Tamil parody song – தம்பி அடுத்ததாக போக போற ஊருக்கு வழி சொல்லுவோம்!

A comic poster for Tamil Nadu By-polls

கோல்கப்பா : என்ன குமாரி? இடைத் தேர்தல் முடிவுகளை எப்புடி பாக்குற?

பூரிகுமாரி : நீங்க பாக்குற மாதிரி தான் கோல்!

கோல்கப்பா : ஹிஹிஹி..என்னடி ட்ரம்ஸ் மேடம் மாதிரி பதில் சொல்லுற?

பூரிகுமாரி : ஆமாங்க, “Don’t buy the band. Recruit its drummers!”ன்னு ஒரு quote இருக்கு. அது தான் இப்போ நடக்குது!

கோல்கப்பா : என் ஸ்வீட்டி..நல்லா புரிஞ்சிடுத்து..

பூரிகுமாரி : ரெண்டு தொகுதிக்கே இவ்வளோ கூத்து நடந்திருக்குங்க. இன்னும் அஞ்சு மிச்சம் இருக்கு! என்னென்ன நடக்குமோ தெரியலேங்க.

கோல்கப்பா : மிச்சமிருக்கிறதுல விராலிமலைக்குதான் நான் வெயிட்டிங். நீ எப்புடி?

பூரிகுமாரி : பேச substance..சாரி..subject நெறய இருக்குற தொகுதி அதுங்க.

கோல்கப்பா : ஹிஹிஹி, நீ ஆட்டா பூரி இல்லடி, கலாட்டா பூரி!

பூரிகுமாரி : என்ன கோல், something something சொல்லி என்ன கலாய்க்குறீங்க?

கோல்கப்பா : இதுக்கு மேல என்னால வெளிப்படையா சொல்ல முடியாதுடி. மக்களே, இப்போது காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு தேர்தல் வரும்போது அந்த மக்களின் மன நிலையும், ஆளும் தரப்பின் எண்ண ஓட்டமும் எப்படி இருக்கும் என நகைச்சுவையாக எழுதி இருக்கிறோம்.

பூரிகுமாரி : ஆம் மக்களே, “Something Something” என்ற திரைப்படத்திலிருந்து “தம்பி போற ஊருக்கு வழி சொல்லு” என்ற பாடலை சற்றே மாற்றி முயற்சி செய்திருக்கிறோம். பாடியும் பகிர்ந்தும் மகிழுங்கள். நன்றி.


மக்கள் :

தம்பி அடுத்ததாக போக போற
ஊருக்கு வழி சொல்லுவோம்!

குழு:

தம்பி அடுத்ததாக போக போற
ஊருக்கு வழி சொல்லுவோம்!

மக்கள் :

பரப்புரையில் நீ மற்றவர்
மேல் பழி சொல்லுவே!

குழு:

வெறுப்பை தூவி
பஞ்சமில்லாம பழி சொல்லுவே!

மக்கள் :

எங்க குழந்தைக்கு கூட
மொழி எழுதிட்டே!

குழு:

நல்உறவுக்கு கூட
சுழி போட்டுட்ட!

மக்கள் :

உன் கொத்து பரோட்டா
வெறும் கூப்பாடு!

குழு:

அப்ப தம்பிக்கு
நீயே வழி காட்டு!

மக்கள் :

அட எங்க ஊரு
அந்த பக்கம்,

தேர்தல் தேதி
யெல்லாம் வந்ததும்,

வண்டி கட்டி
கூட்டி போறேன், டோய்!

ஆளும் கட்சி :

விடையே விடையே
வாவ் வாவ் விடையே!

வலையே வலையே
விரிச்சேன் வலையே!

கலையே கலையே
கை வந்த கலையே!

அட கில்லிதான்
கில்லிதான் நான் கூட,

என் எதிரி
கோட்டையில்
குடைச்சலே!

அட உறவாய்
உணர்வாய்,

மக்கள் இதயக்
கூட்டுல நிலைச்சேனே!

வரும் தேர்தல் நெனப்புல
ராகா கூடத்தான்
காபி குடிக்க பறக்குறேன்!

விடையே விடையே
வாவ் வாவ் விடையே!

வலையே வலையே
விரிச்சேன் வலையே!

ரிசல்ட்டை பாத்த போது,
என் பாதி உசுர பாத்தேன்!

இலையும் ஒளியும்
போடும் வேஷத்தை,

வெளியில் போட்டு
ஒடைச்சேன்!

எனக்கு எதிர
ஒண்ணா நின்னா,

நான் சொல்லும் சேதி
இது தான்!

தேவை படுகிற
பேட்டரி ஏறினாலே,

பட்டன் போன் போல
கெடப்பேனே!

மக்கள் நெனைச்சா
வெளிச்சம் உருவாகும்!

அதே மக்கள் நெனைச்சா
உலகம் எப்ப வேணா இருட்டாகும்!

அவங்க நம்பிக்கை போதும்
குஷி ஆவேன்!

அவங்க பொழியும்
அன்பே எனக்கு விசையாகும்!

ரெண்டு பேருக்கு
நடுவில் தான்,

போட்டியென
நிறுவுறேனே!

விடையே விடையே
வாவ் வாவ் விடையே!

வலையே வலையே
விரிச்சேன் வலையே!

இன்னும் சில சீட்டு
கொடுக்கும் பொலிவை!

இன்னும் சில சீட்டு
கூட்டும் என் வலுவை!

எண்கள் குறைச்சல் கூட
ஒரு பாடம் என்று,

ஆறு மாசம்
பட்டு அறிஞ்சேனே!

ஒரு எதிரி
ரொம்ப
செழிப்பு!

மறு எதிரியை
விதைத்தவர்
ரொம்ப சிறப்பு!

