்லவா? அதனால் தான்!
கோல்கப்பா : ஹிஹிஹி, மாதாஜி பலமான மேட்டராக சொல்கிறீர்கள்? இன்னும் சற்று விளக்கவும் ப்ளீஸ்.
மாதாஜி கண் மூடி யோசிக்கிறார்.
மாதாஜி : ஒன்றா, இரண்டு கோல்கப்பா? அவர்களை உலுக்கிய “சார்” நிகழ்வுகளை வரிசையாக பார்ப்போம். நம் மாநில தலை நகரில் நடந்த அவல நிகழ்வு, அதை தொடர்ந்து நடந்த “யார் அந்த சார்?” என்ற போராட்டம்!
கோல்கப்பா : ஆமாம் மாதாஜி, என்னைக்கும் அந்த போஸ்டர் வாசகம் நினைவிருக்கிறது.
மாதாஜி : அடுத்ததாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்ட அனுமதி தந்த விவகாரம்!
கோல்கப்பா : ஹா, அந்த ராம்சார் லேண்டு பிரச்சினை தானே?
மாதாஜி : ஆமாம் கோல்கப்பா, சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பான விஷயத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கவனத்தில் எடுத்து, மாநிலத்தில் உள்ள சதுப்பு நிலங்களை ஆய்வு செய்து அடையாளம் காணும்படி உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் கட்டடம் கட்ட முறைகேடாக அனுமதி தந்த புகார் இப்போது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.
கோல்கப்பா : இது சென்னையின் மழை வெள்ள மேலாண்மையை மேலும் பாதிக்குமே மாதாஜி!
மாதாஜி : மண்டையில ஓட்ட இருக்கே நமக்கே தெரியுது! அதிகாரிகளுக்கு தெரியாதா?
கோல்கப்பா : அடுத்த சார் மேட்டர் என்ன மாதாஜி?
மாதாஜி : தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR)!
கோல்கப்பா : ஜனநாயகத்தை காப்பாத்தணும்னு சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்காங்க போல?
கோல்கப்பா : அற்புதம்! அமர்க்களம்! சரி நம்ம பிரதான எதிர் கட்சிக்கு அதிசார யோகம் எப்படி இருக்கு மாதாஜி?
மாதாஜி : புது கட்சி கூட்டணிக்கு வரும்னு சொன்னாங்க. பழம் நழுவி பால்ல விழற மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தினாங்க. ஆனா புது கட்சி தலைவர் சரிப்பட்டு வரல, அதனால அவங்க நிலைமை இதுதான்!
கோல்கப்பா : ஹஹிஹி மாதாஜி, உங்க செலெக்க்ஷன் அட்டகாசமா இருக்கு. சரி நம்ம புது தலைவருக்கு நேரம் எப்படி இருக்கு?
மாதாஜி : நேரம் நிச்சயம் சரியில்லை! ஆனா அவர் மன உறுதியோட தொடர்ந்து செயல் பட்டு, come back குடுத்தாருன்னா நிலவரம் மாறலாம். நிலைகுலையாம உண்மையா போராடுனார்னா இந்த சேர் கெடைக்கலாம்!
கோல்கப்பா : மாதாஜி, கட்சிகளை பத்தி சொல்லிடீங்க. அரசாங்கத்துக்கு எப்படி இருக்கு?
மாதாஜி : பெருங்காயப்பட்டு இருக்குற கஜானாவுக்கு சாராய பணத்தை பாய்ச்சி ஓட்டிக்கிட்டு இருக்காங்க!
கோல்கப்பா : நன்றி மாதாஜி!
மாதாஜி : மக்களே, இதோடு தீபாவளி சிறப்பு மலர் நிறைவடைகிறது!
கோல்கப்பா : செய்தி ஊடகங்களை மட்டும் கண்மூடித்தனமா பாலோ பண்ணி இப்போ நடக்குற பாலிடிக்ச மக்கள் புரிஞ்சிக்க கூடாது.
பூரி குமாரி : என்னங்க சொல்றீங்க?
கோல்கப்பா : ஆமாடி, பொது வெளியில் வரும் செய்திகள் அனைத்தும், நமக்கு உண்மையை நேரடியாக சொல்லாது. நாம தான் ஒவ்வொரு நிகழ்வையும் பகுத்து பார்த்து முடிவெடுக்கணும்.
பூரி குமாரி : தெளிவா சொல்லுங்க கோல்.
கோல்கப்பா : சொல்றேன் கேளு, அரசியல்வாதிகளின் ஒவ்வொரு வார்த்தையையும், நகர்வையும், செயலையும் மக்கள் நுட்பமாக கவனிக்கணும். நடப்பு விபரங்களை நிதானித்து ஆராய்ந்தால் மட்டுமே, உண்மையை புரிந்து கொண்டு அறிவார்ந்த முடிவுகளை எடுக்க முடியும்.
