Breaking news!

Madurai constituency DMK leader PTR

பூரி குமாரி : என்ன கோல், மல்லிப்பூ மேன் ஷார்ட் ப்ரேக்குல போறேன்னு பொசுக்குன்னு சொல்லிட்டாரு!

கோல்கப்பா : Reality show விளம்பர இடைவேளையா இது? Ground reality களேபர ஷாக் தான்,வேறென்ன?

பூரி குமாரி : எனக்கென்னமோ வருத்தம் தான். இவரு எப்போ இந்த முடிவை எடுத்திருப்பாரு கோல்?

கோல்கப்பா : ஹிஹிஹி, எப்போ உங்களுக்கு 35% ஓட்டுதான் வந்திருக்கு, மீதி 65% மக்கள் உங்களுக்கு எதிரா ஓட்டு போட்டுருக்காங்கனு அவரு கட்சிக்காரங்க ஆளுங்கட்சியை பாத்து பேச ஆரம்பிச்சாங்களோ, அப்போவே Data மேன் டாட்டா சொல்லிட்டு போறதுன்னு முடிவு பண்ணி இருப்பார்.

பூரி குமாரி : வாஸ்தவம் தான் கோல். நிதர்சனத்தை ஏத்துக்காம, ஊருசனத்தை மடை மாத்துற வேலைதான் நடக்குது. என்னத்த சொல்ல?

கோல்கப்பா : நீ ஏண்டி அவருக்கு ஈடா மூக்கை சிந்துற? national லெவல்ல அவரை தூக்கி புடிச்ச கட்சி, இன்னிக்கு distressல இருக்கு..கொள்கை விளக்கை தேய்ச்சி ஒளியேத்த வேணாமா?

பூரி குமாரி : ஒளியேத்தறத விடுங்க. அவரையே மறைமுகமா வெளியேத்தியே எவ்ளோ நாள் ஆச்சு..

கோல்கப்பா : ஹ்ம்ம்..expatriate நான்னு ஜம்பம் அடிச்சிவரு, அவரு party expiry ஆனதால அவங்களோட affiliate போதும்ன்னு நெனச்சிட்டார் போல!

பூரி குமாரி : ஹிஹிஹி, அவரு எப்பவும் rationalஆ decision எடுக்குறவர் கோல்!

கோல்கப்பா : என்னது, முத்தமிழ் அறிஞர் தான் inspirationன்னு சொல்லிட்டு, migrationல வந்து பத்து வருஷமா பொது வாழ்க்கைல இருந்துட்டு, இன்னைக்கு frustrationல இப்படி ஒரு முடிவு எடுத்திறதா rational decision?

பூரி குமாரி : ஹிஹிஹி, ஆயிரம் ரூபா குடுத்தோம்னு பெருமை பேசுறவங்களுக்கு ரெண்டாயிரம் வருஷம் முன்னாடியே வள்ளுவ பெருந்தகை வகையா இந்த குறளை எழுதி வெச்சிட்டு போய் இருக்காரு கோல் ..

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.

கோல்கப்பா : இதுக்கு அர்த்தம் என்னடி?

பூரி குமாரி : இந்த குறளுக்கு பெருமதிப்பிற்குரிய சாலமன் பாப்பையா அவர்கள் எழுதிய இந்த குறள் விளக்கம் இது தான்.

தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.”

கோல்கப்பா : பரம்பரை பெருமையை தூக்கி புடிச்சி பேசினவருக்கு நச்ன்னு பொருந்துற குறள் இது. நாலு பக்க லெட்டர் எழுதுறத்துக்கு முன்னாடி இந்த ரெண்டடி குறளை ஒரு முறை படித்திருந்தால் அவர் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம் குமாரி..அது சரி, இதற்கு முத்தமிழ் அறிஞர் எழுதிய விளக்கம் என்ன?

பூரி குமாரி : “போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.”

கோல்கப்பா : ஹ்ம்ம். இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா இவர் குறளையும் படிக்கல. அவங்க ஊர்க்காரர் பாப்பையா அவர்கள் எழுதிய விளக்கத்தையும் படிக்கல..அவங்க கட்சி தலைவர் அதுக்கு குடுத்த விளக்கத்தையும் படிக்கலேன்னு..

பூரி குமாரி : அவரை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை கோல். “நிலை மக்கள் சால உடைத்து எனினும்” என்ற குறள் வேண்டுமானால் அவர் முடிவுக்கு காரணமாய் இருக்கலாம்…

கோல்கப்பா : அது என்னடி குறள்?

பூரி குமாரி : புக்க எடுத்து படிச்சி பாருங்க கோல். நாளைக்கு நீங்களே வந்து இன்னும் பத்து குறளை எடுத்துக்காட்டா சொல்லுவீங்க..

கோல்கப்பா : அருமை குமாரி! மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி!

Tamil Joke – மதுரை மல்லி

Cartoon of a minister linked to Dravidian ideology standing at a polling booth, wearing a jasmine garland tied around his wrist as a sign of faith on voting day, highlighting the contrast between public ideology and private ritual.

பூரி குமாரி : ஏமிரா..மோக்ரா? என்ன கோல்? தலீவரு மல்லிப்பூ கையோட ஓட்டு போட போயிருக்காரு ?

கோல்கப்பா :ஹிஹிஹி…ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல குமாரி!

