Tamil Joke – சாயா (Tea) சக்தி

A candid conversation about politics

கோல்கப்பா : நம்ம “ஸ்டார்ட் அப் கட்சி” மீட்டிங்க பாத்தியா டார்லிங்?

பூரி குமாரி : ஹிஹிஹி, சாரிங்க, நான் களத்துல இருந்தேன்! அதனால பாக்கலை, நீங்களே சொல்லுங்க!

கோல்கப்பா : ஹாஹாஹா, அவங்க கட்சில ஹயரிங் நடக்குதுன்னு தலைவரே சொல்லிட்டாரு. எனக்கென்னமோ நீ அப்ளை பண்ணா சேத்துக்குவாங்கன்னு நெனைக்குறேன்! என்ன சொல்ற?

பூரி குமாரி : எனக்கு என்ன தகுதி இருக்குன்னு நெனைக்குறீங்க கோல்?

கோல்கப்பா : உனக்கு தான் பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு அவங்க பார்ட்டில சேர..ஹிஹீஹீ ..

பூரி குமாரி : இதுக்கு நான் லைவே பாத்திருக்கலாம், புதிர் போடாம சொல்லுங்க கோல்.

டீ கடைக்காரர்: ஏன்மா ஒத்த ரோசா, மக்கள் எந்த மூட்ல இருந்தாலும் உன் கடைக்கு தான் வராங்க. சந்தோசமா இருந்தாலும் ஒரு பிளேட் பானி பூரி சாப்புடுறாங்க, மனசு நொந்து இருந்தாலும் ஒரு பிளேட் பானி பூரி சாப்புடுறாங்க! நீதான்மா மக்களோட சுக துக்கத்துல அவங்களோட நிக்குற!

கோல்கப்பா : ஹிஹிஹி. பாய்ண்டை புடுச்சிடீங்க மாஸ்டர்! நீதான்மா உண்மையா உணர்வுப்பூர்வமா மக்களோட நிக்குற! இந்த தகுதி ஒண்ணே போதும்!

டீ கடைக்காரர்: பானி பூரி சாப்பிடும்போது,பசங்க “ஒண்ணு, இன்னொன்னு” அப்படீன்னு ஆர்வமா சொல்றானுங்க..அந்த கோஷம் நேச்சுரலாவே உங்க வகையறாவுக்கு செட் ஆகிடும்!

கோல்கப்பா : அட அட அடடா, கலக்கிடீங்க மாஸ்டர். நெக்ஸ்ட் ப்ளீஸ்?

பூரி குமாரி : என்ன மோட்டிவேட் பண்றது இருக்கட்டும் மாஸ்டர். ஏதோ தீய சக்தி, தூய சக்தின்னு ஷார்ட்ஸ் வந்தது. நீங்கதான் “சாயா சக்தியாச்சே”, நீங்களும் அப்ளை பண்ணுங்க!

கோல்கப்பா : அடிப்பாவி, கலக்கியடியே. ஷார்ட்ஸ் பாத்தே இந்த கமெண்ட் அடிக்கிற? நீ அரை மணி நேரம் பேச்ச கேட்டிருந்தீன்னா ப்ளாஸ்ட்டு தான் போ!!

பூரி குமாரி : மாஸ்டர், நம்ம பசங்க அக்கா, தங்கச்சி, வைப் அப்புறம் ப்ரெண்ட்ஸ சில சமயம் “டீ” போட்டு கூப்பிடுவாங்க. “டீ”ன்னாலே ஒரு VIBE இருக்கும். “டீ”ன்னாலே ஒரு எனர்ஜி வருமே? அவங்க கட்சி பேருல கூட “டீ” இருக்கும். இதை சொல்லி அப்ளிகேஷன் போடுங்க மாஸ்டர்…ஹிஹிஹி..

கோல்கப்பா : ஹிஹிஹி…

டீ கடைக்காரர் : என் graphஅ எங்கயோ கொண்டு போய்ட்டேம்மா…நம்ம ரெண்டு பேருக்கும் ஏதோ சில பாயிண்ட்ஸ் இருக்கும்மா. நம்ம தலை கோல்கப்பாவை எப்படி பொசிஷன் பண்றது?