பூரி குமாரி : ஏங்க, இவ்ளோ சீரியஸா பேசுறீங்க? மக்களுக்கு புரியற மாதிரி ஒரு எக்ஸாம்பிளோட சொல்லுங்க!
கோல்கப்பா : இப்போ பாரு, ஆளும் கட்சி கடந்த காலங்கள்ல ஜெயிக்க குறிப்பிட்ட “மூணு எழுத்து” உதவி இருக்கு!
பூரி குமாரி : அது என்னங்க மூணு எழுத்து?
கோல்கப்பா : TVI – டெலிவிஷன் இலவசம், தகுதி வாய்ந்த இல்லத்தரசி என நல திட்டங்கள்( TeleVision Ilavasam, Thaguthi Vaindha Illatharasi)
பூரி குமாரி : 2026ல “TVI”னா என்னங்க?
கோல்கப்பா : வேறென்ன? தலைமைக்கு வருகிறார் இளவரசர் தான்! (Thalaimaikku Varugiraar Ilavarasar)
தொலைக்காட்சி விவாதங்களெல்லாம் இரைச்சலே! தீய வஞ்சகர்களுக்கு இரையாகாதீர்கள்!
துளிர்த்து வளர்பவர்களை இருட்டடிப்பார்கள்! தனிமனித விமர்சனங்களில் இங்கிதமிருக்காது!
தொடர் ஓட்டத்தில் இளைப்பாறுதலில்லை! தந்திரக்காரர்களை வேரறுக்க இயங்குங்கள்!!
(Theri Vaarungal Ilaignare
Thelindhu Vaarungal Irumbaaga
Tholaikaatchi Vivaadhangalellam Iraichchale
Theeya Vanjagargalukku Iraiyaagadheergal
Thulirthu Varubavargalai Iruttadipaargal
Thanimanidha Vimarsanangalil Inghithamirukkaadhu
Thodar Vottathil Ilaipaarudhalillai
Thandhirakaaragalai Verarukka Iyangungal)
கோல்கப்பா : அட அட அடடா! கலக்குறியே கண்ணம்மா!
பூரி குமாரி : பாராட்டு இருக்கட்டும்! இன்னைக்காவது எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க!
கோல்கப்பா : நானே எழுதுனா உன் கிட்ட உதை தான் வாங்குறேன். அதனால பாரதியார் எழுதுனதை உனக்கு டெடிகேட் பண்றேன்!
நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா…
பூரி குமாரி : அருமை! அருமை! அருமைங்க!
கோல்கப்பா : மக்களே! நமக்கும் “தீதும் நன்றும் பிறர் தர வாரா”! அதனால “Twisted Narrative Propaganda TV” செய்திகளை மட்டும் நம்பி தேர்தல்ல ஓட்டு போடாதீங்க! Bye!
பூரி குமாரி : அட்டகாசமான பரிசுங்க! கூட்டணி பேச்சுவார்த்தை இவங்க எப்படி நடத்துவாங்கன்னு மக்கள் நல்லா புரிஞ்சு வெச்சிருக்காங்க! சரி, நம்ம டார்ச் லைட் மேனுக்கு என்ன இருக்கு?
கோல்கப்பா : அவருக்கு ஒரு சேஞ்சுக்கு ஜனங்க கேம் கார்டு குடுத்திருக்காங்க!
பூரி குமாரி : ஹய்யோ, கோல்கப்பா! ஒரு செல் அமீபா மாதிரி இப்போ இருக்காரு. அப்புறம், அவரோட நிலைப்பாட்டை மாத்திகிட்டதால இந்த பரிசுக்கு சொந்தக்காரர் ஆகிட்டாரு போல?
கோல்கப்பா : கரெக்ட் குமாரி!
பூரி குமாரி : ஒரு முக்கியமான தலைவரை மறந்துட்டோமே? நம்ம கடல்மான் சாருக்கு என்ன ஐட்டம்?
கோல்கப்பா : அவருக்கு, ஒரு ஐட்டம் இல்ல, ரெண்டு பரிசு தராங்க மக்கள்.
பூரி குமாரி : ஆஹா, அருமையான பொருள். இன்னொன்னு என்ன?
கோல்கப்பா : கோல்கப்பா : இது ரெண்டாவது ஐட்டம்.
பூரி குமாரி : அடடா, அடடா! அற்புதம்.நம்ம புது கட்சி தலைவருக்கு என்ன பரிசு தந்திருக்காங்க?
கோல்கப்பா : அவருக்கும் டபுள் தமாக்கா! ரெண்டு ஐட்டம் இருக்கு. இந்த கிப்ட ஆளுங்கட்சி குடுக்குது, ரெண்டாவதை மக்கள் குடுக்கறாங்க!
பூரி குமாரி : வாவ், மாசா இருக்கே ஜனங்க செலெக்ஷன்! இவ்வளவு தலைவர்களுக்கு பரிசு தந்த ஜனங்க அந்த கட்சிகளுக்காக பேசும் வாடகை வாய்களுக்கு என்ன கிப்ட தந்திருக்காங்க?
