ஒரு ஜோக் சொல்ட்டா சார்!

பூரி குமாரி : இந்தாங்க கோல், பேஸ்ட், ப்ரஷ்.

பூரி குமாரி : இந்தாங்க காபி.

பூரி குமாரி : இந்தாங்க டிபன்.

பூரி குமாரி : இந்தாங்க கை தொடைக்க டவல்.

கோல்கப்பா : ஏண்டி, நா ஹால்ல இருக்கேன், நீ ரூம்ல போய் ஒண்ணுமே பண்ணாம வேலைய மட்டும் செய்த மாதிரி பேசிகிட்டு இருக்க?

பூரி குமாரி : நீங்க ஏவாமயே வேல பாக்கறதுன்னு எப்படின்னு பிராக்ட்டிஸ் பண்றேன் கோல்!

கோல்கப்பா : ஹிஹிஹி, லொள்ளுடி உனக்கு!


பூரி குமாரி : ஆளும் கட்சிக்கு எது குடைச்சல்?

கோல்கப்பா : GF – Girl friend!

பூரி குமாரி : கூட்டணி கட்சிகளுக்கு என்ன இக்கட்டு?

கோல்கப்பா : TF – Trust factor இல்லாதது!

பூரி குமாரி : எதிர்க்கட்சிகளுக்கு என்ன பயம்?

கோல்கப்பா : PF – Party fund வாங்குனது!

பூரி குமாரி : மக்களுக்கு வேண்டியது என்ன?

கோல்கப்பா : RF – Real facts!


பூரி குமாரி : நம்ம மந்திரி B.Eல டாக்டர் பட்டம் வாங்குன gold medalistம் கோல்.

கோல்கப்பா : B.Eல டாக்டர் பட்டமா? என்னடி சொல்ற?

பூரி குமாரி : ஹிஹிஹி, B.Eன்னா “Boosted Estimate” கோல். அதுலதான் gold medalistம் கோல்.


பூரி குமாரி : ஏங்க, போற போக்க பாத்தா photo synthesis நடக்கும் போல இருக்கு?

கோல்கப்பா : என்னடி சொல்ற?

பூரி குமாரி : சூரியன் இலைய பாக்க, இலை பூவ மலர வெக்க, புது கூட்டணி வரும் போல இருக்குங்க.

கோல்கப்பா : பங்காளிங்க ரெண்டு பெரும் நோட்டு சேர்த்த கோஷ்டி, ஜி ஆளுங்க நோட்டா கூட போட்டி போட்ட கோஷ்டி! நடக்குமா கத?

பூரி குமாரி : யாரு யாரோட சேந்தாலும், ஜனங்களுக்கு நல்லது செய்யணும்னுங்கிற mottoல வந்தா மட்டும் தான் photo synthesis வேலைக்கு ஆகும் கோல்!


பூரி குமாரி : அறிவாலயத்தை செங்கல் செங்கலா உருவிறுவேன்னு ஒரு போலீஸ்கார் சொன்னாரே? இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு கோல்?

கோல்கப்பா : கமலாலயத்தை செங்கல் செங்கலா உருவிகிட்டு இருக்காரு டார்லிங்!

பூரி குமாரி : உருவுற செங்கலயெல்லாம் வெச்சு என்ன பண்ண போறாராம்?

கோல்கப்பா : Scratchலேர்ந்து ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க போறாராம், அன்பே.

பூரி குமாரி : watchக்கு bill கேட்டா, கோச்சுக்கினு போனவர் தானே அவரு ?

கோல்கப்பா : ஹிஹிஹி, விமானத்தை இயக்குற பாக்யம் எல்லார்க்குக்கும் கிடைக்குமா sweety? எதுக்காக சொல்றேன்னா, அதுக்காக சொல்றேன்…

கொஞ்சல்ஸ் ..ஏஞ்சல்ஸ்!

A candid conversation between pani poori couples

பூரி குமாரி : என்ன கோல்கப்பா, நம்பளை ரொம்ப நாளா காணோம்?

கோல்கப்பா குழப்பமாக பார்க்கிறார்.

கோல்கப்பா : என்னடி சொல்ற? நம்பளை காணோம்னு நம்பளே எப்புடிடீ கேக்க முடியும்?

பூரி குமாரி : ஹிஹிஹி, அப்பாவை காணோம்னு, கணவனை காணோம்னு சொல்றதுதான் இன்னிக்கு ட்ரெண்டிங்க்ல இருக்கு!

கோல்கப்பா : ஓ, நீ சட்டசபை லைவ் பாத்துட்டு தான் என்னை மொக்க பண்றியா?

பூரி குமாரி : ஆமாம் கோல், எப்படியோ லைவ் கட்டாகுற பிரச்சினை ஓஞ்சு முடிஞ்சிருக்கு.

கோல்கப்பா : லைவ் கட் பண்றது தவறான செயல் இல்லையா குமாரி?

பூரி குமாரி : தவறான செயல்னு மட்டும் சொன்னா பத்தாது கோல். தவறான, உண்மைக்கு புறம்பான செயல்னு நீட்டி முழக்கி சொல்லுங்க!