பூரி குமாரி : ஹிஹிஹி, இவர்தான் தலைமைக்கு சரியான ஆள்னு சொல்லலாம் மாஸ்டர்!

டீ கடைக்காரர் : எனக்கு புரியலம்மா??

கோல்கப்பா : வெஷம் , வெஷம்!! எனக்கு வயசாயிடுச்சி, தலைக்கு டை போடுறேன்னு நக்கலா சொல்றா மாஸ்டர்!

டீ கடைக்காரர் : ஹாஹாஹா, “தலைமை”க்கு தரமான டெபனிஷனா இருக்கே! அள்ளுறம்மா நீ!!

பூரி குமாரி : இவரு மாதிரி கல்லாபொட்டி எக்ஸ்பீரியன்ஸ் ஆளுங்களுக்கு அவங்க கட்சில வேகன்ஸி இருக்கு மாஸ்டர்!

கோல்கப்பா : அடியேய் உன்னை….(மாஸ்டர் பக்கம் திரும்பி) நா கவுண்டர் குடுக்குற ஆளுன்னு சொல்றா மாஸ்டர்!

டீ கடைக்காரர் : ரெண்டு சாம்பிள் சொல்லுமா, இவர் தேறுவாரான்னு பாக்கலாம்?

பூரி குமாரி : கோல், இப்போ நீங்க ஸ்டார்ட் அப் கட்சில ஒரு பொறுப்புல இருக்கீங்கன்னு நெனச்சுக்கோங்க! நா ஆளும் தரப்பு கீவேர்ட்ஸ் சொல்றேன். அதுக்கு ஒரு கவுண்டர் குடுங்க.

கோல்கப்பா : நீ வேணாம்! மாஸ்டர் நீங்க கேளுங்க..

டீ கடைக்காரர் : (யோசிக்கிறார்) கட்டுக்கோப்பு!

பூரி குமாரி : தெரியலேன்னா பாஸ் சொல்லிடுங்க கோல்! நா ரெடி (கையை உயர்த்துகிறார்)

கோல்கப்பா : கஜானா காலி. எந்த பைலும் மூவ் ஆகாம, அரசாங்கம் முடங்கி இருக்கு. “கட்டு” கோப்பு எல்லா துறை டேபிள்லயும் இருக்கு! எப்பூடி? ஹிஹிஹி….

பூரி குமாரி : வாவ், நச்சுனு சொல்லிடீங்க கோல்.

டீ கடைக்காரர் : தல, செம மேட்டர இருக்கே!! நெக்ஸ்ட் “உபி

கோல்கப்பா : “உபி” க்கள் எல்லோரும் ஜுனியர் தலீவர் பின்னாடி தான்!!!

பூரி குமாரி : மாஸான பிட்டு கோல்!!

டீ கடைக்காரர் : இந்த கட்சில ஒரு அட்வான்டேஜ் இருக்கு தல. நாம செலெக்ட்டிவா இருக்கலாம். நமக்கு வசதிப்பட்ட டாபிக்கை மட்டும் பேசலாம். திருப்பரங்குன்றத்துல விளக்கேத்துறது களப்பிரச்சினையில்லையா? வாயையே தொறக்கலை மனுசன்.

கோல்கப்பா : உன் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுடிச்சி, நீயே சொல்லு டார்லிங்!

பூரி குமாரி : Thalaivar Vaaila Kozhukattai (தலைவர் வாயில கொழுக்கட்டை)! ஹிஹ்ஹிஹி !!

டீ கடைக்காரர் : முடிஞ்ச்…மக்களே இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிச்சிருந்தா, உங்க நண்பர்களோட பகிருங்கள். Bye!!

Tamil joke – கொள்கைப்பா Wanted!!

pani poori cheered by public

கோல்கப்பா: ஏம்மா, நம்ம வீட்டுக்கு வெளில ஏதோ சத்தம் கேக்குதே? போய் பாத்துட்டு வாம்மா.

(சில நிமிடங்களுக்கு பிறகு பதட்டத்தோடு ஓடி வருகிறார் பூரி குமாரி)

பூரி குமாரி: ஏங்க, உங்கள தேடி நெறய ஆளுங்க வந்திருக்காங்க, வாங்க வெளில வந்து பாருங்க.