கோல்கப்பா : சரியா சொன்ன குமாரி! நெலமை இப்படி இருக்க, இவங்க கூட்டணி வாய்க்கா வரப்பு தகறார சரி கட்ட இந்த அயிட்டங்களை தான் எறக்கியிருக்காங்க.
பூரி குமாரி : ஸ்பிரிட்ல அடிச்ச அமவுண்ட கொஞ்சம் பாச்சுன்னா, டீம் ஸ்பிரிட் தானா பொங்க போகுது, நெக்ஸ்ட் ப்ளீஸ்!
பூரி குமாரி : கூட்டணி கூடாரத்த முட்டு குடுக்க சொல்லி கெஞ்சுறாங்க? கரெக்ட்டா கோல்?
பூரி குமாரி : நம்ம ட்ரைட் அண்ட் டெஸ்டட் கூட்டணி, சாலிடா வின் பண்ணிடலாம்னு சொல்ற மெசேஜ்தான இது? இருமல் மருந்த டெஸ்ட் பண்ண துப்பில்ல? ஓல்ட் டீம், கோல்ட் டீமுன்னு பெருமை வேற!
கோல்கப்பா : லிஸ்ட்ல இதான் கடைசி அயிட்டம். இத பத்தி உன் கருத்து என்ன?
பூரி குமாரி : எலெக்சன் வரை தீயா நாள் பூரா வேல பாருங்க. எங்கெங்கே நம்ம பொழப்பு நாறுதோ, அங்க போய் நம்ம ஆட்சி புகழ பாடுங்க. சரியா?
கோல்கப்பா : பாஸாயிட்ட போ!
பூரி குமாரி : இவங்க ஆட்சிக்கு வர்றதுக்கு “Bare Necessities” இதெல்லாம்னு, நெஞ்ச தொறந்து சொல்லி இருக்காங்க!
கோல்கப்பா : பாய்ண்ட புடிச்சுட்ட! ஆளும் தரப்புக்கு கூட்டணிக்காரங்க கொடுத்த ரிட்டர்ன் கிப்ட் பாக்குறியா? மொத அயிட்டம் இதான்.
பூரி குமாரி : மனசு ஊசல்ல இருக்கு! ட்விஸ்ட்டை எதிர்பாருங்க, எப்போ வேணா இந்த கூட்டணிக்கு பால் ஊத்திட்டு போய்டுவோம்னு லீடு குடுக்குறாங்க, நெக்ஸ்ட் ப்ளீஸ்!
பூரி குமாரி : பவர் ஷேர் கேட்டா ஏன் கசக்குதுன்னு கொமட்டுலயே குத்துறாங்க!
பூரி குமாரி : நாங்க எல்லாம் மனசு வருத்தத்துல இருக்கோம். எங்கள பகைச்சிகிட்டு தேர்தலை சந்திச்சு தோத்தீங்கண்ணா, இந்த கார்டு கேம் தான் அடுத்த அஞ்சு வருஷத்துக்கு வெளையாடுவீங்கன்னு பங்கமா சொல்றாங்க கோல்!
கோல்கப்பா : சரி இப்போ, அந்த பக்கம் மறைமுக கூட்டணிக்கு ஆளும் தரப்பு டெல்லிக்கு என்ன அனுப்பி இருக்காங்கனு பாரு!
பூரி குமாரி : நச்சுனு அனுப்பி இருக்காங்க கோல்கப்பா! அதுக்கு டெல்லி சைட்லேர்ந்து ஆசீர்வாதம் பண்ணி என்ன தந்திருக்காங்க?
பூரி குமாரி : ஹிஹிஹ்ஹி, நோ கமெண்ட்ஸ் கோல்கப்பா, நெக்ஸ்ட் என்ன?
பூரி குமாரி : ஹாஹாஹா, நைஸ் ஒர்க் கோல் டார்லிங்! மக்களே அடுத்த பதிவுல சந்திக்கலாம். Bye!
பூரிகுமாரி : ஏங்க, கமலாலயத்துல அவங்க முக்கிய தலைவர்களுக்கு என்ன தீபாவளி கிப்ட் குடுத்தாங்கன்னு மக்களுக்கு சொல்லலாமா?
கோல்கப்பா : இந்த வருஷம் அங்க களை கட்டியிருக்கு. வெறும் ஸ்வீட் மட்டும் இல்ல, மற்ற மாடர்ன் ஐட்டம்ஸும் குடுத்திருக்காங்க.
பூரிகுமாரி : ஆமாங்க, முதலில் மரியாதைக்கு உரிய விபி அவர்களுக்கு இந்த இனிப்பும் வாழ்த்தும்!
கோல்கப்பா : அடுத்ததாக, மேதகு முன்னாள் ஆளுநருக்கு இந்த கிப்ட் ஏன்னு சொல்லு பாக்கலாம்?
