Tamil joke – தகுதி வாய்ந்த இல்லத்தரசி!

பூரிகுமாரி : இவங்க தாளிப்பு வடகம் இலியானா தானே? (Thalippu Vadagam Iliyaana)

கோல்கப்பா : இல்ல, இவங்க தகுதி வாய்ந்த இல்லத்தரசி! (Thagudhi Vaaindha Ilaththarasi)

இலியானா வடகம் : ஹிஹிஹி கோல்கப்பா, நீங்க ரொம்ப நாட்டி பாய்!

பூரிகுமாரி : என்ன கோல்கப்பா, இலியானாக்கு டைட்டில் குடுக்குறீங்க?

கோல்கப்பா : இலியானா ரேஞ்சு உனக்கு தெரியாதுமா.

இலியானா வடகம் : ஆமா, நா தகுதி வாய்ந்தவ தான். அதனால தான் உதவி தொகை வாங்குறேன்!

கோல்கப்பா : சொன்னேன்ல, இப்ப தெரியுதா இவங்க ரேஞ்சு?

இலியானா வடகம் : ஏம்மா, நீ வாங்குரியாம்மா?

கோல்கப்பா : இவ TVKகாரி, இவளுக்கு கெடைக்கல!

இலியானா வடகம் : அப்படியா, நீ கட்சில இருக்கியாம்மா?

கோல்கப்பா : இல்ல, இவ தற்குறிக்கு வாய்த்த குமாரி!!!

பூரிகுமாரி : ஹிஹிஹி கோல்கப்பா, இன்னைக்கு தான் நீங்க உண்மைய உரக்க சொல்லி இருக்கீங்க!

Tamil joke – Potato Productions

உருளைக்கிழங்கு : ப்ரோ, உங்கள வெச்சு நான் “பூரி கடை”னு படம் எடுக்கலாம்னு இருக்கேன்!
கோல்கப்பா : ஏன்? “இட்லி கடை” னு ஒரு படம் வர போகுதே அதனாலயா?உருளைக்கிழங்கு : ஆமாம்பா!
பூரிகுமாரி : கிட்னி திருட்ட பத்தி பேச சொன்னா, இந்த மீடியால இட்லி கடை, சட்னி கடைனு பேசிவிட்டு இருக்காங்க! இதுல நீ வேறயா?
கோல்கப்பா : அது கிட்னி திருட்டு இல்ல, முறைகேடு! கரெக்ட்டா சொல்லுமா!
பூரிகுமாரி : எல்லாம் நம்ம சாபக்கேடு!
கோல்கப்பா : செல்ல குட்டி பொட்டேட்டோ, நீ ஆசை படலாம், ஆனா நம்மால முடியாது.
உருளைக்கிழங்கு : ஏன் ப்ரோ?
கோல்கப்பா : படமெல்லாம் கிழங்கு உன்னால எடுக்க முடியாது! கழகத்தோட ஆளுங்க தான் எடுக்க முடியும்!

Tamil joke – Bay Leaf Manifestation

கோல்கப்பா: ஏண்டி, என் மேல அவ்ளோ லவ்வா உனக்கு?

பூரி குமாரி : ஏங்க கேக்கறீங்க?

கோல்கப்பா: பிரியாணி பட்டைல என் பர்த் டே நம்பரை எழுதி என்ன சர்ப்ரைஸ் பண்ணிட்ட! யூ ஆர் மை ஸ்வீட்டி!

பூரி குமாரி : இல்லீங்க, இது மணி அட்ராக்ட் பண்ற நம்பர்னு ஒரு அக்கா சொல்லுச்சு. அதான் எழுதி வெச்சேன், ஆனா தெரியாம பிரியாணி பண்ணும்போது அத போட்டுட்டேன்!

கோல்கப்பா: அடிப்பாவி, நா உன்னோட மணி பேங்க்னு இன்டேரெக்ட்டா சொல்றியா?

பூரி குமாரி : இல்லேங்க, டேரெக்ட்டாவா சொல்றேன், எனக்கு கவிதை எழுத சொன்னா பன் பட்டர்காரிக்கு எழுதுறீங்க! உங்கள லவ் பண்றவங்கள, நீங்க மதிக்கலேன்னா என்ன ஆகும்னு சொல்றேன் கேட்டுக்குங்க

(பூரி குமாரி பாடுகிறார்)

“நீங்க
கட்டை மனசா
மட்டை நாரா இருந்தீங்கனா

நாங்க
சட்டை பண்ண மாட்டோம்

பட்டைய மொத வேலையா
தூக்கி ஓரமா வெச்சிட்டு
எங்க லைப், எங்க பிரியாணினு
ஜாலியா இருப்போம்

கோல்கப்பா : கைஸ், இவ இன்னைக்கு என்னையே பிரியாணி போட்டு, என் ஈகோவையே பச்சடியா வச்சி ஜமாய்க்குற! நீங்களாவது இனிமே உங்க ஸ்பவுஸ கண்டுக்குங்க! இல்லேன்னா என் நெலமை தான்! ஹாப்பி சண்டே!

Golgappa’s love poem


பஞ்சு பொதி போன்ற தேகம்
எப்படி பார்த்தாலும்
கொஞ்சி அழைக்கும்
நேர்த்தியான வளைவுகள்

உன்னை கடக்கும் போது
சுண்டி இழுக்கும் சுகந்தம்

உன் சிற்றிடையில்
சற்றே எட்டி பார்க்கும்
மெல்லிய சிகப்பு நிறம்

கதகதப்பான உன்னை
ஒரு மழை நாளில்
நினைத்துக் கொண்டேன்

இந்நேரம் என் ஒரு கையில்
தேநீர் கோப்பையும்
மறு கையில்
நீயும் இருந்தால்

இந்த நீண்ட
மாலை பொழுது
மறையாமல்
அப்படியே
உறைந்து போகும்

சிறு வயதிலிருந்து
இன்று வரை
உன் மீதிருக்கும்
இனிமையான
தீரா காதல்
என்னை
வெண்ணெயாக்குகிறது

பேக்கரி ஷெல்பில்
பௌர்ணமி நிலவாய்
என் இனிய
பன் பட்டர் ஜாம்!

பூரி குமாரி : எனக்கு கவிதை சொல்ல சொன்னா, அந்த பன் பட்டர்காரிக்கு சொல்றீங்க?