கோல்கப்பா : உன்ன பாத்து நா எப்புடிடீ எதிர் கட்சி languageல பேசுறது?

பூரி குமாரி : நா உங்க தாரமா இருந்தாலும், ஆதாரம் இருந்தா தைரியமா சொல்லுங்க கோல்!

கோல்கப்பாவுக்கு வேர்த்து ஊத்துகிறது.

கோல்கப்பா : இந்த fan காத்து எனக்கு பத்தலை, AC வாங்கலாமா? நல்ல brandஆ சொல்லுடி.

பூரி குமாரி : Carrier brand வாங்கலாம் கோல்.

கோல்கப்பா : இந்த வார்த்தைய எங்கயோ கேட்டிருக்கனே?

பூரி குமாரி : careerன் உச்சம், டிபன் கேரியர், பியூஸ் கேரியர் theme தான் ஒரு மாசமா ஓடிக்கிட்டு இருக்கு நாட்டுல!

கோல்கப்பா : ஹ்ம்ம், ஏண்டி என்னை பீதியிலயே வெச்சிருக்கன்னு, உன்கிட்ட நா சொல்லிக்க விரும்புறேன்?

பூரி குமாரி : ஹாஹாஹா, ஏங்க எம்மேல பொத்தாம் பொதுவா ஒரு அவதூற சொல்றீங்க? என்னோட எந்த செயல் உங்கள டென்ஷாக்குச்சுன்னு தெளிவா சொல்லுங்க.

கோல்கப்பா : எனக்கு ஏண்டி ஆயிரம் ரூபா gpay பண்ணிட்டு, “for party fund”ன்னு மெசேஜ் அனுப்புன?

பூரி குமாரி : உங்ககூட பார்க் SOFAல உக்காந்து கதை பேசுவாரே ஒருத்தரு, அவருக்கு இன்னைக்கு birthdayன்னு சொன்னீங்கள்ல? அதான் அனுப்பிச்சேன்.

கோல்கப்பா : எந்த ஊர்லடீ பார்க்குல SOFA போட்டுருக்காங்க?

பூரி குமாரி : SOFAவோ, பெஞ்சோ, எதுவா இருந்தா என்ன? உங்க கோஷ்டி எப்பவும் Systematically Off From Activity மோட்ல தான இருக்கும், அதைத்தான் சொன்னேன். போயிட்டு வாங்க கோல்.

கோல்கப்பா : ஏன் சில தவறான வார்த்தைகளை சொல்ற குமாரி?

பூரி குமாரி : ப்ச்ச்..வெறும் தவறான மட்டும் use பண்ணாதீங்க கோல். அது கூட ஆதாரமில்லாத, பிழையான, போலியான போன்ற வார்த்தைகளை சேர்த்து strongஆ சொல்லுங்க!

கோல்கப்பா : என்னடி சொல்ற? உன்மேல நா complaint சொல்றதுக்கு கூட template தர்ற?

பூரி குமாரி : ஹிஹிஹி, நான் தான் beginningலயே, initial stageலயே உங்களுக்கு சொல்லிட்டேன்ல?

கோல்கப்பா : நிறுத்து, நிறுத்து , நிறுத்து…இந்த phrase எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே?

பூரி குமாரி : அது எங்க கேட்டதுன்னு மக்களுக்கே நல்லா தெரியும், அது நா சொல்லி தெரிய வேண்டியதில்லை!

கோல்கப்பா : ஓ…ஓ.. என்னடி ஆளும் கட்சி languageக்கு டக்குன்னு தாவிட்ட?

பூரி குமாரி : பார்ட்டிக்கு லேட் ஆகுது கோல், கிளம்புங்க.

கோல்கப்பா : என்ன இப்போ போங்கன்னு சொல்லிட்டு, அப்புறம் நான் தான் அனுப்பி வெச்சேன், நான் தான் அனுப்பி வெச்சேன்னு நீ பொங்க கூடாது!

பூரி குமாரி சரோஜா தேவி குரலில் சொல்கிறார்.

பூரி குமாரி : உங்களை தடுக்க நான் யார் கப்பா, கோல்கப்பா? இது உங்கள் உரிமை, நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் பார்ட்டி பண்ணலாம். இது நீங்க சுயேச்சையா எடுக்குற முடிவு கப்பா.. கோல்கப்பா…இதை தடுக்க நான் யார்?

கோல்கப்பா : உன் தமிழ்ல தீய வெக்க! அது சுயேச்சையா இல்ல, சுயமா! பார்ட்டிக்கு போக மனைவி கணவன் கிட்ட permission கேக்குறது தான் மரபு. இப்போ அது மீறப்பட்டு இருக்கு?

பூரி குமாரி : வீட்டு பொறுப்பை சுமப்பதுல எனக்கு பெரும் பங்கு குடுக்குற உங்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தில் சம பங்கு குடுக்க ஏன் மனசு வரல? மரபு, மரபுன்னு ஏன் ரப்பர் தோட்ட கோஷ்டி மாதிரி கூவாதீங்க கோல்?

