Tamil Joke – சாயா (Tea) சக்தி

A candid conversation about politics

கோல்கப்பா : நம்ம “ஸ்டார்ட் அப் கட்சி” மீட்டிங்க பாத்தியா டார்லிங்?

பூரி குமாரி : ஹிஹிஹி, சாரிங்க, நான் களத்துல இருந்தேன்! அதனால பாக்கலை, நீங்களே சொல்லுங்க!

கோல்கப்பா : ஹாஹாஹா, அவங்க கட்சில ஹயரிங் நடக்குதுன்னு தலைவரே சொல்லிட்டாரு. எனக்கென்னமோ நீ அப்ளை பண்ணா சேத்துக்குவாங்கன்னு நெனைக்குறேன்! என்ன சொல்ற?

பூரி குமாரி : எனக்கு என்ன தகுதி இருக்குன்னு நெனைக்குறீங்க கோல்?

கோல்கப்பா : உனக்கு தான் பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு அவங்க பார்ட்டில சேர..ஹிஹீஹீ ..

பூரி குமாரி : இதுக்கு நான் லைவே பாத்திருக்கலாம், புதிர் போடாம சொல்லுங்க கோல்.

டீ கடைக்காரர்: ஏன்மா ஒத்த ரோசா, மக்கள் எந்த மூட்ல இருந்தாலும் உன் கடைக்கு தான் வராங்க. சந்தோசமா இருந்தாலும் ஒரு பிளேட் பானி பூரி சாப்புடுறாங்க, மனசு நொந்து இருந்தாலும் ஒரு பிளேட் பானி பூரி சாப்புடுறாங்க! நீதான்மா மக்களோட சுக துக்கத்துல அவங்களோட நிக்குற!

கோல்கப்பா : ஹிஹிஹி. பாய்ண்டை புடுச்சிடீங்க மாஸ்டர்! நீதான்மா உண்மையா உணர்வுப்பூர்வமா மக்களோட நிக்குற! இந்த தகுதி ஒண்ணே போதும்!

டீ கடைக்காரர்: பானி பூரி சாப்பிடும்போது,பசங்க “ஒண்ணு, இன்னொன்னு” அப்படீன்னு ஆர்வமா சொல்றானுங்க..அந்த கோஷம் நேச்சுரலாவே உங்க வகையறாவுக்கு செட் ஆகிடும்!

கோல்கப்பா : அட அட அடடா, கலக்கிடீங்க மாஸ்டர். நெக்ஸ்ட் ப்ளீஸ்?

பூரி குமாரி : என்ன மோட்டிவேட் பண்றது இருக்கட்டும் மாஸ்டர். ஏதோ தீய சக்தி, தூய சக்தின்னு ஷார்ட்ஸ் வந்தது. நீங்கதான் “சாயா சக்தியாச்சே”, நீங்களும் அப்ளை பண்ணுங்க!

கோல்கப்பா : அடிப்பாவி, கலக்கியடியே. ஷார்ட்ஸ் பாத்தே இந்த கமெண்ட் அடிக்கிற? நீ அரை மணி நேரம் பேச்ச கேட்டிருந்தீன்னா ப்ளாஸ்ட்டு தான் போ!!

பூரி குமாரி : மாஸ்டர், நம்ம பசங்க அக்கா, தங்கச்சி, வைப் அப்புறம் ப்ரெண்ட்ஸ சில சமயம் “டீ” போட்டு கூப்பிடுவாங்க. “டீ”ன்னாலே ஒரு VIBE இருக்கும். “டீ”ன்னாலே ஒரு எனர்ஜி வருமே? அவங்க கட்சி பேருல கூட “டீ” இருக்கும். இதை சொல்லி அப்ளிகேஷன் போடுங்க மாஸ்டர்…ஹிஹிஹி..