கோல்கப்பா: என்ன தேடியா?

பூரி குமாரி: உங்களத்தாங்க! “கோல்கப்பா….கோல்கப்பான்னு” ஒரே கூச்சலா இருக்கு.

கோல்கப்பா: சரி வா, போய் பாக்கலாம்.

(இருவரும் வீட்டுக்கு வெளியில் வந்து ஆட்களை சந்திக்கிறார்கள். முன் வரிசையில் இருந்த ஒருவர் கோல்கப்பாவிடம் வந்து பேசுகிறார்)

முதல் மனிதர்: சார், நீங்க கொள்கைப்பா தானே? உங்களை தான் நாங்க தேடிகிட்டு இருக்கோம்.

(கோல்கப்பா புரியாமல் முழிக்கிறார்)

கோல்கப்பா: என்ன ஏம்பா தேடுறீங்க?

முதல் நபர் : சார், எங்க கட்சிக்கு கொள்கை பிடிப்புள்ள ஆளுங்க வேணும். இந்த ஏரியால விசாரிச்சா உங்கள பத்தி சொன்னாங்க. நீங்க கொள்கைப்பாவாமே? நீங்க எங்க கட்சிக்கு வந்துட்டீங்கனா, எங்களை யாரும் கொள்கை இல்லாதவங்கன்னு சொல்ல முடியாது!!!

கோல்கப்பா: யோவ், நா கொள்கைப்பா இல்ல? கோல்கப்பா!!!

முதல் நபர் : சார், உங்க பேர ஸ்டைலா சொல்லி பாருங்க! நீங்க கொள்கைப்பான்னு நீங்களே நம்பிடுவீங்க!

இரண்டாம் நபர் : சார், நீங்க எங்க கட்சிக்கு வந்துட்டீங்கனா, எங்க கிட்டயும் கொள்கை இருக்குக்குனு நாங்களும் ஸ்டைலா சொல்லிக்குவோம்.

கோல்கப்பா: ஸ்ஸ்ஸ்ஸ்…ஸ்ஸுப்பா…யோவ் தமிழ ஒழுங்கா படிங்கைய்யா, நா கொள்கைப்பா இல்ல! கோல்கப்பா, கோல்கப்பா, கோல்கப்பா!!!

முதல் நபர் (சத்தமாக கத்துகிறார்) : தலைவர் கொள்கைப்பா வாழ்க! தலைவர் கொள்கைப்பா வாழ்க!

(கூடி இருக்கும் மக்களும் கோஷம் எழுப்புகிறார்கள். பூரி குமாரி அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நேசப்பா காதருகே போய் பேசுகிறார்)

பூரி குமாரி: ஏங்க, நம்மளே தள்ளு வண்டி கோஷ்டி! நம்மள தூக்கி வாலண்டரியா அவுங்க வண்டில ஏத்த பாக்குறாங்க?

கோல்கப்பா: இரு, எப்படியாவது பேசி இவுங்ககிட்டேயிருந்து தப்பிக்கலாம்.

முதல் நபர் : இப்பவே என்னோட வாங்க. நான் தான் எங்க கட்சி தலைவரோட மனசாட்சி! உங்கள பத்தி அவர்கிட்ட சொல்லி நல்ல போஸ்டிங் வாங்கி தரேன்!

பூரி குமாரி: கோல், இவன் சொல்றத நம்பாதீங்க! இவன் சரியான பிறழ்சாட்சி பார்ட்டி!

கோல்கப்பா: ஓஒ, அது எப்படி உனக்கு தெரியும்?

(பூரி குமாரி கடுப்பாகி முறைக்கிறார்)

இரண்டாம் நபர் : சார், நீங்க முப்பது வருஷ பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர்னு கேள்விப்பட்டோம். நீங்க கண்டிப்பா எங்க கட்சில வந்து சேரணும் சார்!

கோல்கப்பா: யோவ், நா முப்பது வருஷ பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரன் இல்ல! பொதுமக்கள் வாய்க்கு சொந்தக்காரன்!! என்ன விட்டுருங்கய்யா.