பூரிகுமாரி : அவங்க மருத்துவராகவும், அரசியல்வாதியாகவும் சாதனை புரிந்த தலைவர்.
கோல்கப்பா : அருமையாக சொன்னாய் குமாரி! அவர் தன்னுடைய நிர்வாக திறனை இரு மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்த போது நிரூபித்திருக்கிறார்! “தாமரை மலர்ந்தே தீரும்” என்ற சொற்றொடரை சாதாரண மனிதர்களிடம் கொண்டு சேர்த்தவர்.
கோல்கப்பா : அடுத்ததாக, நம்ம டார்ச் லைட் தலைவரை தோற்கடித்து, மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற தலைவிக்கு இது தான் தீபாவளி கிப்ட்!
பூரிகுமாரி : இது சரியான பரிசுங்க! தேசிய அளவில் முக்கிய பொறுப்பை அடைவது அவ்வளவு சாதாரணமான விஷயமில்லை!
கோல்கப்பா : அடுத்ததாக, முன்னாள் தலைவருக்கு கிடைத்த கிப்ட் இதோ!
பூரிகுமாரி : செம செம, இது “டெய்லி ஆப்ஜெக்ட்” பிராண்டு தானே? விளக்கமே தேவை இல்லை! கோல்கப்பா, நெக்ஸ்ட் ப்ளீஸ்!
கோல்கப்பா : கடைசியாக, நம்ம தற்போதய தலைவருக்கு இந்த சாக்லேட் ஹாம்பர்! பழைய நட்சத்திரங்கள் இன்னும் ஒளிரலாம், ஆனால் இவருடைய ஒளியை தவிர்க்க முடியாது! எல்லா கிரகணமும் கடந்து போகும் நேரம் வரும்!
அந்த வாரம் அமைதியாக கழிந்தது. ராஜு பெரும்பாலும் சுரத்தே இல்லாமல் இருந்தான்.
அவன் செய்த தவறு அவனுக்கே உறுத்தலாக இருந்தது. சுதாவை நேருக்கு நேராய் பார்ப்பதையே தவிர்த்தான்.
ஒரு நாள் அவன் ஆபிசிலிருந்து வந்ததும் மணி சார் போன் வந்தது. அவரின் இருபதாவது கல்யாண நாளுக்கான அழைப்பு.
வரதாவும் மணி சாரும் ராஜுவிடம் பேசி விட்டு, சுதாவிடமும் பேசி அழைப்பு விடுத்தார்கள்.
தாதிபத்ரியில் இருக்கும் புக்கா ராமலிங்கேசுவர ஸ்வாமி கோவிலில் வரும் வெள்ளியன்று காலை ஒன்பது மணிக்கு சிறப்பு பூஜை என வரதா விவரம் சொன்னார்.
அவள் சுருக்கமாக நடந்த விஷயங்களை வரதாவிடம் சொன்னாள்.
“சுதா, இது இயல்பானது. குறிப்பாக அப்பாக்களுக்கு இருக்கும் ஒரு குணம். அவர்களால் அவ்வளவு எளிதாக தங்கள் குழந்தையின் நிலையை ஜீரணம் செய்ய முடியாது. அவர்களுக்கும் பாசம் இருக்கும். ஆனால் அதை மீறி ஒரு கையாலாகாத உணர்வு அவர்களுக்கு மேலோங்கி இருக்கும். அது அவர்களை சில சமயம் ஒதுங்கி போகும் முடிவை எடுக்க வைக்கும். அதனால் நீ இதை கவனமாக கையாண்டது சரிதான்” என சொன்னார் வரதா.
“நா அவர்கிட்ட சில சமயங்கள்ல கடுமையா பேச வேண்டியிருந்தது வரதா. இப்போ அமைதியா அவர் கெளம்பி போறத வேடிக்கை பார்த்துட்டு, அப்புறம் தனியா பவாவை கவனிக்குறேன்னு சுய பச்சாதாபத்துல இருக்குறது சரியில்லேன்னு தோணுச்சு. நீங்க, ஆண்ட்ரியா எல்லாரும் கஷ்டமான நேரத்துல எனக்கு துணையா இருந்தீங்க. மணி சார் அவர்கிட்டயும் பேசி இருக்கார். ரொம்ப தேங்க்ஸ் வரதா. நாங்க நிச்சயமாக பூஜைக்கு வருகிறோம்” என சொல்லி போனை வைத்தாள் சுதா.
ராமலிங்கேசுவர ஸ்வாமி சுதாவுக்கு மிகவும் பிடித்தமான கோவில். சுயம்பு வடிவாக சிவ பெருமான் பெண்ணா நதி கரையில் அருள் பாலிக்கும் திருத்தலம். விஜயநகர பேரரசர் காலத்து பழமையான கோவில்.