கோல்கப்பா : ரப்பர் தோட்ட கோஷ்டி யாருடி?

பூரி குமாரி : நம்ம தற்போதய எதிர்கட்சியை கவிஞர் அப்படிதான் சொல்கிறார் கோல்! ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதில்லைன்னு ஒரு பன்சை போட்டிருக்கார்!

கோல்கப்பா : குசும்புடி அவருக்கு. உச்சியிலேர்ந்து வேர் வரை ரப்பர் மரத்துல வெட்டு இருக்கும். அது மாதிரி எதிர்கட்சியோட தோல்வி இருக்குனு சொல்ல வரார் போல. சரி நா பார்ட்டிக்கு போகட்டுமா? வேணாமா?

பூரி குமாரி : பார்ட்டிக்கு போக என் கிட்ட எதுக்கு கோல் NOC கேக்குறீங்க?

கோல்கப்பா : நானே ஒரு OC கேஸு! என்ன எதுக்குடி NOC மேட்டர்ல கோத்து விடுற?

பூரி குமாரி : சும்மா ஒரு funக்கு தான் கோல். Evil..Devilன்னு அவங்க சபைல rhyminga பேசும்போது நா சொல்ல கூடாதா.. மக்களே, இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிச்சிருந்தா, உங்க கொஞ்சல்ஸ் ..ஏஞ்சல்ஸ் கோஷ்டிக்கு ஷேர் பண்ணுங்க. Bye!

Tamil Joke – IIM, AIMS & JEE

A satire joke where IIM and AIMS represent established political parties, while JEE represents a new party making its first entry into the election competition like an entrance exam.

கோல்கப்பா : என்ன குமாரி, நாள் நெருங்கிடுச்சி எலக்க்ஷன் ரிசல்ட்டுக்கு! உன் கணிப்பு என்ன?

பூரி குமாரி : ஊர்ல கருத்து கணிப்பு சொல்றவங்களையெல்லாம் வண்டை வண்டையா திட்றாங்க கோல்! நமக்கு எதுக்கு வம்பு?

கோல்கப்பா : கரெக்ட்டுதான்..இந்த கணிப்பையெல்லாம் எப்புடி பாக்குற குமாரி?

பூரி குமாரி : ஹிஹிஹீ ..எல்லாம் பை, பையா கவனிப்பு தான்!

கோல்கப்பா : அடிப்பாவி…Clue பங்கமா இருக்கேடி!

பூரி குமாரி : சரி நீங்க சொல்லுங்க எந்த கோஷ்டி வின் பண்ணும்?

கோல்கப்பா : மே மூணு எழுத்து..அதுனால மூணு எழுத்து கட்சில ஒண்ணு ஜெயிக்கும்…

பூரி குமாரி : ஓஓஓ, அப்போ நாலு என்ன தொக்கா? நாலாம் தேதி ரிசல்ட்டு வருது..நாலு எழுத்து கட்சி தான் ஜெயிக்கும்…இது எப்புடி..ஹிஹிஹி..

கோல்கப்பா : எது எப்டியோ..நாளைக்கு அப்புறம் இந்த 2026 நம்ம காதுல கேக்குறது கொஞ்சம் குறையும்..

பூரி குமாரி : அதுவும் நம்ம “இட்டுகினு வந்து இட்டுகினு போறவர்” 2026ன்னு ஒவ்வொரு தடவை சொல்லி முடிக்குறதுக்குள்ள நான் இந்த வருஷமே முடிஞ்சிடும் நெனச்சிருக்கேன்..

கோல்கப்பா : ஆனந்தம் ஆனந்தம் பாடும், மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்…நீ மட்டும் தான் Clue குடுப்பி யா..நா கொடுத்திருக்கேன் பாரு ராகத்தோட!

பூரி குமாரி : எல்லாம் என் கெரகம்..உங்கள நம்பி சொன்னேன் பாருங்க..

கோல்கப்பா : ஏண்டி இந்த கள்ள மௌனம்? வாய தொறந்து சொல்லேன், யாரு இந்த தடவை ஆட்சி அமைப்பாங்கன்னு?

பூரி குமாரி : கடைசி நிமிஷம் வரை காட்சிகள் மாறும் கோல், பொறுமையா இருங்க.

கோல்கப்பா : ரெண்டு பார்ட்டிங்க ஏற்கனவே பவர்ல இருந்திருக்காங்க..இப்போ புதுசா ஒருத்தர் வந்து குதிச்சிருக்கார். களம் எப்புடி இருக்கு குமாரி?

பூரி குமாரி : ரெண்டு பார்ட்டிங்களும் களத்தை வளமா வெச்சிகிட்டாங்க..புதியவர் களத்தை மொத்தமா வளைச்சி வெச்சிக்கிட்டாரு …

கோல்கப்பா : ஹிஹிஹி, அருமையா ஒன் லைன்ல முடிச்சிட்ட..அட்லீஸ்ட் குத்துமதிப்பா ஒரு நம்பரை சொல்லேண்டி எல்லாருக்கும்?