கோல்கப்பா : ஹிஹிஹி…

டீ கடைக்காரர் : என் graphஅ எங்கயோ கொண்டு போய்ட்டேம்மா…நம்ம ரெண்டு பேருக்கும் ஏதோ சில பாயிண்ட்ஸ் இருக்கும்மா. நம்ம தலை கோல்கப்பாவை எப்படி பொசிஷன் பண்றது?

பூரி குமாரி : ஹிஹிஹி, இவர்தான் தலைமைக்கு சரியான ஆள்னு சொல்லலாம் மாஸ்டர்!

டீ கடைக்காரர் : எனக்கு புரியலம்மா??

கோல்கப்பா : வெஷம் , வெஷம்!! எனக்கு வயசாயிடுச்சி, தலைக்கு டை போடுறேன்னு நக்கலா சொல்றா மாஸ்டர்!

டீ கடைக்காரர் : ஹாஹாஹா, “தலைமை”க்கு தரமான டெபனிஷனா இருக்கே! அள்ளுறம்மா நீ!!

பூரி குமாரி : இவரு மாதிரி கல்லாபொட்டி எக்ஸ்பீரியன்ஸ் ஆளுங்களுக்கு அவங்க கட்சில வேகன்ஸி இருக்கு மாஸ்டர்!

கோல்கப்பா : அடியேய் உன்னை….(மாஸ்டர் பக்கம் திரும்பி) நா கவுண்டர் குடுக்குற ஆளுன்னு சொல்றா மாஸ்டர்!

டீ கடைக்காரர் : ரெண்டு சாம்பிள் சொல்லுமா, இவர் தேறுவாரான்னு பாக்கலாம்?

பூரி குமாரி : கோல், இப்போ நீங்க ஸ்டார்ட் அப் கட்சில ஒரு பொறுப்புல இருக்கீங்கன்னு நெனச்சுக்கோங்க! நா ஆளும் தரப்பு கீவேர்ட்ஸ் சொல்றேன். அதுக்கு ஒரு கவுண்டர் குடுங்க.

கோல்கப்பா : நீ வேணாம்! மாஸ்டர் நீங்க கேளுங்க..

டீ கடைக்காரர் : (யோசிக்கிறார்) கட்டுக்கோப்பு!

பூரி குமாரி : தெரியலேன்னா பாஸ் சொல்லிடுங்க கோல்! நா ரெடி (கையை உயர்த்துகிறார்)

கோல்கப்பா : கஜானா காலி. எந்த பைலும் மூவ் ஆகாம, அரசாங்கம் முடங்கி இருக்கு. “கட்டு” கோப்பு எல்லா துறை டேபிள்லயும் இருக்கு! எப்பூடி? ஹிஹிஹி….

பூரி குமாரி : வாவ், நச்சுனு சொல்லிடீங்க கோல்.

டீ கடைக்காரர் : தல, செம மேட்டர இருக்கே!! நெக்ஸ்ட் “உபி

கோல்கப்பா : “உபி” க்கள் எல்லோரும் ஜுனியர் தலீவர் பின்னாடி தான்!!!

பூரி குமாரி : மாஸான பிட்டு கோல்!!

டீ கடைக்காரர் : இந்த கட்சில ஒரு அட்வான்டேஜ் இருக்கு தல. நாம செலெக்ட்டிவா இருக்கலாம். நமக்கு வசதிப்பட்ட டாபிக்கை மட்டும் பேசலாம். திருப்பரங்குன்றத்துல விளக்கேத்துறது களப்பிரச்சினையில்லையா? வாயையே தொறக்கலை மனுசன்.

கோல்கப்பா : உன் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுடிச்சி, நீயே சொல்லு டார்லிங்!

பூரி குமாரி : Thalaivar Vaaila Kozhukattai (தலைவர் வாயில கொழுக்கட்டை)! ஹிஹ்ஹிஹி !!

டீ கடைக்காரர் : முடிஞ்ச்…மக்களே இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிச்சிருந்தா, உங்க நண்பர்களோட பகிருங்கள். Bye!!