(கூட்டத்தில் இருந்து ஒருவர் முன்னே வந்து ஆவேசமாக பேசுகிறார்)

மூன்றாம் நபர் : உண்மைத் தலைவன் ஒரு நாள் வீதிக்கு வந்தே தீருவார்! நீங்கள் மக்கள் பணிக்கு கண்டிப்பாக வர வேண்டும்.

(கோல்கப்பா சோர்வாகி விடுகிறார்)

கோல்கப்பா: யோவ்வ், வாயில நல்லா வருது எனக்கு! நான் இத்தனை வருஷமா வீதி ஓரமா தான்யா இருக்கேன். இப்போதான் உங்க கண்ணுக்கு தெரியுறேனா?

இரண்டாம் நபர் : நீங்க நல்லா வியூகம் அமைப்பீங்கன்னு பேசிக்குறாங்க, வாங்க சார் நம்ம கட்சிக்கு!

பூரி குமாரி : ஏங்க, சாயங்காலம் ஆறு மணிக்கு மேல இவருக்கே View கம்மிங்க!! இவரு எங்கங்க உங்களுக்கு வியூகம் அமைக்குறது?

மூன்றாம் நபர் : கொள்கைப்பா, rugged ஆனா ஆளுன்னு ஜனங்க சொல்றாங்க?

கோல்கப்பா: யோவ், நா ரகடா பூரிய்யா! என்ன உட்டுருங்கய்யா…

முதல் நபர் : எங்க கட்சில ரெண்டாம் கட்ட தலைவர்கள் இல்லன்னு குறை சொல்றாங்க. நீங்க தான் களப்பணி புலின்னு கேள்விப்பட்டோம். உங்கள கட்சில சேக்காம விடமாட்டோம்…வாங்க சார்.

பூரி குமாரி : ஏங்க, இவரு களப்பணி புலியெல்லாம் இல்லேங்க. இவரு புளித்தண்ணி கலக்குறவர்!!ஹீஹீஹ்ஹீ….

pani poori is upset

(கொல்லென்று சிரித்தபடியே பூரி குமாரி சொல்ல, கோல்கப்பா அவமானத்தில் முறைக்கிறார்)

பூரி குமாரி : நல்லா கேட்டுக்குங்க, கொஞ்சம் ஸ்வீட் பாணி, கொஞ்சம் ஹாட் பாணின்னு இவரே ஒரு ரெண்டுங்கெட்டான் ஆளு! இவரை போய் ரெண்டாம் கட்ட தலைவர் ரேஞ்சுக்கு சொல்றீங்க!

கோல்கப்பா: எவ்வளவு நாள் வஞ்சம்டி உனக்கு, என்ன இப்படி கழுவி ஊத்துற?

பூரி குமாரி : இவங்க கிட்டேருந்து நீங்க தப்பிக்கணும்னா இப்படி தாங்க சொல்லணும். இல்லேன்னா அப்புறம் ஊரே உங்கள கழுவி ஊத்தும். இப்போ எப்படி மடை மாத்துறேன்னு பாருங்க!

(பூரி குமாரி தொண்டையை செருமியபடியே கூட்டத்தை நோக்கி பேசுகிறார்)

பூரி குமாரி : இவரை கட்சில சேத்தீங்கன்னா, உங்க கட்சில பேரளவுலதான் கொள்கை இருக்குன்னு சொல்லுவாங்க.!! கொள்கைப்பான்னு ஒருத்தர் கட்சில இருக்குறதால வர போற இந்த கெட்ட பேர் உங்களுக்கு தேவையா? நல்லா யோசிங்க!!

கோல்கப்பா (ரகசியமாக): அடிப்பாவி, மண்டைய கழுவுறதுல நீ இவ்ளோ எக்ஸ்பர்ட்டா!!

முதல் நபர் (யோசிக்கிறார்): ஆமாம், அப்போ நாங்க கொள்கைக்கு என்ன பண்றது?

பூரி குமாரி : கொள்கைய தூக்கி கெடப்புல போடுங்க. நீங்க தான் உங்க பாக்கெட்ல மக்கள் சேவைன்னு ஒரு மேட்டர வச்சுருக்கீங்களே, அத பத்தி யோசிங்க!!