பூரி குமாரி : ஏங்க எலக்சன் ரிசல்ட் என்ன சொத்து மதிப்பாங்க? குத்துமதிப்பா சொல்றதுக்கு?

கோல்கப்பா : குத்துங்க எசமானியம்மா, குத்துங்க..உன் பார்ட்னர்ன்னு கூட பாக்காம இப்படி கருணையே இல்லாமா எப்புடிடீ உன்னால சொல்ல முடியுது?

பூரி குமாரி : ஹிஹிஹி..இனிமே வாய் சும்மாதானே இருக்குன்னு எதுனா பேசுவீங்க?

கோல்கப்பா :வாய்ப்பில்லை ராஜா..வாய்ப்பே இல்ல! ஹா, வாய்ப்புன்னதும் தான் ஞாபகம் வருது? இந்த முறை எந்த கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்குன்னு நினைக்குற?

பூரி குமாரி : திருந்தவே மாட்டீங்களா கோல், நீங்க?

கோல்கப்பா : புதியவர் Just Entering Election..எவ்ளோ % வாங்குவாரு?

பூரி குமாரி : புதியவர் JEEல எவ்ளோ % வாங்குவாருன்னு தெரியல. ஆனா வாக்கு war நிச்சயம்..

கோல்கப்பா : அடியேய், என்னடி பெரும் புள்ளிய பள்ளி கூட பையன் கணக்கா சொல்லிப்புட்ட!

பூரி குமாரி : வேற என்னங்க சொல்ல முடியும்? இவர் எதிர்க்கிறது IIM & AIMS கோஷ்டி..

கோல்கப்பா : ரொம்ப படிச்சவங்களாடி?

பூரி குமாரி : இல்ல, IIMன்னா இலாக்கா இல்லாம மந்திரிய (Ilaakka Illaama Mandhiri) வெச்சிருந்த கோஷ்டி!

கோல்கப்பா : Oh My God..அப்போ AIMSம்ன்னாஆஆ?

பூரி குமாரி : மனச தேத்திக்குறீங்களா? சொல்றேன்..

கோல்கப்பா (நெஞ்சை பிடித்தபடியே) : மொத்தமா முடிச்சிவுட்ரு..கொஞ்ச நஞ்சம் ஏன் மிச்சம் வெச்சிருக்க?

பூரி குமாரி : ஹிஹிஹி..AIMSன்னா அம்மா இதயத்தின் மனசாட்சியாக (Amma Idhayaththin Mana Saatchiyaaga) இருக்குற கோஷ்டி..

கோல்கப்பா : ஹாஹாஹா..யாரு நல்ல ஸ்கோரு வாங்குறாங்களோ இல்லியோ..என் ஸ்வீட்டி, நீ ஸ்கோர் பண்ணிட்ட போ! மக்களே, இந்த ஜோக் நல்லா இருக்கும்னு எங்களுக்கே தெரியும்..அதனால முடிஞ்சவரைக்கும் உங்க கோஷ்டிகளுக்கு ஷேர் பண்ணுங்க. Bye!

Tamil Parody Song – நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்!

A sad panipoori

கோல்கப்பா: கொஞ்ச நாளைக்கு முன்னாடி நாம சொன்ன statement தப்பாயிடுச்சு டார்லிங்!

பூரிகுமாரி : என்னங்க சொல்றீங்க?

கோல்கப்பா: “முட்டு குடுப்பவர்கள் கெட்டு போவதில்லை”ன்னு சொன்னோம். ஞாபகம் இருக்கா?

பூரிகுமாரி : ஆமாங்க, இப்போ ஸ்டார்ட்டப் கட்சி தோழர்களோட நெலமைய பத்தி சொல்றீங்களா கோல்?

கோல்கப்பா: என்னத்த சொல்ல? புண்பட்ட மனச பொலம்பி தான் ஆத்திக்கணும் போல இருக்கு!

பூரிகுமாரி : இதுல ஹைலையிட்டே நம்ம டாக்டர் பேசினது தான்! மக்களே, டைம் இருந்தா இவங்க சொல்றத கேட்டு யோசிச்சு பாருங்க!

Dr.Shalini's speech compilation

பூரிகுமாரி : Meanwhile, ஆட்டோகிராப் படத்துல வர்ற ஒரு பாட்டை, நம்ம கோல்கப்பா மாதிரி ஆளுங்களுக்காக, கொஞ்சம் மாத்தி எழுதி இருக்கேன்! படிச்சி enjoy பண்ணுங்க! Bye!!

நம்பிக்கைகள் நெஞ்சினில் புதைந்ததினால்,
எதிர்பார்ப்பை எந்தன் நெஞ்சில் குறைக்கின்றேன்!

உன் உருவம் நேர்மையென பதிந்ததினால்,
கேள்வி கேட்டு கேள்வி கேட்டு முழிக்கின்றேன்!

