Cartoon – செல்லில் தமிழ் பெண்கள்

Post about Chennai protest

பூரி குமாரி: கோல்கப்பா, ஆசிரியர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள். செவிலியர்கள் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுகிறார்கள். தூய்மை பணியாளர்களால் நாம் சுத்தமான சூழலில் இருக்கிறோம். இதுபோல நாட்டுக்கு பணியாற்றும் மக்களை கைது செய்யலாமா?

கோல்கப்பா: தவறுதான், குமாரி. அவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. நிலையான வேலை, சமமான ஊதியம் போன்ற அடிப்படை உரிமைகளுக்காக மட்டும் குரல் கொடுத்தார்கள்.

பூரி குமாரி: ஒரு சமூகத்தின் நாகரிகம், அது பலவீனமானவர்களை எப்படிப் நடத்துகிறது என்பதில் தெரியுமுங்க!

கோல்கப்பா: பெண் ஊழியர்களை பயமுறுத்தி சிறைச்சாலைக்கு தள்ளுவதுதான் அதிகாரத்தின் வெற்றியாம்மா?

பூரி குமாரி: சரியா கேட்டீங்க கோல். கேள்வி கேட்கும் சமூகமே நாகரிகமான சமூகமாகும். அதேபோல் அந்த கேள்விகளை நினைவில் வைத்திருக்கும் சமூகமே விழிப்புணர்வு கொண்ட சமூகமா மாறுமுங்க.

கோல்கப்பா: மறதி அதிகாரத்தின் நண்பன். நினைவு மக்களின் ஆயுதம், குமாரி! நாமெல்லாம் தெருவில் இறங்கி போராட முடியாது என்றாலும் இந்த அநீதிகளை மறக்க கூடாது.

பூரி குமாரி: ஆமாம் கோல். மக்களே, நாம் இதை நினைவில் வைத்திருப்பது தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு “நீங்கள் தனியாக இல்லை” என்று சொல்லும் ஆறுதல்.

Let us stand with the protesting women.
Let us raise our voices for justice.
Let us empower those who fight for their rights.

A cartoon depicting various protests in Chennai