இரண்டாம் நபர் : இப்போவே நவம்பர் வந்துடுச்சி. அடுத்த ஏப்ரலுக்குள்ள சேவைய எங்க போய் நாங்க கண்டுபுடிக்குறது?

(கோல்கப்பா மண்டையில் பல்பு எரிகிறது)

Paani poori gat an idea

கோல்கப்பா: இவ தான் சேவ்பூரி. உங்களுக்கு தோதான ஆளு. “மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு” உருட்ட உங்களுக்கும் வசதியா இருக்கும்.

கோல்கப்பா: இதுல டாப்பா ஒரு விஷயம் இருக்கு! உங்க கிட்ட தத்தி இருக்கு, எங்க கிட்ட தஹி சேவ்பூரி இருக்குன்னும் நீங்க பீத்திக்கலாம்!!!

(“தங்கத் தலைவி, தானைத் தலைவி சேவ்பூரி வாழ்க” என கூட்டம் ஆர்ப்பரிக்கிறது)

முதல் நபர் :ஹாஹாஹா, சார் அட்டகாசமான மேட்டர் சார் இது. நீங்க Quote தலன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க சார்!!!

கோல்கப்பா: உங்க கிட்ட மூணு அட்டகாசமான தலைங்க இருக்காங்க! என்ன ஆள விடுங்கடா சாமி!!

TVK leaders

கோல்கப்பா: மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்!! Bye!!

Thank you, Dairy Milk!

Pani puri couple enjoying dairy milk

கோல்கப்பா : Cadbury Daily Milk போட்டுருக்குற New Neighbour சாக்லேட் விளம்பரத்தை பார்த்தியா?

பூரி குமாரி : அருமையா இருக்குங்க!

Dairy mil ad

கோல்கப்பா : இந்த கம்பெனிக்கு நம் மக்கள் சார்பாக நன்றியும், வாழ்த்துக்களும்!

பூரி குமாரி : ஆமாங்க, கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும். அதே சமயம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் மொழி உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆளும் தரப்புக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்ளுவோம்!

கோல்கப்பா : நியாயம் தான் குமாரி! வாசக நண்பர்களே, இந்த பதிவை படித்து நீங்களும் உங்கள் வாழ்த்தை கமெண்டில் சொல்லுங்கள்!

Dairy mil ad

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

பூரி குமாரி : மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்! நன்றி!

Golgappa’s love poem

a lovely pani puri couple riding two wheeler

பூரி குமாரி: ஏங்க, எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க!

கோல்கப்பா :

இரு சக்கர வண்டியில்
ஒவ்வொரு முறை
உன்னை கடக்கும்போதும்
மெதுவாய் நகர்கிறேன்.

எங்காவது ஒரு சாலை வளைவில்,
நான்கு முனை சந்திப்பில்,
நீ என் கண்ணில் படாமலிருப்பதில்லை!

எந்த அவசரத்தில் இருந்தாலும்,
மஞ்சள் பூசிய உன்னை கவனிக்காமல்
எப்படி இருக்க முடியும்?

எந்த நினைப்பில் நான்
வண்டி ஒட்டி கொண்டிருந்தாலும்,

என்னை எனக்கே நினைவூட்டும்
கடமையை தவறாமல் செய்கிறாய்!

நீ மட்டும் தனியாய் இருந்தால்,
ஒரு கணம் மட்டும்
வேகம் குறைக்கும் நான்,

நீ உன் குழுவோடு வரும்போது,
என் உச்சி முதல் கால் வரை அதிர்வதை
என்னவென்று சொல்ல?

உன்னை தாண்டி
செல்லும் போது
என் பின்னால்
இருக்கும் ஒருத்தி,
எவ்வளவு கோபமிருந்தாலும்
என்னை இறுக பற்றி
தோளில் சாய்ந்து கொள்கிறாள்!

என் தேகம் காக்கும்
வேகத் தடையே!

உன் நோக்கம் சரி தான்
வேகத் தடையே!

பூரி குமாரி: நீங்க ஒரு பைக் சைக்!