Political Parody Rhymes – 3

tamil rhymes

பூரி குமாரி : ஏங்க, இந்த வார ரைம்ஸ்க்கு என்ன தீமுங்க?

கோல்கப்பா : எனக்கு மண்டை வறண்டு கெடக்கு, நீயே யோசிச்சு சொல்லு!

பூரி குமாரி : ஊரே வெள்ள காடா இருக்கு, நீங்க என்ன மண்டை காஞ்சு இருக்கீங்க?

கோல்கப்பா : ஹா, ஐடியா! மழையை வெச்சி ரைம்ஸ் போடலாம்.

பூரி குமாரி : சும்மாவே ஜனங்க மாநகராட்சியை திட்டுவாங்க! இதுல திட்டவான்னு இந்த புயலுக்கு பேரு வச்சிருக்காங்க!!

கோல்கப்பா : ஹீஹீஹீ, அது திட்டவா இல்ல டார்லிங்! “டிட்வா“!!

பூரி குமாரி : ஹாஹாஹா, இது நீங்க கொள்கைப்பா ஆனா மாதிரி இருக்கு! எனக்கு என்னவோ புயலுக்கு பேரு வெச்சவங்க மேல சந்தேகமா இருக்கு!

கோல்கப்பா : பேருல இருக்க அக்கப்போரவிட, ஊருல ஜாஸ்தியா இருக்கு! மக்களே, இந்த ஒரிஜினல் ரைம்ஸ் கேட்டுட்டு, நம்ம வெர்ஷனை படிச்சி என்ஜாய் பண்ணுங்க!

பூரி குமாரி : நம்ம ரைம்ஸ் படிக்கறதுக்கு முன்னாடி இந்த படத்தை நல்லா பாத்துக்குங்க, மக்கள் படுற கஷ்டம் புரியும்!

chennai rain

பொட்டி
கண்ணம்மா!!

இப்போ மழை வந்தா
என்ன பண்றது?

எல்லாரும் சேர்ந்து
போட்டிங் போலாமா?

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

சின்ன தொகையை
விட்டு வைத்தேன்!

பம்பு மோட்டார்
எடுத்து வைத்தேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வீதி பக்கம்
வந்து பார்த்தேன்!

பேட்ச் ஒர்க்க
போட்டு வைத்தேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வெள்ள காடாய்
நகரம் மாறும்!

பாலம் எல்லாம்
பார்க்கிங் ஆகும்!

போ மழையே போ,
போ மழையே போ!!

ஏரி குளம்
விற்று விட்டோம்!

வயல் வெளியில்
கல்லு நட்டோம்!

போ மழையே போ,
போ மழையே போ!!

கள்வர் நாங்கள்
கொழிக்க வேண்டும்!

தொகை என் பையில்
கொட்ட வேண்டும்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வடிகால் நாங்கள்
போடவில்லை!

நீர் நிலைகள்
தூர் வாரவில்லை!

போ மழையே போ!


காட்டி கொடுக்காமல்,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

Diwali Gift Hamper – part 5

பூரி குமாரி : ஏங்க, மக்கள் பிரதான எதிர்கட்சி தலைவருக்கு என்ன செலக்ட் பண்ணி இருக்காங்க?

கோல்கப்பா : பல சிரமங்களை தாண்டி, தன்னை தலைவராக அவர் நிலை நிறுத்திக் கொண்டிருப்பதால் இந்த ஐட்டத்தை பரிசாக கொடுக்கிறார்கள்.

பூரி குமாரி : தர்ம யுத்த தலைவருக்கு என்ன பரிசு?

கோல்கப்பா : இதோ இருக்கு பாரு!

பூரி குமாரி : ஹிஹிஹி, குக்கர் தலைவருக்கு என்ன பரிசு?

கோல்கப்பா : இந்த ஆப்ஷன் எப்புடி?

பூரி குமாரி : செம, நம்ம மேங்கோ பார்ட்டிக்கு என்ன கிப்ட்ங்க?