வெள்ளிகிழமையன்று காலை கோவிலுக்கு போய் பூஜையில் கலந்துகொண்டு பிறகு மண்டபத்தில் உட்கார்ந்தார்கள். பவா தூண்களை பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். விஷ்ணு சன்னதியின் முன்னால் இருந்த தூண்களை ஒரு பக்தர் தட்டி விட மெதுவான ஓசை கேட்டது. பவாவுக்கும் அது கேட்டிருக்க வேண்டும். சிரித்தபடியே கண்ணில் மின்னல் தெறிக்க திரும்பி பார்த்தது. அவர் மெதுவாய் ஒவ்வொரு தூணாய் தட்ட அதன் பார்வையில் சந்தோஷம் தெரிந்தது.
ராஜுவுக்கு கண்களில் நீர் பெருக்கெடுக்க ஓடி போய் பவாவை அள்ளிக் கொண்டான். சுதாவுக்கு கண்ணீர் கட்டு படுத்தமுடியவில்லை.
வரதா வந்து அந்த தூண்களின் சிறப்பம்சங்களை விளக்கினார். இயரிங் எயிட் உதவியுடன் இருந்தாலும் அந்த மெல்லிய நுட்பமான ஓசையை அவளால் கேட்க இயன்றது சுதாவுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது.
ஒரு மணி நேரம் பொறுமையாக கோவிலை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் கல் மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள்.
“சுதா, எனக்கு மனசு தெளிஞ்சுடுச்சி, சாரி, நா உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்” என மெதுவாய் சொன்னான் ராஜு.
“நீ தெளிவா இருந்தா எனக்கு அது போதும் ராஜு ” என ஆறுதலாய் சொன்னாள் சுதா.
“இந்த கோவில் தான் சுதா எனக்கு புத்திய குடுத்திருக்கு. இந்த கோபுரத்தை பாத்தியா? பாதிலேயே நிக்குது. சர்வ வல்லமை படைச்ச சாமியே பூர்த்தியாகாத ஒரு கோவில்ல இருக்கார். வர்ற ஜனங்க அதுல இருக்க சிற்ப வேலைகளை தான் ரசிக்குறாங்களே தவிர, அது முழுமையடையலேன்னு யாரும் அதை குறையா சொல்லல.
சாமிக்கு இல்லாத சக்தியான்னு யோசிச்சு பார்த்தேன். அவர் நினைச்சார்னா இந்த கோவிலை பூர்த்தி செய்து இருக்கலாம். ஆனா அது ஏன் அவர் செய்யலேன்னு யோசிச்சேன். எனக்கு பதில் பிடிபடலை.
ஆனா நம்ம வாழ்கையை பத்தி எனக்கு தெளிவு கிடைச்சிருக்கு. நம்ம பவாகிட்ட இருக்க குறைய நா ரொம்ப பெரிய விஷயமா மனசுல போட்டு குழப்பிக்கிட்டு உங்களை விட்டு பிரியுற முடிவுக்கே வந்துட்டேன். ஆனா நீ இந்த குடும்பத்துல இருக்க அழகை பாத்ததால என்னை சகிச்சுகிட்டு வாழுற. ரொம்ப சாரி சுதா, என்னை நெனச்சா எனக்கே வெக்கமா இருக்கு” என்றான் ராஜு.
சுதாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. “சாரி ராஜு, நானும் உன் விஷயத்துல கடுமையா நடந்துக்கிட்டேன். இன்ஸ்டால போஸ்ட் பண்ணது கூட நீ சொல்லாம முடிவெடுத்ததால தான். மற்றபடி உன்ன விட்டு கொடுக்கணும்னு இல்ல. ஜெபாக்கு விஷயம் தெரிஞ்சுது ஆண்ட்ரியா மூலமாக. மணி சார் கிடையாது. ஆண்ட்ரியா உன்னோட சிச்சுவேஷன, நீ என்ன மைண்ட்செட்ல இருக்கேன்னு ஜெபாக்கு தெளிவா சொல்லி இருக்கா. அவர் அன்னிக்கு உன்கிட்ட பேசினது கூட நீ உணரணும்னு தானே தவிர, உன்னை காயப்படுத்த இல்லை” என்றாள் சுதா.
“நீ எனக்கு பெரிய உபகாரம் பண்ணி இருக்கே சுதா” என சொல்லி பவாவை இறுக அணைத்துக் கொண்டான்
மகிழ்ச்சியில் தாதிபத்ரியின் தங்க புத்ரியாக ஜொலித்தாள் சுதா!
சுதாவுக்கு அன்று அதிகாலையிலேயே தூக்கம் கலைந்தது. நேரம் ஐந்து பதினைந்து.
பல் துலக்கி, குளித்து காபி போட்டு குடித்து முடித்தாள். பவாவுக்கு பால் பாட்டில் ரெடி செய்து குடிக்க கொடுத்தாள்.
பவா பால் குடித்து விட்டு தூக்கத்தை தொடர ராஜூவை எழுப்பினாள்.