கோல்கப்பா : மக்களே! வேகத் தடை நம்ம பாதுகாப்புக்கு தான் இருக்குது! ஆனா சைட் ஸ்டாண்டை எடுத்து விட்டுட்டு அப்புறம் வண்டிய ஸ்டார்ட் பண்ணுங்க! Bye!

Tamil joke – Live streaming, Wife screaming!

டிவியில் லைவ் பார்த்துக் கொண்டிருந்த பூரி குமாரி திடீரெனெ எழுந்து சாமி ஆடினாள்.

பூரி குமாரி : சொன்னீங்களே, செஞ்சீங்களா? சொன்னீங்களே, செஞ்சீங்களா?

கோல்கப்பா : நா எப்ப என்னடி சொன்னேன்?

பூரி குமாரி : கல்யாணம் ஆன முன்னூத்தி அறுபத்து ஆறாவது நாள் சொன்னீங்களே? அதை செஞ்சீங்களா?

கோல்கப்பா : ஐயோ, நா நேத்து சொன்னதையே மறந்துடுவானே! இது உனக்கு தெரியாதா?

பூரி குமாரி : கல்யாணம் ஆன முன்னூத்தி அறுபத்து ஆறாவது நாள், நம்ம பர்ஸ்ட் வெட்டிங் டே! அன்னைக்கு ஹேப்பி வெட்டிங் டேனு சொன்னீங்க. ஆனா என்ன ஹேப்பியாவா வெச்சிருக்கீங்க?

பூரி குமாரி தொடர்ந்து சாமி வந்தது போல திட்ட, கோல்கப்பா நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார்.

பிறகு பூரி குமாரி லைவ் பார்த்துக் கொண்டே பேசியது தெரியவர, ஓடி போய் டிவியை நிறுத்தினார்.

சற்று நேரத்தில் பூரி குமாரி நார்மலாகி கேட்டார் “நீங்க லைவ்ல என்ன பாத்தீங்க?”

கோல்கப்பா : உன்ன பார்த்தேன்! உன் கோவத்தை பார்த்தேன்! இனிமே உன்ன ஹாப்பியா வெச்சிக்குறேன்! நாம கலக்கலா இருப்போம்!

பூரி குமாரி மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் “நாமக்கல் லைவ் நம்ம மன கலக்கத்தை போக்கிடுச்சு”

கோல்கப்பா : மக்களே லைவ்ல பேப்பரை பாத்து பேசிட்டு அவங்க பாட்டுக்கு போய்டுவாங்க. நம்ம லைப்ப நாம தான் பாத்துக்கணும்!

ஹாப்பி சாட்டர்டே! Bye!

Tamil Joke – No Purpose Mixer

கோல்கப்பா : ஏண்டி, இந்த நாலு ஜாரு மிக்சியை மாத்தணும்ங்கிற? நாலு தலைமுறையா இந்த மிக்சி ஒழைக்குதுடி, இத மாத்தாதே!

பூரிகுமாரி : இப்போ புதுசா BLDC மிக்சி வந்திருக்கு, அதை தான் நா வாங்க போறேன்.

கோல்கப்பா : இந்த நாலு ஜாரு மிக்சி, சமுக நீதி, இட ஒதுக்கீடு, மொழி பாதுகாப்பு அப்புறம் மாநில சுயாட்சி இதெல்லாம் நல்லா அரைக்கும்டி, இதை மாத்தாதே!

பூரிகுமாரி : உண்மை தான், அதுல பெரிய ஜார் பர்பார்மன்ஸ் சூப்பர். ஆனா அதோட பேமிலி ஜார்ஸ் மட்டும்தான் டாப் பொசிஷனுக்கு செட் ஆகும். மீடியம் ஜார் இப்போதைக்கு வேலை செய்யுது. சட்னி ஜார் எல்லாத்தயும் ஒரு ரவுண்டு அரச்சி குடுத்தா, மீடியம் ஜார் ஒரு ரவுண்டு ஓட்டி வேலைய முடிக்குது.

கோல்கப்பா : சட்னி ஜார் ஓகே தானே?

பூரிகுமாரி : ஆமா, பொழுதுக்கும் விட்டு விட்டு வேலை செய்யும். தொடர்ந்து செஞ்சா டயர்டாயிடும்.