செழிப்பும் சிறப்பும்
சுயமாய் சேர்த்து,

மக்களை நோக்கி
நானும் வந்தேன்!

என் பேச்சை
கேக்க வரும் போது,

நான் தருவேன்
சதுரக் குறியீடு!

என் வீச்சை
பெருக்க வரும் பொது,

சொல்வேன் என் நெஞ்சு
உங்கள் உரைவீடு!

என் நிழல் தான்
யாருமில்லை எனும் போதும்,

சிறு தழல்கள்
எனை சுழல கண்டேனே!

என்னை நகலெடுக்க
தொடர் ஓட்டத்தில்,

பங்கெடுக்க
யாரும் நிகர் இல்லையே!

விடையே விடையே
வாவ் வாவ் விடையே!

வலையே வலையே
விரிச்சேன் வலையே!

Tamil Parody Song – காலி தொகுதி… மீதி தொகுதி… சேதி ஒண்ணு கேளு!

A paroody song inspired by Karakaatakaaran movie song in tamil

கோல்கப்பா : என்ன குமாரி? அரசியல் நிலவரமெல்லாம் எப்படி இருக்கு?

பூரி குமாரி : அமோகமா இருக்குங்க. ஆமோதிக்குறீங்கன்னா கைய உயர்த்துங்க!

கோல்கப்பா : ஏண்டி, நான் ஒருத்தன் தானே இருக்கேன். கூட்டத்தை பாத்து பேசுற மாதிரி சொல்லுற?

பூரி குமாரி : எழுதி வெச்சுக்குங்க, எழுதி வெச்சுக்குங்க..உங்க கை கறை படிஞ்சி இருக்குறதால தான் நீங்க கைய தூக்க மாட்டேங்குறீங்க!

கோல்கப்பா : மிச்சத்தை நானே சொல்லிடுறேன்..அதனால தான் மக்கள் தேர்தல் அரசியல்லர்ந்து சிலரை தூக்கி போட்டுட்டாங்க..சரியா?

பூரி குமாரி : ஹிஹிஹி…நான் தான் பாதிக்கப்பட்டு இருக்கேன் நெனச்சேன்..நீங்களுமா?

கோல்கப்பா : ஏண்டி, நாம ரெண்டு பெரும் ஒண்ணா தானே டெய்லி சட்டசபை லைவ் பாக்குறோம்?

பூரி குமாரி : என்னமோ போங்க கோல். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஆக்கபூர்வமான விவாதங்களை செய்யாம சும்மா நச நசன்னு பேசிகிட்டு இருக்காங்க.

கோல்கப்பா : வாயில வடை சுடுறீங்கன்னு ரெண்டு தரப்பும் மாத்தி மாத்தி சொல்லறீங்களே, இதை பாக்குற ஜனங்க என்ன நினைப்பாங்கன்னு சபாநாயகர் வருத்தப்பட்டு கமெண்ட் பண்ற அளவுக்கு தான் நிலவரம் இருக்கு.

பூரி குமாரி :வடைன்னு பேசுறவங்களுக்கு பாயசத்தை போடுவோம் கோல். மக்களே, இடை தேர்தலை பெரிதும் நம்பி இருக்கும் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை “மாங்குயிலே பூங்குயிலே” என்ற பாடலை தழுவி நகைச்சுவையாக எழுதி இருக்கிறோம். படித்தும் சிறிதும் மகிழுங்கள். நன்றி.


ஆளும் கட்சி :

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

குத்து குத்து.. ஓட்டாலே..
நான் எட்டி பிடிப்பேன்..டோட்டலே..

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

புட்டு புட்டு வெளக்கி
சொல்ல ஏகப்பட்ட வம்பு!

அத லிஸ்டெடுத்து பைல்ல
வெச்சா பொங்குதடி தெம்பு!

மீட்டெடுத்து குடுத்த
அந்த பரந்தூரு ஊரு!

இப்போ, திட்டம் கொஞ்சம்
மாறுதடி..என்ன பாடு ஜோரு!

கண்ணுக்கழகா, மண்ணு சிரிச்சா,
சன்னு மனச, சுட்டு எரிச்சா..

தன்னந்தனியா ஆட்சி அமைச்சா,
கண்ணில் விரலை ஆட்டி கொடைஞ்சா..

ஏறெடுத்து பார்த்து,
யம்மா, என் சின்னத்துக்கு குத்து!

சீரெடுத்து வாரேன்,
யம்மா, பாத்து என்னை தேத்து!

காத்தடிக்கும்
கருவூல நிலைக்கு,
நிச்சயம் பதிலு
சொல்லிடும் விசிலு!

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

ஒன்ன மறந்திருக்க
ஒரு பொழுதும் அறியேன்!

எம்மா, எண்ணி வெரல விட்டு
வேறெதையும் தெரியேன்!

நெஞ்சத்தில குடியிருக்கும், பஞ்சு
மனசு பேன்ஸு!

யம்மா, இங்க அங்க பேசி
வரும் மீதியிருக்கும் ப்ளான்ஸு!

முறியடிப்போம்
சிண்டு சேட்டை!

பாய்ந்து கடப்போம்
பெரும்பான்மை கோட்டை !

சலவை செய்ய தான்
தேடி அழைச்சேன்!

சம்மதம்னு
சொல்லு தொகுதீ!

பிரச்சாரத்துக்கு வாரேன்..
யம்மா, பில்டப்பூ தாரேன்!

நம்பி நீயும் போட்டா..
யம்மா, மீதி வழி போறேன்!

மத்ததை மறந்து, போடணும் எனக்கு..
உங்கண்ணன் கணக்கு, மொத்தமும் உனக்கு!

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

குத்து குத்து.. ஓட்டாலே..
நான் எட்டி பிடிப்பேன்..டோட்டலே..

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?