கோல்கப்பா : சீனியருக்கும் ஜுனியருக்கும் இந்த ஐட்டம் தான்!

பூரி குமாரி : ஹாஹாஹா, டாப்பான செலெக்ஷன். நம்ம ட்ரம்ஸ் பார்ட்டிக்கு என்ன இருக்கு?

கோல்கப்பா : இங்கே பார்!

பூரி குமாரி : அட்டகாசமான பரிசுங்க! கூட்டணி பேச்சுவார்த்தை இவங்க எப்படி நடத்துவாங்கன்னு மக்கள் நல்லா புரிஞ்சு வெச்சிருக்காங்க! சரி, நம்ம டார்ச் லைட் மேனுக்கு என்ன இருக்கு?

கோல்கப்பா : அவருக்கு ஒரு சேஞ்சுக்கு ஜனங்க கேம் கார்டு குடுத்திருக்காங்க!

பூரி குமாரி : ஹய்யோ, கோல்கப்பா! ஒரு செல் அமீபா மாதிரி இப்போ இருக்காரு. அப்புறம், அவரோட நிலைப்பாட்டை மாத்திகிட்டதால இந்த பரிசுக்கு சொந்தக்காரர் ஆகிட்டாரு போல?

கோல்கப்பா : கரெக்ட் குமாரி!

பூரி குமாரி : ஒரு முக்கியமான தலைவரை மறந்துட்டோமே? நம்ம கடல்மான் சாருக்கு என்ன ஐட்டம்?

கோல்கப்பா : அவருக்கு, ஒரு ஐட்டம் இல்ல, ரெண்டு பரிசு தராங்க மக்கள்.

பூரி குமாரி : ஆஹா, அருமையான பொருள். இன்னொன்னு என்ன?

கோல்கப்பா : கோல்கப்பா : இது ரெண்டாவது ஐட்டம்.

பூரி குமாரி : அடடா, அடடா! அற்புதம்.நம்ம புது கட்சி தலைவருக்கு என்ன பரிசு தந்திருக்காங்க?

கோல்கப்பா : அவருக்கும் டபுள் தமாக்கா! ரெண்டு ஐட்டம் இருக்கு. இந்த கிப்ட ஆளுங்கட்சி குடுக்குது, ரெண்டாவதை மக்கள் குடுக்கறாங்க!

பூரி குமாரி : வாவ், மாசா இருக்கே ஜனங்க செலெக்ஷன்! இவ்வளவு தலைவர்களுக்கு பரிசு தந்த ஜனங்க அந்த கட்சிகளுக்காக பேசும் வாடகை வாய்களுக்கு என்ன கிப்ட தந்திருக்காங்க?

கோல்கப்பா : நீயே பாரு!

பூரி குமாரி : சான்ஸே இல்லீங்க, ஜனங்க நெஜமாவே கலக்குறாங்க!

கோல்கப்பா : ஜனங்க கலக்குறது இருக்கட்டும். ஜனங்களை காப்பாத்த வேண்டிய அதிகாரிகள் துப்புகெட்டத்தனமா இருக்காங்களே, அவங்களுக்கு இதான் கெடச்சிருக்கு!

பூரி குமாரி : இவ்வளவு பேருக்கும் மக்கள் தீபாவளி பரிசு கொடுத்திருக்காங்க. அந்த மக்கள் தலைவர்களிடம் இருந்து என்ன பரிசு எதிர்பாக்குறாங்க?

கோல்கப்பா : வேறென்ன? இதை தான்!

பூரி குமாரி : ஆமாங்க! மக்கள் உண்மையையும் நேர்மையான ஆட்சியையும் தான் எதிர்பாக்குறாங்க!

கோல்கப்பா : கடைசியா, மக்கள் நம்ம ஸ்டோரி பூரிக்கு என்ன குடுத்திருக்காங்க தெரியுமா? இங்கே பார் !

பூரி குமாரி : நன்றி மக்களே! மிக்க நன்றி! இந்த தீபாவளி கிப்ட் ஹாம்பர் சீரீஸ் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிரவும்! Bye!