கோல்கப்பா : ஜூஸ் ஜார்?

பூரிகுமாரி : ஜூஸ் ஜார் இப்போதைக்கு ஷோ பீஸ். காலம் காலமா பல பேரோட உழைப்பை சக்கையா புழிஞ்சிட்டு, அடுத்து ஜூஸ் ஜார் தான் டாப்புக்கு வரும்னா எப்படிங்க?

கோல்கப்பா : சரி விடு, வேற எந்த மிக்சி வாங்கலாம் சொல்லு?

பூரிகுமாரி : BLDC மோட்டார் வெச்ச புது மாடல் மிக்சி இப்போ மார்க்கெட்ல கலக்குது, அத வாங்கலாமா?

கோல்கப்பா : BLDCனா என்ன?

பூரிகுமாரி : அந்த லீடர் மேல Boys & Ladies Develop Crush!

கோல்கப்பா : ஓஹோ, புரியுது! , உங்க குடும்பத்துல நா ஒருத்தனா இருப்பேன்னு வேற சொல்லுது! அது தானே?

பூரிகுமாரி : கரெக்ட். அத தான் நான் விசாரிச்சு பாக்க போறேன்.

கோல்கப்பா : ஏற்கெனவே ஒரு பச்சை கலர் மிக்சி இருந்துதே, அதை புதுசா வாங்கலாமா?

பூரிகுமாரி : அது கமலா ப்ராப்ளம் இருக்கு! அது வேணாங்க.

கோல்கப்பா : அது என்னடி கமலா ப்ராப்ளம்?

பூரிகுமாரி : நல்லா சத்தம் வரும், ஆனா வேலை செய்யாதுங்க!

கோல்கப்பா : அப்படியா? மாங்கா மிக்சி வாங்கலாமா?

பூரிகுமாரி : அதுல மிக்சி பேசுக்கும், ஜாருக்கும் பொருந்தலையாம்!

கோல்கப்பா : சரி கடல் மான் மிக்சி வாங்கலாமா?

பூரிகுமாரி : அதுக்கு கொஞ்ச நாள்ல ஸ்பேர்ஸ் கிடைக்குமான்னு தெரியல?

கோல்கப்பா : ஸ்பின்னர் மிக்சின்னு ஒரு ப்ராண்ட் இருந்ததே? அத வாங்கலாமா?

பூரிகுமாரி : அதுல ஜாரு சின்ன விஷயத்துக்கே அழுவுதாங்க!

கோல்கப்பா : ட்ரம்ஸ் மிக்சி வாங்கலாமா?

பூரிகுமாரி : அதுல ஜார் மட்டும் தான் கிடைக்கும். எந்த மிக்சி நெறய காசு குடுக்குதோ, அதுல போய் சேந்துக்குமாம்.

கோல்கப்பா : இத்தாலி மிக்சி?

பூரிகுமாரி : அது நாலு ஜாரு மிக்சியோட ஷோ ரூம்ல ஒரு ஓரமா இருக்கு. பழைய டார்ச்சு, டூல்ஸ், பாட் அதையெல்லாம் வெச்சி காம்போ பேக்கா இருக்காங்க!

கோல்கப்பா : பேசாம கல் ஒரல் வாங்கிக்க!

பூரிகுமாரி : அதெல்லாம் வேணாம். எந்த மிக்சி நல்ல ஆபர் குடுக்குதுனு பாத்து முடிவு பண்ணலாம்ங்க!

கோல்கப்பா : ஆமா, யோசிச்சு முடிவு பண்ணலாம். அடுத்த அஞ்சு வருஷத்த டெய்லி அது மூஞ்சில தான் முழிக்கணும்.

பூரிகுமாரி : மக்களே நீங்களும் நல்ல மிக்சியா பாத்து செலெக்ட் பண்ணுங்க.

Bye!

Tamil Joke – No purpose Mixer

Mixer grinder political joke

கோல்கப்பா : ஏண்டி, இந்த நாலு ஜாரு மிக்சியை மாத்தணும்ங்கிற?

பூரிகுமாரி : இது சத்தம் தான் அதிகமா இருக்கு. ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்குதுங்க.