“ராஜு, காபி போட்டு வச்சிருக்கேன். பவா பால் குடிச்சுட்டா. நா கோவிலுக்கு போயிட்டு வரேன்” என சொல்லிவிட்டு கிளம்பினாள்.
பத்து நிமிடத்தில் ரெடியாகி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
கோவில் கூட்டமில்லாமல் காலியாக இருந்தது.
நின்று நிதானமாக சாமி கும்பிட்டு விட்டு வழியே வந்து கல் மண்டபத்தில் உட்கார்ந்தாள்.
இன்றைய பொழுது நல்ல படியாக இருக்க வேண்டும், கடவுளே எனக்கு தெளிவான புத்தியை கொடு என பிரார்த்தனை செய்தாள்.
அம்மாவிடம் பேச விடும் போல தோன்றியது. ஏழு மணி. இந்நேரம் எழுந்திருப்பார்கள், போன் போடலாம் என தோன்றியது.
போன் போட்டு தன் மனதில் உள்ளதை முழுவதுமாய் சொல்லி முடித்தாள்.
“சுதா, நீ எடுத்த முடிவு நல்லது தான். ஆனா, அதை உன் மனசு காயப்பட்டு இருக்கும் போதே செயல்
படுத்தணும்னு நினைக்காதே” என்றாள் அம்மா.
“அதான்மா என் பிரச்சினை. எனக்கு ராஜுவோட நெலமை நல்லா புரியுது. ஆனா அதே சமயம் அவன் செஞ்ச செயல் என்னை ரொம்ப ஹர்ட் பண்ணியிருக்கு. நா எப்படி இத டீல் பண்றதுன்னு எனக்கு தெரியலைம்மா” என சொன்னாள்.
அம்மா சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.
பிறகு “சுதா, இதுக்கு என்னால உனக்கு நேரடியான பதிலை சொல்ல முடியாது. ஆனா மகாகவி பாரதியாரோட ஒரு பாடல் உனக்கு தேவையான பதிலை குடுக்கும்னு நினைக்குறேன். மனமென்னும் பெண்ணே அப்படீன்னு ஒரு பாடல் இருக்கு. படிச்சி பாரு. அதுல நீ தேடிக்கிட்டிருக்குற கேள்விக்கு விடை இருக்கும்” என சொல்லி போனை வைத்தாள்.
சுதா அந்த பாடலை போனில் தேடி எடுத்து படித்தாள்.
முழு பாடலையும் திரும்ப திரும்ப படித்து உள் வாங்கிக் கொண்டாள்.
புத்தி வேறு, மனம் வேறு என்று சொல்வார்கள். புத்தியின் சொல்படி கேட்டு மனம் இயங்க வேண்டும்.
ஆனால், பல சமயம் புற சூழ்நிலையின் தூண்டல்களால் மனம் அலைபாயும். அத்தகைய சமயங்களில் புத்தியானது மனத்திற்கு ஒரு நல்ல ஆசானாக இருந்து அறிவுரை சொல்லவேண்டியது அவசியம்.
அடுத்த இரண்டு நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பாடலை படித்து, அதன் அர்த்தத்தை முழுதாக புரிந்து கொள்ள முயற்சி செய்தாள். மூன்றாம் நாள் மனம் தெளிவாய் ஆனது.
நான்காம் நாள் காலை. இன்று பவா தெளிவாக இருந்தது. கனகம்மாவும் வரதாவும் வந்தவுடன் அவர்களிடம் தாவி ஓடியது. சுதா மதியம் பில் செட்டில் செய்து விட்டு, எல்லா பொருட்களையும் பேக் செய்ய ஆரம்பித்தாள்.
வீட்டிலிருந்து வந்த முதல் நாள் இந்த ஆஸ்பிடல் அவளுக்கு அந்நியமாய் இருந்தது. இன்று வீடு அந்நியமாய் இருக்கிறது. அன்பு, ஆதரவு, புரிதல், நட்பு என எல்லாம் எங்கே கிடைகிறதோ அங்கே மனம் நிம்மதியாய் இருப்பதை புரிந்து கொண்டாள்.
கனகம்மா சாப்பாடு கொண்டு வந்தார். “நீங்க சாப்டீங்களா?” என கேட்டாள் சுதா.
அவர் ஆம் என சொல்ல, “இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. ரொம்ப தேங்க்ஸ், நீங்க இல்லேன்னா நா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன்” என சொல்லி கொஞ்சம் காசு கொடுத்தாள்.
“இருக்கட்டும்மா, என் புள்ளைக்கு செய்ததா தான் நா நெனக்கிறேன். சாரு கொஞ்சம் டென்ஷன்காரரா இருக்காரு. இந்த புள்ளைய நீங்க நல்லா பாத்துக்குவீங்க. ஆனா உங்களையும் நீங்க கொஞ்சம் பாத்துக்குங்க.
வீட்ல ஏதாவது வேலையிருந்தா சொல்லுங்க, ஷிப்ட் முடிச்சிட்டு வந்து செய்யுறேன்” என சொல்லி விடை பெற்று சென்றார்.