நண்பன் நண்பியெல்லாம் சுற்றி திரிய,
ஆதரவை காகிதமாய் தூக்கி எரிய,

அண்ணா உன்னால் முடிகிறதா?
என்னால் ஏனோ முடியவில்லை!

எனக்கே எனக்கே, உன்னை புரியவில்லை,
காரணம் கேட்கும் எண்ணமுமில்லை!!

நம்பிக்கைகள் நெஞ்சினில் புதைந்ததினால்,
எதிர்பார்ப்பை எந்தன் நெஞ்சில் குறைக்கின்றேன்!

உன் உருவம் நேர்மையென பதிந்ததினால்,
கேள்வி கேட்டு கேள்வி கேட்டு முழிக்கின்றேன்!

காத்திருந்து காத்திருந்து பழகியவன்!
நீ என்னை வழி நடத்தும், ஒரு நொடிக்காக,
காத்திருந்து காத்திருந்து பழகியவன்!

இஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு பேசியவன்!
நீ எந்தன் நாடாள, உன் வாய்மொழியை,
இஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு பேசியவன்!

இன்ஸ்டா எல்லாம் Paid posttu,
எனை குறுகி போக வைக்கிறதே!

கமெண்டுகள் எல்லாம் ரணமாகி,
என் கவனத்தை கூட சிதைக்கிறதே!

Decode பண்ண முடியவில்லை!
உன்னை நேசிக்கும் மண்ணில் பதருமில்லை!

எனக்கே எனக்கே உன்னை புரியவில்லை,
காரணம் கேட்கும் எண்ணமுமில்லை!!

நம்பிக்கைகள் நெஞ்சினில் புதைந்ததினால்,
எதிர்பார்ப்பை எந்தன் நெஞ்சில் குறைக்கின்றேன்!

உன் உருவம் நேர்மையென பதிந்ததினால்,
கேள்வி கேட்டு கேள்வி கேட்டு முழிக்கின்றேன்!

நண்பன் நண்பியெல்லாம் சுற்றி திரிய,
ஆதரவை காகிதமாய் தூக்கி எரிய,

அண்ணா உன்னால் முடிகிறதா?
என்னால் ஏனோ முடியவில்லை!

எனக்கே எனக்கே உன்னை புரியவில்லை,
காரணம் கேட்கும் எண்ணமுமில்லை!!

Tamil joke – கொள்கைப்பா Wanted!!

pani poori cheered by public

கோல்கப்பா: ஏம்மா, நம்ம வீட்டுக்கு வெளில ஏதோ சத்தம் கேக்குதே? போய் பாத்துட்டு வாம்மா.

(சில நிமிடங்களுக்கு பிறகு பதட்டத்தோடு ஓடி வருகிறார் பூரி குமாரி)

பூரி குமாரி: ஏங்க, உங்கள தேடி நெறய ஆளுங்க வந்திருக்காங்க, வாங்க வெளில வந்து பாருங்க.

கோல்கப்பா: என்ன தேடியா?

பூரி குமாரி: உங்களத்தாங்க! “கோல்கப்பா….கோல்கப்பான்னு” ஒரே கூச்சலா இருக்கு.

கோல்கப்பா: சரி வா, போய் பாக்கலாம்.

(இருவரும் வீட்டுக்கு வெளியில் வந்து ஆட்களை சந்திக்கிறார்கள். முன் வரிசையில் இருந்த ஒருவர் கோல்கப்பாவிடம் வந்து பேசுகிறார்)

முதல் மனிதர்: சார், நீங்க கொள்கைப்பா தானே? உங்களை தான் நாங்க தேடிகிட்டு இருக்கோம்.

(கோல்கப்பா புரியாமல் முழிக்கிறார்)

கோல்கப்பா: என்ன ஏம்பா தேடுறீங்க?

முதல் நபர் : சார், எங்க கட்சிக்கு கொள்கை பிடிப்புள்ள ஆளுங்க வேணும். இந்த ஏரியால விசாரிச்சா உங்கள பத்தி சொன்னாங்க. நீங்க கொள்கைப்பாவாமே? நீங்க எங்க கட்சிக்கு வந்துட்டீங்கனா, எங்களை யாரும் கொள்கை இல்லாதவங்கன்னு சொல்ல முடியாது!!!

கோல்கப்பா: யோவ், நா கொள்கைப்பா இல்ல? கோல்கப்பா!!!

முதல் நபர் : சார், உங்க பேர ஸ்டைலா சொல்லி பாருங்க! நீங்க கொள்கைப்பான்னு நீங்களே நம்பிடுவீங்க!

இரண்டாம் நபர் : சார், நீங்க எங்க கட்சிக்கு வந்துட்டீங்கனா, எங்க கிட்டயும் கொள்கை இருக்குக்குனு நாங்களும் ஸ்டைலா சொல்லிக்குவோம்.

கோல்கப்பா: ஸ்ஸ்ஸ்ஸ்…ஸ்ஸுப்பா…யோவ் தமிழ ஒழுங்கா படிங்கைய்யா, நா கொள்கைப்பா இல்ல! கோல்கப்பா, கோல்கப்பா, கோல்கப்பா!!!