பூரி குமாரி : எலக்சனுக்கு மொதல் நாள் அழுகிறத தொடச்சிக்க கர்சீப்பூ, அடுத்த நாள் மல்லிப்பூ…மனுஷன் ட்ரெண்டிங்கிலயே இருக்காரு!

கோல்கப்பா : அடிப்பாவி, அதையும் பாத்துட்டியா…

பூரி குமாரி : தொகுதியில் தத்தளிப்பூ..நெஞ்சிலே பதைபதைப்பூ..
கையிலே என்ன பூ..மல்லிப்பூ…மல்லிப்பூ..

கோல்கப்பா : அள்ளுறியே தங்கம்..அள்ளுறியே..கால்குலேட்டர் தலீவருக்கு இந்த பாட்ட எப்புடி கனெக்ட் பண்ண?

பூரி குமாரி : அவருக்கு ஆப்போணண்டு கேண்டிடேட் யாரு?

கோல்கப்பா : நம்ம அக்காவோட மாமா…சுந்தர் சி…

பூரி குமாரி : ஹிஹிஹிஹி …சுந்தர் சி க்கு பக்க துணை குஷ்பூ, நம்ம தலீவருக்கு பக்க துணை மல்லிப்பூ….

கோல்கப்பா : அடியேய், அவரு பாரின்ல படிச்ச மனுஷன்டி..அவரு பிரைனு வேற லெவல்…

பூரி குமாரி : என்ன கோல், முட்டு பலமா குடுக்குறீங்க?

கோல்கப்பா : அவரு திராவிட வார்ப்பூ, கொள்கை கூட்ட வளர்ப்பூடி…..

பூரி குமாரி : மல்லிப்பூ மேட்டருக்கு பொருந்தலையே கோல்?

கோல்கப்பா : துளசி வாசம் மாறினாலும் மாறும், நம்ம தவசி வாக்கு மாற மாட்டான்னு ஒரு பன்ச் தெரியும்ல..அத மாதிரி எதையோ சொல்ல ட்ரை பண்றாருன்னு நெனைக்கிறேன்..

பூரி குமாரி : புரியுற மாதிரி சொல்லுங்க கோல்..

கோல்கப்பா : தலீவரு சொல்ல வர்ரதென்னன்னா, மல்லிப்பூ வெள்ளை கலர் மாறினாலும் மாறும், ஆனா என் வெள்ளை மனம் மாறாதுன்னு சொல்ல வரார்..

பூரி குமாரி : ஹிஹிஹி…உங்க டீகோடிங்க்ல தீய வெக்க!

கோல்கப்பா (முறைக்கிறார்) : அப்போ நீ சொல்லு? என்னவா இருக்கும்?

பூரி குமாரி : அவரு கட்சி பாஜகவோட கள்ள கூட்டணிலே இருக்குன்னு ஒரு பேச்சு அடிபடுதுல்ல?

கோல்கப்பா : அடியா?? மிதியோ மிதின்னு மிதிபடுது?

பூரி குமாரி : ரையிட்டு..அதேதான்.. நாங்க தாமரை கூட இல்ல…மல்லிப்பூ கூட இருக்கோம்னு சொல்ல வரார்….

கோல்கப்பா : ஹிஹிஹி…ஆத்தீ…இது வேற ரகமால்ல இருக்கு!! பவழ விழா கட்சிக்கு வந்த சோதனைக்கு, இதை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வேற என்ன இருக்க முடியும்?

பூரி குமாரி : By all means, வெற்றிக்கு Jasmine தான் துணைன்னு நம்புறார் போல தலீவர்..

கோல்கப்பா : GST பத்தி zestyயா பேசி பொளந்து கட்டுனவர, இன்னிக்கு கொசுவத்தி கேசு நாமெல்லாம் பேசுற நிலைமைக்கு வந்துட்டாரே குமாரி …அதான் வருத்தமா இருக்கு…

பூரி குமாரி : உங்க வருத்தம் இருக்கட்டும்…அவருக்கு மகளிர் சார்பா நா ஒரு செய்தி சொல்ல நினைக்குறேன்…

கோல்கப்பா : சொல்லு..சொல்லு…

பூரி குமாரி : “தகுதி வாய்ந்த” வேட்பாளரை மக்கள் என்னிக்குமே கை விட மாட்டாங்க தலீவரே..ஓட்டு கண்டிப்பா போடுவாங்க..ஆனா எந்த எலக்சன்லங்கிறதுதான் மேட்டரே!!

கோல்கப்பா : Golden words குமாரி…”தகுதி வாய்ந்த” இல்லத்தரசிங்கிற பொன்மொழிக்கு சொந்தக்காரர்…”தருவோம்னு சொன்னோம், ஆனா எப்போ தருவோம்னு சொன்னோமா”? அப்படீன்னு பகுமானமா வந்த பதிலுக்கு சொந்தக்காரர்…அவர் பொருளையே எடுத்து அவரையே போடுறதுங்குறது இது தான்..

பூரி குமாரி : டபுள் வாட்ச் கட்டி பேமஸ் ஆன மனுஷன், இன்னிக்கு டவுட்டா வாட்ச் பண்றார்ர்ர்..

கோல்கப்பா :ஹிஹிஹி..போதும்டி..என்னால முடியல…மக்களே கார்ட்டூனா பாத்து கடுப்பாய் இருப்பீங்க ஒரு மாசமா..ஜோக்கை என்ஜாய் பண்ணுங்க..சிரிங்க..புடிச்சிருந்தா, உங்க சங்கத்து ஆளுங்களுக்கு ஷேர் பண்ணுங்க..Bye..