Diwali Gift Hamper – part 2

பூரிகுமாரி : ஏங்க, செயல் வீரருக்கு ஸ்வீட் குடுத்த தலீவர் சீனியர் மேனுக்கு என்ன தந்தாரு?

கோல்கப்பா : தலீவருக்கு சில மன வருத்தம் இருந்தாலும், அவருக்கு சீனியர் மேல பாசம் ஜாஸ்தி! அவர் சாய்ஸ் எப்படினு சொல்லு?

பூரிகுமாரி : அடக்கடவுளே! இது என்ன புது ஐட்டமா இருக்கு!

கோல்கப்பா : இதென்னை பிரமாதம்? இதை விட ஸ்பெஷல் ஐட்டத்த சீனியர் நம்ம தலீவருக்கு குடுத்திருக்காரு! இங்க பாரு!

பூரிகுமாரி : மகனுக்கு பதவி வாங்குறதுல விடா கண்டனா இருக்காரு போல!

கோல்கப்பா : ஆமாமா. ஆனா தலீவருக்கு வேற ஐடியா இருக்கு!

பூரிகுமாரி : எனக்கு தெரியுங்க. இதானே?

கோல்கப்பா : சரியா சொல்லி இருக்க. பதவிய தலீவர் அவர் பேரனுக்கு தான் தர போறாராம்!

பூரிகுமாரி : வேறென்ன எதிர்பார்க்க முடியும்ங்க, இது தெரிஞ்ச கதை தானே! அதனால ஜனங்க மைண்டு வாய்ஸ் இதான்!

கோல்கப்பா : முடிச்சு விட்ட போ! வா, நம்ம நெக்ஸ்ட் பார்ட்க்கு போலாம். Bye!

Golgappa’s love poem

a lovely pani puri couple riding two wheeler

பூரி குமாரி: ஏங்க, எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க!

கோல்கப்பா :

இரு சக்கர வண்டியில்
ஒவ்வொரு முறை
உன்னை கடக்கும்போதும்
மெதுவாய் நகர்கிறேன்.

எங்காவது ஒரு சாலை வளைவில்,
நான்கு முனை சந்திப்பில்,
நீ என் கண்ணில் படாமலிருப்பதில்லை!

எந்த அவசரத்தில் இருந்தாலும்,
மஞ்சள் பூசிய உன்னை கவனிக்காமல்
எப்படி இருக்க முடியும்?

எந்த நினைப்பில் நான்
வண்டி ஒட்டி கொண்டிருந்தாலும்,

என்னை எனக்கே நினைவூட்டும்
கடமையை தவறாமல் செய்கிறாய்!

நீ மட்டும் தனியாய் இருந்தால்,
ஒரு கணம் மட்டும்
வேகம் குறைக்கும் நான்,

நீ உன் குழுவோடு வரும்போது,
என் உச்சி முதல் கால் வரை அதிர்வதை
என்னவென்று சொல்ல?

உன்னை தாண்டி
செல்லும் போது
என் பின்னால்
இருக்கும் ஒருத்தி,
எவ்வளவு கோபமிருந்தாலும்
என்னை இறுக பற்றி
தோளில் சாய்ந்து கொள்கிறாள்!

என் தேகம் காக்கும்
வேகத் தடையே!

உன் நோக்கம் சரி தான்
வேகத் தடையே!

பூரி குமாரி: நீங்க ஒரு பைக் சைக்!

கோல்கப்பா : மக்களே! வேகத் தடை நம்ம பாதுகாப்புக்கு தான் இருக்குது! ஆனா சைட் ஸ்டாண்டை எடுத்து விட்டுட்டு அப்புறம் வண்டிய ஸ்டார்ட் பண்ணுங்க! Bye!

Tamil joke – Live streaming, Wife screaming!

டிவியில் லைவ் பார்த்துக் கொண்டிருந்த பூரி குமாரி திடீரெனெ எழுந்து சாமி ஆடினாள்.

