Tamil parody song – எண் ஒன்று கண்டேன்!

Arch rivals in Tamil Nadu politics

மக்களே, Exit polls ரிசல்ட்டை பாத்து மண்டை காய்ஞ்சு போச்சா? ஹிஹிஹி ..நம்மள மாதிரி தான் கட்சிக்காரர்களும் இருக்காங்க…அவங்க படுற பாடு தான் இந்த பாட்டு…படிச்சி என்ஜாய் பண்ணுங்க…Bye!


தவெக : எண் ஒன்று கண்டேன்,
பொருள் அங்கு இல்லை!
என்னென்று நான் சொல்லலாகுமா?

திமுக : என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
தீ ஒன்று கண்டேன்,
Fire காண வில்லை!

தவெக : ஏனென்று நான் சொல்லலாகுமா?

திமுக :ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

தவெக : களமாடும் வியூகம்,
நவநாகரீகம்!

Loud ஆன சின்னம்,
Proud ஆக வெல்லும்!

திமுக : நடமாடும் செல்வம்,
பகட்டான பிம்பம்!

பழங்காலச் சின்னம்,
கிழக்கால மின்னும்!

தவெக : அன்பை அள்ளி தரும்,
பயண உலா!
துள்ளி வரும் இணைய நிலா!

திமுக : துவண்டு விழும்,
பொடி நடையால்!
துவண்டு விழும், பொடி நடையால்!

தவெக : விசிலோடு மகிழ்ந்தாடும்,
எண் அந்த எண்ணல்லவோ!

தவெக : வந்தேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : நின்றேன்

திமுக : ஹ்ம்ம்

ஆண் : வென்றேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : எண் ஒன்று கண்டேன்,
பொருள் அங்கு இல்லை!
என்னென்று நான் சொல்லலாகுமா?

திமுக : என்னென்று நான் சொல்ல வேண்டுமா?

தவெக : நான் பார்த்த எண்ணை,
நீ பார்க்க வில்லை!

நீ பார்த்த எண்ணை,
நான் பார்க்க வில்லை!

நீ பார்த்த எண்ணை,
நான் பார்க்க வில்லை!

திமுக : உன் பார்வை போலே,
என் பார்வை இல்லை!

நான் ஆண்ட ஆட்சி,
நீ காண வில்லை!

நான் கொண்ட மாட்சி,
நீ காண வில்லை!

தவெக : என் வழியில்,
நீ இருந்தாய்!
என் பழியில், நீ இருந்தாய்!

திமுக : உன் வடிவில்,
நான் இருந்தேன்!
என் உழைப்பில், நான் வளர்ந்தேன்!

தவெக : நீ இன்றி நான் இல்லை,
நான் இருந்தால் நீ இல்லை!

தவெக : வந்தேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : நின்றேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : வென்றேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : எண் ஒன்று கண்டேன்,
பொருள் அங்கு இல்லை!
என்னென்று நான் சொல்லலாகுமா?

திமுக : தீ ஒன்று கண்டேன்,
Fire காண வில்லை!

தவெக : ஏனென்று நான் சொல்லலாகுமா?

திமுக : ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?