முதல் நபர் (சத்தமாக கத்துகிறார்) : தலைவர் கொள்கைப்பா வாழ்க! தலைவர் கொள்கைப்பா வாழ்க!

(கூடி இருக்கும் மக்களும் கோஷம் எழுப்புகிறார்கள். பூரி குமாரி அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நேசப்பா காதருகே போய் பேசுகிறார்)

பூரி குமாரி: ஏங்க, நம்மளே தள்ளு வண்டி கோஷ்டி! நம்மள தூக்கி வாலண்டரியா அவுங்க வண்டில ஏத்த பாக்குறாங்க?

கோல்கப்பா: இரு, எப்படியாவது பேசி இவுங்ககிட்டேயிருந்து தப்பிக்கலாம்.

முதல் நபர் : இப்பவே என்னோட வாங்க. நான் தான் எங்க கட்சி தலைவரோட மனசாட்சி! உங்கள பத்தி அவர்கிட்ட சொல்லி நல்ல போஸ்டிங் வாங்கி தரேன்!

பூரி குமாரி: கோல், இவன் சொல்றத நம்பாதீங்க! இவன் சரியான பிறழ்சாட்சி பார்ட்டி!

கோல்கப்பா: ஓஒ, அது எப்படி உனக்கு தெரியும்?

(பூரி குமாரி கடுப்பாகி முறைக்கிறார்)

இரண்டாம் நபர் : சார், நீங்க முப்பது வருஷ பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர்னு கேள்விப்பட்டோம். நீங்க கண்டிப்பா எங்க கட்சில வந்து சேரணும் சார்!

கோல்கப்பா: யோவ், நா முப்பது வருஷ பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரன் இல்ல! பொதுமக்கள் வாய்க்கு சொந்தக்காரன்!! என்ன விட்டுருங்கய்யா.

(கூட்டத்தில் இருந்து ஒருவர் முன்னே வந்து ஆவேசமாக பேசுகிறார்)

மூன்றாம் நபர் : உண்மைத் தலைவன் ஒரு நாள் வீதிக்கு வந்தே தீருவார்! நீங்கள் மக்கள் பணிக்கு கண்டிப்பாக வர வேண்டும்.

(கோல்கப்பா சோர்வாகி விடுகிறார்)

கோல்கப்பா: யோவ்வ், வாயில நல்லா வருது எனக்கு! நான் இத்தனை வருஷமா வீதி ஓரமா தான்யா இருக்கேன். இப்போதான் உங்க கண்ணுக்கு தெரியுறேனா?

இரண்டாம் நபர் : நீங்க நல்லா வியூகம் அமைப்பீங்கன்னு பேசிக்குறாங்க, வாங்க சார் நம்ம கட்சிக்கு!

பூரி குமாரி : ஏங்க, சாயங்காலம் ஆறு மணிக்கு மேல இவருக்கே View கம்மிங்க!! இவரு எங்கங்க உங்களுக்கு வியூகம் அமைக்குறது?

மூன்றாம் நபர் : கொள்கைப்பா, rugged ஆனா ஆளுன்னு ஜனங்க சொல்றாங்க?

கோல்கப்பா: யோவ், நா ரகடா பூரிய்யா! என்ன உட்டுருங்கய்யா…

முதல் நபர் : எங்க கட்சில ரெண்டாம் கட்ட தலைவர்கள் இல்லன்னு குறை சொல்றாங்க. நீங்க தான் களப்பணி புலின்னு கேள்விப்பட்டோம். உங்கள கட்சில சேக்காம விடமாட்டோம்…வாங்க சார்.

பூரி குமாரி : ஏங்க, இவரு களப்பணி புலியெல்லாம் இல்லேங்க. இவரு புளித்தண்ணி கலக்குறவர்!!ஹீஹீஹ்ஹீ….

pani poori is upset

(கொல்லென்று சிரித்தபடியே பூரி குமாரி சொல்ல, கோல்கப்பா அவமானத்தில் முறைக்கிறார்)

பூரி குமாரி : நல்லா கேட்டுக்குங்க, கொஞ்சம் ஸ்வீட் பாணி, கொஞ்சம் ஹாட் பாணின்னு இவரே ஒரு ரெண்டுங்கெட்டான் ஆளு! இவரை போய் ரெண்டாம் கட்ட தலைவர் ரேஞ்சுக்கு சொல்றீங்க!

கோல்கப்பா: எவ்வளவு நாள் வஞ்சம்டி உனக்கு, என்ன இப்படி கழுவி ஊத்துற?

பூரி குமாரி : இவங்க கிட்டேருந்து நீங்க தப்பிக்கணும்னா இப்படி தாங்க சொல்லணும். இல்லேன்னா அப்புறம் ஊரே உங்கள கழுவி ஊத்தும். இப்போ எப்படி மடை மாத்துறேன்னு பாருங்க!