பூரி குமாரி : சொன்னீங்களே, செஞ்சீங்களா? சொன்னீங்களே, செஞ்சீங்களா?

கோல்கப்பா : நா எப்ப என்னடி சொன்னேன்?

பூரி குமாரி : கல்யாணம் ஆன முன்னூத்தி அறுபத்து ஆறாவது நாள் சொன்னீங்களே? அதை செஞ்சீங்களா?

கோல்கப்பா : ஐயோ, நா நேத்து சொன்னதையே மறந்துடுவானே! இது உனக்கு தெரியாதா?

பூரி குமாரி : கல்யாணம் ஆன முன்னூத்தி அறுபத்து ஆறாவது நாள், நம்ம பர்ஸ்ட் வெட்டிங் டே! அன்னைக்கு ஹேப்பி வெட்டிங் டேனு சொன்னீங்க. ஆனா என்ன ஹேப்பியாவா வெச்சிருக்கீங்க?

பூரி குமாரி தொடர்ந்து சாமி வந்தது போல திட்ட, கோல்கப்பா நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார்.

பிறகு பூரி குமாரி லைவ் பார்த்துக் கொண்டே பேசியது தெரியவர, ஓடி போய் டிவியை நிறுத்தினார்.

சற்று நேரத்தில் பூரி குமாரி நார்மலாகி கேட்டார் “நீங்க லைவ்ல என்ன பாத்தீங்க?”

கோல்கப்பா : உன்ன பார்த்தேன்! உன் கோவத்தை பார்த்தேன்! இனிமே உன்ன ஹாப்பியா வெச்சிக்குறேன்! நாம கலக்கலா இருப்போம்!

பூரி குமாரி மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் “நாமக்கல் லைவ் நம்ம மன கலக்கத்தை போக்கிடுச்சு”

கோல்கப்பா : மக்களே லைவ்ல பேப்பரை பாத்து பேசிட்டு அவங்க பாட்டுக்கு போய்டுவாங்க. நம்ம லைப்ப நாம தான் பாத்துக்கணும்!

ஹாப்பி சாட்டர்டே! Bye!

Tamil Joke – No purpose Mixer

Mixer grinder political joke

கோல்கப்பா : ஏண்டி, இந்த நாலு ஜாரு மிக்சியை மாத்தணும்ங்கிற?

பூரிகுமாரி : இது சத்தம் தான் அதிகமா இருக்கு. ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்குதுங்க.

கோல்கப்பா : சத்தமில்லாம ஓட இது என்ன ஏசியா? மிக்சின்னா சத்தம் வரத்தான் வரும்!

பூரிகுமாரி : நீங்க மட்டும் தேடி தேடி வாங்கி டாய்லெட்டுக்கு சைலண்டான எக்ஸாஸ்ட் பேன் போட்டு…..

கோல்கப்பா காதை மூடிக் கொண்டார்

கோல்கப்பா : ப்ளீஸ், ரைமிங்கா மட்டும் அந்த சென்டன்ச முடிக்காத!!

பூரிகுமாரி : அந்த பயம் இருக்கட்டும்.

கோல்கப்பா : ஜோக்குக்கு சிரிச்சு முடிச்சிடீங்களா? Full joke coming soon!

Bye!

Tamil joke – CM Sirrrr!

பூரி குமாரி : ஏங்க “CM Sirrr!” ட்ரெண்டிங்க்ல இருக்கே? என்ன மேட்டருங்க?

கோல்கப்பா : ஹிஹிஹி! ரூலிங் பார்ட்டியை வைய்யுறாங்க டாருலிங்!!

பூரி குமாரி : என்ன நக்கலா?

கோல்கப்பா : ரூலிங் பார்ட்டில CMனா என்னனு மொதல்ல சொல்லு?

பூரி குமாரி : Corruption Matters, Commission Matters, அப்புறம் அவங்க Children Matters!