கோல்கப்பா : சத்தமில்லாம ஓட இது என்ன ஏசியா? மிக்சின்னா சத்தம் வரத்தான் வரும்!

பூரிகுமாரி : நீங்க மட்டும் தேடி தேடி வாங்கி டாய்லெட்டுக்கு சைலண்டான எக்ஸாஸ்ட் பேன் போட்டு…..

கோல்கப்பா காதை மூடிக் கொண்டார்

கோல்கப்பா : ப்ளீஸ், ரைமிங்கா மட்டும் அந்த சென்டன்ச முடிக்காத!!

பூரிகுமாரி : அந்த பயம் இருக்கட்டும்.

கோல்கப்பா : ஜோக்குக்கு சிரிச்சு முடிச்சிடீங்களா? Full joke coming soon!

Bye!

Tamil joke – CM Sirrrr!

பூரி குமாரி : ஏங்க “CM Sirrr!” ட்ரெண்டிங்க்ல இருக்கே? என்ன மேட்டருங்க?

கோல்கப்பா : ஹிஹிஹி! ரூலிங் பார்ட்டியை வைய்யுறாங்க டாருலிங்!!

பூரி குமாரி : என்ன நக்கலா?

கோல்கப்பா : ரூலிங் பார்ட்டில CMனா என்னனு மொதல்ல சொல்லு?

பூரி குமாரி : Corruption Matters, Commission Matters, அப்புறம் அவங்க Children Matters!

கோல்கப்பா : அடிப்பாவி, பூரி குமாரி, நீ வேற மாறி குமாரியா அள்ளி தெளிக்குற! பொட்லம் பண்ணுறியே!

பூரி குமாரி : என்னங்க, சீக்கா கமெண்டரி மாதிரி பேசுறீங்க?

கோல்கப்பா : அப்போ, பொட்டானிக்கல் பார்ட்டில CMனா என்ன?

பூரி குமாரி : பொட்டானிக்கல் பார்ட்டினா?

கோல்கப்பா : அதான்டி, இலை பார்ட்டி!

பூரி குமாரி : ஓஹோ, அவங்களுக்கு இப்போ CMனா Connecting matters தான்.

கோல்கப்பா : என்னடி ஒத்த வார்த்தைல சுருக்கிட்ட?

பூரி குமாரி : அவங்க AIய எம்புரேஸ் பண்ணவங்க, அதனால இது ஒண்ணே போதும்!

கோல்கப்பா : அவங்க ஐயோ அம்மானு ஒரே அம்புரேசா இருக்காங்க? இதுல AI எங்கடி குறுக்கால வந்துது?

பூரி குமாரி : ஏங்க, அவங்க Anaivarukkumaana Iyakkamங்க!

கோல்கப்பா : ஹிஹிஹி! உன் வாயில சாஸ ஊத்த!

பூரி குமாரி : நெக்ஸ்ட் ப்ளீஸ்!

கோல்கப்பா : பாலிடிக்ச ப்ராக்டிகலா பண்ணி பாக்க ஒருத்தர் வந்திருக்காரே, அவருக்கு CMனா என்ன?

பூரி குமாரி : வேற என்ன? அவருக்கு Courage Matters! அவங்க பார்ட்டி ஆளுங்களுக்கு Control Matters!

கோல்கப்பா : ஒத்த ரோசா! உன்ன நல்லா வளத்துருக்காங்கம்மா, இன்றிலிருந்து நீ ஆட்டா பூரியில்லை! தோட்டா பூரி!

பூரி குமாரி : தேங்க்ஸ்ங்கோ!

கோல்கப்பா : நம்ம வாசகர்களுக்கு CMனா என்ன?


பூரி குமாரி : இந்த கோஷ்டிங்களோட Campaign Matters நமக்கு! அதனால பாத்து ஓட்டு போடுங்க! என்ன இவ்ளோ கேட்டீங்களே? இப்போ நீங்க சொல்லுங்க, மக்களுக்கு CMனா என்ன?

கோல்கப்பா : வயசுக்காரங்களுக்கு Chemistry Matters! வயசானவங்களுக்கு Cholesterol Matters!

Bye!