(பூரி குமாரி தொண்டையை செருமியபடியே கூட்டத்தை நோக்கி பேசுகிறார்)

பூரி குமாரி : இவரை கட்சில சேத்தீங்கன்னா, உங்க கட்சில பேரளவுலதான் கொள்கை இருக்குன்னு சொல்லுவாங்க.!! கொள்கைப்பான்னு ஒருத்தர் கட்சில இருக்குறதால வர போற இந்த கெட்ட பேர் உங்களுக்கு தேவையா? நல்லா யோசிங்க!!

கோல்கப்பா (ரகசியமாக): அடிப்பாவி, மண்டைய கழுவுறதுல நீ இவ்ளோ எக்ஸ்பர்ட்டா!!

முதல் நபர் (யோசிக்கிறார்): ஆமாம், அப்போ நாங்க கொள்கைக்கு என்ன பண்றது?

பூரி குமாரி : கொள்கைய தூக்கி கெடப்புல போடுங்க. நீங்க தான் உங்க பாக்கெட்ல மக்கள் சேவைன்னு ஒரு மேட்டர வச்சுருக்கீங்களே, அத பத்தி யோசிங்க!!

இரண்டாம் நபர் : இப்போவே நவம்பர் வந்துடுச்சி. அடுத்த ஏப்ரலுக்குள்ள சேவைய எங்க போய் நாங்க கண்டுபுடிக்குறது?

(கோல்கப்பா மண்டையில் பல்பு எரிகிறது)

Paani poori gat an idea

கோல்கப்பா: இவ தான் சேவ்பூரி. உங்களுக்கு தோதான ஆளு. “மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு” உருட்ட உங்களுக்கும் வசதியா இருக்கும்.

கோல்கப்பா: இதுல டாப்பா ஒரு விஷயம் இருக்கு! உங்க கிட்ட தத்தி இருக்கு, எங்க கிட்ட தஹி சேவ்பூரி இருக்குன்னும் நீங்க பீத்திக்கலாம்!!!

(“தங்கத் தலைவி, தானைத் தலைவி சேவ்பூரி வாழ்க” என கூட்டம் ஆர்ப்பரிக்கிறது)

முதல் நபர் :ஹாஹாஹா, சார் அட்டகாசமான மேட்டர் சார் இது. நீங்க Quote தலன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க சார்!!!

கோல்கப்பா: உங்க கிட்ட மூணு அட்டகாசமான தலைங்க இருக்காங்க! என்ன ஆள விடுங்கடா சாமி!!

TVK leaders

கோல்கப்பா: மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்!! Bye!!

Thank you, Dairy Milk!

Pani puri couple enjoying dairy milk

கோல்கப்பா : Cadbury Daily Milk போட்டுருக்குற New Neighbour சாக்லேட் விளம்பரத்தை பார்த்தியா?

பூரி குமாரி : அருமையா இருக்குங்க!

Dairy mil ad

கோல்கப்பா : இந்த கம்பெனிக்கு நம் மக்கள் சார்பாக நன்றியும், வாழ்த்துக்களும்!

பூரி குமாரி : ஆமாங்க, கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும். அதே சமயம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் மொழி உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆளும் தரப்புக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்ளுவோம்!

கோல்கப்பா : நியாயம் தான் குமாரி! வாசக நண்பர்களே, இந்த பதிவை படித்து நீங்களும் உங்கள் வாழ்த்தை கமெண்டில் சொல்லுங்கள்!

Dairy mil ad

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

பூரி குமாரி : மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்! நன்றி!

Tamil joke – தீபாவளி மலர் – அதிசார யோகம்

pani puri couple discussing spiritual

கோல்கப்பா : மாதாஜி, இப்போது அதிரச யோகம் ஆரம்பித்திருக்கிறதாமே? அதை பற்றி விளக்குங்கள்.

மாதாஜி : கோல்கப்பா, அது அதிரச யோகமில்லை, அதிசார யோகம்! நீ இன்னும் தீபாவளி மூடிலிருந்து வெளியே வரவில்லையா?

கோல்கப்பா : ஹிஹிஹி, மன்னித்துக் கொள்ளுங்கள் மாதாஜி. அடியேனுக்கு அறிவு அவ்வளவு தான்!

மாதாஜி : பரவாயில்லை, உன் சந்தேகம் என்ன கேள்?

கோல்கப்பா : ஆளும் தரப்புக்கு அதிசார யோகம் எப்படி இருக்கிறது மாதாஜி?

மாதாஜி : அதிசார யோகம் என்ற வார்த்தையை கூட அவர்கள் காதால் கேட்க விரும்ப மாட்டார்கள்!

கோல்கப்பா : ஏன் மாதாஜி?

மாதாஜி : அதிசாரத்தில் “சார்” இருக்கிறது அல்லவா? அதனால் தான்!

கோல்கப்பா : ஹிஹிஹி, மாதாஜி பலமான மேட்டராக சொல்கிறீர்கள்? இன்னும் சற்று விளக்கவும் ப்ளீஸ்.

மாதாஜி கண் மூடி யோசிக்கிறார்.