கோல்கப்பா : அடிப்பாவி, பூரி குமாரி, நீ வேற மாறி குமாரியா அள்ளி தெளிக்குற! பொட்லம் பண்ணுறியே!

பூரி குமாரி : என்னங்க, சீக்கா கமெண்டரி மாதிரி பேசுறீங்க?

கோல்கப்பா : அப்போ, பொட்டானிக்கல் பார்ட்டில CMனா என்ன?

பூரி குமாரி : பொட்டானிக்கல் பார்ட்டினா?

கோல்கப்பா : அதான்டி, இலை பார்ட்டி!

பூரி குமாரி : ஓஹோ, அவங்களுக்கு இப்போ CMனா Connecting matters தான்.

கோல்கப்பா : என்னடி ஒத்த வார்த்தைல சுருக்கிட்ட?

பூரி குமாரி : அவங்க AIய எம்புரேஸ் பண்ணவங்க, அதனால இது ஒண்ணே போதும்!

கோல்கப்பா : அவங்க ஐயோ அம்மானு ஒரே அம்புரேசா இருக்காங்க? இதுல AI எங்கடி குறுக்கால வந்துது?

பூரி குமாரி : ஏங்க, அவங்க Anaivarukkumaana Iyakkamங்க!

கோல்கப்பா : ஹிஹிஹி! உன் வாயில சாஸ ஊத்த!

பூரி குமாரி : நெக்ஸ்ட் ப்ளீஸ்!

கோல்கப்பா : பாலிடிக்ச ப்ராக்டிகலா பண்ணி பாக்க ஒருத்தர் வந்திருக்காரே, அவருக்கு CMனா என்ன?

பூரி குமாரி : வேற என்ன? அவருக்கு Courage Matters! அவங்க பார்ட்டி ஆளுங்களுக்கு Control Matters!

கோல்கப்பா : ஒத்த ரோசா! உன்ன நல்லா வளத்துருக்காங்கம்மா, இன்றிலிருந்து நீ ஆட்டா பூரியில்லை! தோட்டா பூரி!

பூரி குமாரி : தேங்க்ஸ்ங்கோ!

கோல்கப்பா : நம்ம வாசகர்களுக்கு CMனா என்ன?


பூரி குமாரி : இந்த கோஷ்டிங்களோட Campaign Matters நமக்கு! அதனால பாத்து ஓட்டு போடுங்க! என்ன இவ்ளோ கேட்டீங்களே? இப்போ நீங்க சொல்லுங்க, மக்களுக்கு CMனா என்ன?

கோல்கப்பா : வயசுக்காரங்களுக்கு Chemistry Matters! வயசானவங்களுக்கு Cholesterol Matters!

Bye!

Tamil joke – Potato Productions

உருளைக்கிழங்கு : ப்ரோ, உங்கள வெச்சு நான் “பூரி கடை”னு படம் எடுக்கலாம்னு இருக்கேன்!
கோல்கப்பா : ஏன்? “இட்லி கடை” னு ஒரு படம் வர போகுதே அதனாலயா?உருளைக்கிழங்கு : ஆமாம்பா!
பூரிகுமாரி : கிட்னி திருட்ட பத்தி பேச சொன்னா, இந்த மீடியால இட்லி கடை, சட்னி கடைனு பேசிவிட்டு இருக்காங்க! இதுல நீ வேறயா?
கோல்கப்பா : அது கிட்னி திருட்டு இல்ல, முறைகேடு! கரெக்ட்டா சொல்லுமா!
பூரிகுமாரி : எல்லாம் நம்ம சாபக்கேடு!
கோல்கப்பா : செல்ல குட்டி பொட்டேட்டோ, நீ ஆசை படலாம், ஆனா நம்மால முடியாது.
உருளைக்கிழங்கு : ஏன் ப்ரோ?
கோல்கப்பா : படமெல்லாம் கிழங்கு உன்னால எடுக்க முடியாது! கழகத்தோட ஆளுங்க தான் எடுக்க முடியும்!