சாப்பிட்டு முடிக்கும் போது டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி என போன் வந்தது. எல்லா பேப்பர்களையும் சரிபார்த்து, வரதாவுக்கு சொல்லிவிட்டு, பவாவை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினாள்.
வீட்டுக்கு வந்ததும் பவா அவள் பொம்மைகளை தேடி ஓடினாள். எல்லாவற்றையும் எடுத்து தரையில் போட்டு விளையாட ஆரம்பித்தது.
இன்று இரவு உணவுக்கு அவளுக்கு பிடித்த இடியாப்பம் செய்யலாம், கூடவே குருமாவும் கொஞ்சம் செய்தால் எல்லாருக்கும் சரியாக இருக்கும் என வேலையை ஆரம்பித்தாள். வாஷிங் மெஷின் போட்டு, மறு பக்கம் இட்லி மாவு அரைத்து, எல்லா வேலைகளையும் முடிக்க ஏழு மணி ஆனது.
டோர் பெல் அடித்தது. சுதா போய் கதவை திறந்தவுடன் “நான் தான் சாயந்திரம் வர்றேன்னு சொன்னேனே? அதுக்குள்ள எதுக்கு டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு வந்த சுதா?” என கோவமாக கேட்டான் ராஜு.
சுதா பதில் சொல்வதற்குள் ராஜுவுக்கு ஜெபாவின் போன் வந்தது.
ஜெபா எதற்கு அழைத்திருப்பார் என சுதாவுக்கு தெரியும்.
ஆஸ்பிடலில் ராஜு பவாவை தூக்கி தோளில் சாய்த்து தூங்க வைத்த போட்டோவை எடுத்து தன் இன்ஸ்டா அக்கவுண்டில் “அன்பு அப்பா” என கேப்ஷனை போட்டு ஆண்ட்ரியாவை டேக் செய்தது தான் சுதா செய்த வேலை.
மிச்சத்தை ஆண்ட்ரியா பார்த்துக் கொண்டாள்.
ஜெபாவுக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் விஷயம் தெரிய போன் போட்டு நேரடியாக பேசி விட்டார்.
ராஜு குமாரு சோபாவில் தலையை கவுந்த மொமெண்ட்டின் காரணம் இது தான்.
அவனை ஜெபா குருமா வைக்க, அந்த அவமானத்தில் வெந்து கொண்டிருக்கிறான்.
மணி சார் சொல்லி இருக்கலாம் ஜெபாவிடம் என நினைத்துக் கொண்டான் ராஜு.
தான் அநாவசியமாக சொன்ன ஒரு பொய்யாலும், தன்னுடைய முட்டாள்தனத்தாலும் சிட்னி கனவு இடியாப்ப சிக்கலாக மாறியிருப்பதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.
பவாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு தூங்க வைத்துவிட்டு சுதா ஹாலுக்கு வந்தாள்.
ஜன்னலை முழுதாக திறந்து வைத்து விட்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். வழக்கத்தை விட அன்று அவள் செய்த இடியாப்பம் குருமா அருமையாக இருந்தது.
மெதுவாக ரசித்து சாப்பிட்டவள் தட்டை கழுவி வைத்து விட்டு பார்மஸிக்கு போன் போட்டாள்.
“சைஸ் 312 பேட்டரி வேணும்?ஸ்டாக் இருக்குங்களா?” என கேட்டாள்.
“மேடம், நா புதுசா வேலைக்கு வந்திருக்கேன். சார் கடைல இல்ல, சாப்பிட போயிருக்கார். நீங்க என்ன ப்ராண்டுனு போட்டோ அனுப்புனீங்கனா, நா இருக்கானு பாக்குறேன்” என்றான் கடை பையன்.
“அது நார்மல் பேட்டரி கிடையாதுப்பா, கொழந்தைங்களோட இயரிங் எயிடுக்கு போடுற பேட்டரி. நா ரெகுலரா உங்க கடைல தான் வாங்குவேன். பேட்டரி போட்டோவும் அட்ரசும் அனுப்புறேன். ஸ்டாக் இருந்தா நாளைக்கு காலைல அனுப்புங்க” என சொல்லி போனை வைத்தாள்.
ராஜு இன்னும் சோபாவில் இருந்து அசையவில்லை. அவன் செய்த குற்றத்திற்கான தண்டனையை குறைவில்லாமல் அனுபத்து கொண்டிருக்கிறான்.
கடை பையனுக்கு பேட்டரி போட்டோ அனுப்ப, வெறும் 312 என டைப் செய்து கூகிளில் தேடினாள். முதல் பக்கத்திலேயே சுருக்கென ஒரு விஷயம் கிடைத்தது சுதாவுக்கு.
Indian Penal Code 312 – Causing miscarriage.
முதல் வேலையாக பேட்டரி போட்டோவை அனுப்பிவிட்டு, மீண்டும் IPC 312ஐ படித்து பார்த்தாள்.
