
TVK @ 3 – The Curtain Falls, and a New Journey Begins!





கோல்கப்பா : போன வாரம் தான் இதே ட்ராக்ல டான்ஸ் ஆடுனோம். இன்னைக்கு நம்ம நெலமைய பாத்தியா டார்லிங்?
பூரி குமாரி : நம்ம நெலமை கெடக்கட்டும். எனக்கு அந்த நியூஸ கேட்ட ஒடனே பகீர்னு ஆயிடுச்சி. மக்களுக்கு அத கொண்டு போய் சேர்க்க இதான் சரியான கெட்டப்புனு முடிவு பண்ணிட்டேன்!
கோல்கப்பா : டபுள் என்ஜின் கதையை கேட்ட நமக்கே பீதியா இருக்கே? நம்ம பொட்டானிக்கல் ஆளுங்க மண்டை காய்ஞ்சு போயிருப்பாங்க..
பூரி குமாரி : அவங்கள விட நம்ம தலீவர் டென்சனாயிட்டாரு…டபுள் என்ஜின், டப்பா என்ஜின்னு ஏகத்துக்கும் காய்ச்சி எடுத்துட்டாரு..

கோல்கப்பா : என்னத்த சொல்ல, பெரிய கட்சி, பழைய கட்சி, கண்காட்சில இருக்குற கட்சி எல்லாரும் பவருக்கு ஆசைப்படுறாங்க…ஆனா அதுக்கு மக்கள் ஆதரவு முழுசா இருக்கணும்ங்கிறத மறந்துடுறாங்க..
பூரி குமாரி : மண்டைல மசாலா இருக்க, அவங்க என்ன நம்மள மாதிரி பூரி கோஷ்டியா?அவங்க…
கோல்கப்பா : ஹிஹிஹி, ப்ளீஸ் அந்த சென்டன்ஸ ரைமிங்கா முடிக்காதே…
பூரி குமாரி : கோல், கட்சி மட்டும் பளபளன்னு இருந்தா போதுமா? ஆட்சி பல்லிளிச்சா நெக்ஸ்ட் டைம் பவருக்கு எப்படி வர முடியும்?
கோல்கப்பா : நா என்ஜினு, எனக்கு தான் பவருன்னு உருட்டுறவங்க “Pantograph”அ மறந்துடுறாங்க குமாரி..

பூரி குமாரி : அவங்களுக்கு “Pantograph”அ எப்படிங்க சொல்லி புரிய வைக்குறது? ஒரே டெக்னிக்கல் பேரா இருக்கே கோல்?
கோல்கப்பா : அது இன்ஜின் மண்டைல இருக்க கொண்டைன்னு சொல்லுவோம்…டக்குனு புரிஞ்சிக்குவாங்க..ஹிஹிஹி ..
பூரி குமாரி : கலக்குறீங்க கோல்…நீங்க “Gang man” அப்டீன்னு ப்ரூவ் பண்ணிடீங்க…
கோல்கப்பா : என்னடி பொடி வச்சி பேசுற? புரியலையே…..
பூரி குமாரி : ட்ராக்குல இருக்குற க்ராக்கு உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அத தான் சொன்னேன்..
கோல்கப்பா : அடிப்பாவி… மக்களே, இதுக்கு மேல இவ கூட பேசுனா mock பண்ணியே எனக்கு இருக்குற கொஞ்ச மூக்கையும் ஒடைச்சிடுவா… போட்ட ரெண்டு கார்ட்டூனையும் பாத்து நீங்களே புரிஞ்சிக்கோங்க…Bye!



பூரி குமாரி: கோல்கப்பா, ஆசிரியர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள். செவிலியர்கள் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுகிறார்கள். தூய்மை பணியாளர்களால் நாம் சுத்தமான சூழலில் இருக்கிறோம். இதுபோல நாட்டுக்கு பணியாற்றும் மக்களை கைது செய்யலாமா?
கோல்கப்பா: தவறுதான், குமாரி. அவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. நிலையான வேலை, சமமான ஊதியம் போன்ற அடிப்படை உரிமைகளுக்காக மட்டும் குரல் கொடுத்தார்கள்.
பூரி குமாரி: ஒரு சமூகத்தின் நாகரிகம், அது பலவீனமானவர்களை எப்படிப் நடத்துகிறது என்பதில் தெரியுமுங்க!
கோல்கப்பா: பெண் ஊழியர்களை பயமுறுத்தி சிறைச்சாலைக்கு தள்ளுவதுதான் அதிகாரத்தின் வெற்றியாம்மா?
பூரி குமாரி: சரியா கேட்டீங்க கோல். கேள்வி கேட்கும் சமூகமே நாகரிகமான சமூகமாகும். அதேபோல் அந்த கேள்விகளை நினைவில் வைத்திருக்கும் சமூகமே விழிப்புணர்வு கொண்ட சமூகமா மாறுமுங்க.
கோல்கப்பா: மறதி அதிகாரத்தின் நண்பன். நினைவு மக்களின் ஆயுதம், குமாரி! நாமெல்லாம் தெருவில் இறங்கி போராட முடியாது என்றாலும் இந்த அநீதிகளை மறக்க கூடாது.
பூரி குமாரி: ஆமாம் கோல். மக்களே, நாம் இதை நினைவில் வைத்திருப்பது தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு “நீங்கள் தனியாக இல்லை” என்று சொல்லும் ஆறுதல்.
Let us stand with the protesting women.
Let us raise our voices for justice.
Let us empower those who fight for their rights.