சட்டவிரோத கருக்கலைப்பு தடுப்பு சட்டம் அது.
அவள் மனம் ஒரு நிமிடம் நிதானிக்க சொன்னது.
மீண்டும் மீண்டும் படித்து பார்த்தாள்.
இந்த பூமிக்கு வராத ஒரு ஜீவனின் வாழும் உரிமையை நிலை நாட்டும் சட்டம் அது.
மருத்துவ ரீதியாக அந்த கருவுக்கோ அல்லது தாயின் உயிருக்கோ, ஏதோ ஒரு ஆபத்தான சூழ்நிலை என்றால் மட்டுமே சட்டம் கருகலைப்பை அனுமதிக்கும்.
சுதாவுக்கு இந்த விஷயத்தை உள் வாங்க சற்று நேரம் எடுத்தது.
அரை மணி நேரம் டைனிங் டேபிளில் உட்கார்ந்து யோசித்ததில் அவளுக்கு சில புரிதல்கள் ஏற்பட்டது.
பவா செவி திறன் குறைபாட்டோடு பிறந்தது அவள் குற்றமில்லை. பெற்றோர்களாக தங்கள் குற்றமும் இல்லை.
இயற்கையாகவே அந்த குழந்தைக்கு அது நிகழ்ந்திருக்கிறது.
அவளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கி, சிறப்பான முறையில் ஒரு வாழ்க்கையை அமைத்து தரும் பெரும் பொறுப்பு தங்கள் இருவருக்குமே சரிசமமாக இருக்கிறது. ஆனால் ராஜுவுக்கு நிஜத்தை எதிர் கொள்ளும் தைரியமும், மன உறுதியும் இல்லாததே இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் என அவளுக்கு தோன்றியது.
பொறுமை, திடமான மனம், உணர்வு முதிர்ச்சி என எதுவுமே இல்லாமல் ராஜு இருப்பது தான் இங்கு பிரச்சினை.
பவா மீது அவனுக்கு பாசம் இருந்தாலும், ஒரு இயல்பான வாழ்க்கை தனக்கு அமையாமல் போனது அவனுக்கு மிகுந்த மன உளைச்சலை தந்திருக்கிறது.
சுதாவின் மன போராட்டத்திற்கு அவ்வப்போது ஆறுதல் செல்பவன், அவன் மனதை பக்குவபடுத்தாமல் விலகி ஓடும் முடிவை எடுத்திருக்கிறான்.
எல்லா பொறுப்பையும் சுதாவிடம் விட்டு விட்டு, வெளிநாட்டில் வேலைக்கு போய் சேர்ந்து விட்டால், தன் தினசரி வேதனையிலிருந்து மீளலாம் என அவன் மனம் ஆழமாக நம்புவது சுதாவுக்கு நியாயமாக படவில்லை.
இந்த பூமிக்கு வராத ஒரு ஜீவனுக்கு நல்ல சட்ட பாதுகாப்பு இருக்கிறது.
ஆனால் பவாவுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.
அதனால் இருவரும் ஒற்றுமையாக இருந்து, பவாவுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவதே, ஒரு பெற்றோராக தங்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும் என கருதினாள்.
இந்த இடத்தில் சுதா சற்று தீர்க்கமாக சில முடிவுகளை எடுத்தாள்.
இங்கு குறைபாட்டோடு இருப்பது பவா இல்லை, ராஜு தான். இவ்வளுவு வயதான பிறகும், சூழ்நிலையை எதிர் கொள்ள இயலாமல் ஓடி ஒளியும் மனப்பான்மையோடு இருப்பது அவன் தவறு. அதை அனுமதிப்பது அதை விட தான் செய்யும் பெரும் தவறு என உணர்ந்தாள்.
ராஜுவுக்கு புரிய வைக்க ஆயிரம் வழி இருக்கிறது.
இருவரும் நல்ல மன நல ஆலோசகரை சந்திக்கலாம். மன வள வாழ்க்கை முறைகளை கையாண்டு அவ்வப்போது ஏற்படும் மன உளைச்சல்களிலிருந்து மீண்டு வரலாம்.
ஆனால் எந்த முயற்சியும் செய்யாமல், அவரவர் வழியில் அவரவர் போவது பவாவுக்கு தாங்கள் நிகழ்த்தும் துரோகம் என முடிவுக்கு வந்தாள்.
கடந்த சில நாட்களாக நடந்த நிகழ்வுகள் அவள் மனதை ரணமாக்கியிருக்கிறது.
தன் காயத்தையும் ஆற விட்டு, எதிராளியையும் அரவணைத்து போக வேண்டிய மனநிலை அவளுக்கு சவாலாக இருந்தது.
எப்படி இந்த பிரச்சனையை கையாள வேண்டும் என்ற தெளிவு இல்லெயென்றாலும், எப்படி இதை கையாளக்கூடாது என்ற தெளிவோடு தூங்க போனாள்.