மாதாஜி : ஒன்றா, இரண்டு கோல்கப்பா? அவர்களை உலுக்கிய “சார்” நிகழ்வுகளை வரிசையாக பார்ப்போம். நம் மாநில தலை நகரில் நடந்த அவல நிகழ்வு, அதை தொடர்ந்து நடந்த “யார் அந்த சார்?” என்ற போராட்டம்!

கோல்கப்பா : ஆமாம் மாதாஜி, என்னைக்கும் அந்த போஸ்டர் வாசகம் நினைவிருக்கிறது.

மாதாஜி : அடுத்ததாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்ட அனுமதி தந்த விவகாரம்!

கோல்கப்பா : ஹா, அந்த ராம்சார் லேண்டு பிரச்சினை தானே?

மாதாஜி : ஆமாம் கோல்கப்பா, சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பான விஷயத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கவனத்தில் எடுத்து, மாநிலத்தில் உள்ள சதுப்பு நிலங்களை ஆய்வு செய்து அடையாளம் காணும்படி உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் கட்டடம் கட்ட முறைகேடாக அனுமதி தந்த புகார் இப்போது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

கோல்கப்பா : இது சென்னையின் மழை வெள்ள மேலாண்மையை மேலும் பாதிக்குமே மாதாஜி!

மாதாஜி : மண்டையில ஓட்ட இருக்கே நமக்கே தெரியுது! அதிகாரிகளுக்கு தெரியாதா?

கோல்கப்பா : அடுத்த சார் மேட்டர் என்ன மாதாஜி?

மாதாஜி : தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR)!

கோல்கப்பா : ஜனநாயகத்தை காப்பாத்தணும்னு சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்காங்க போல?

கோல்கப்பா : அற்புதம்! அமர்க்களம்! சரி நம்ம பிரதான எதிர் கட்சிக்கு அதிசார யோகம் எப்படி இருக்கு மாதாஜி?

மாதாஜி : புது கட்சி கூட்டணிக்கு வரும்னு சொன்னாங்க. பழம் நழுவி பால்ல விழற மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தினாங்க. ஆனா புது கட்சி தலைவர் சரிப்பட்டு வரல, அதனால அவங்க நிலைமை இதுதான்!

கோல்கப்பா : ஹஹிஹி மாதாஜி, உங்க செலெக்க்ஷன் அட்டகாசமா இருக்கு. சரி நம்ம புது தலைவருக்கு நேரம் எப்படி இருக்கு?

மாதாஜி : நேரம் நிச்சயம் சரியில்லை! ஆனா அவர் மன உறுதியோட தொடர்ந்து செயல் பட்டு, come back குடுத்தாருன்னா நிலவரம் மாறலாம். நிலைகுலையாம உண்மையா போராடுனார்னா இந்த சேர் கெடைக்கலாம்!

கோல்கப்பா : மாதாஜி, கட்சிகளை பத்தி சொல்லிடீங்க. அரசாங்கத்துக்கு எப்படி இருக்கு?

மாதாஜி : பெருங்காயப்பட்டு இருக்குற கஜானாவுக்கு சாராய பணத்தை பாய்ச்சி ஓட்டிக்கிட்டு இருக்காங்க!

கோல்கப்பா : நன்றி மாதாஜி!

மாதாஜி : மக்களே, இதோடு தீபாவளி சிறப்பு மலர் நிறைவடைகிறது!

Tamil Joke – No Purpose Mixer

கோல்கப்பா : ஏண்டி, இந்த நாலு ஜாரு மிக்சியை மாத்தணும்ங்கிற? நாலு தலைமுறையா இந்த மிக்சி ஒழைக்குதுடி, இத மாத்தாதே!

பூரிகுமாரி : இப்போ புதுசா BLDC மிக்சி வந்திருக்கு, அதை தான் நா வாங்க போறேன்.

கோல்கப்பா : இந்த நாலு ஜாரு மிக்சி, சமுக நீதி, இட ஒதுக்கீடு, மொழி பாதுகாப்பு அப்புறம் மாநில சுயாட்சி இதெல்லாம் நல்லா அரைக்கும்டி, இதை மாத்தாதே!

பூரிகுமாரி : உண்மை தான், அதுல பெரிய ஜார் பர்பார்மன்ஸ் சூப்பர். ஆனா அதோட பேமிலி ஜார்ஸ் மட்டும்தான் டாப் பொசிஷனுக்கு செட் ஆகும். மீடியம் ஜார் இப்போதைக்கு வேலை செய்யுது. சட்னி ஜார் எல்லாத்தயும் ஒரு ரவுண்டு அரச்சி குடுத்தா, மீடியம் ஜார் ஒரு ரவுண்டு ஓட்டி வேலைய முடிக்குது.

கோல்கப்பா : சட்னி ஜார் ஓகே தானே?

பூரிகுமாரி : ஆமா, பொழுதுக்கும் விட்டு விட்டு வேலை செய்யும். தொடர்ந்து செஞ்சா டயர்டாயிடும்.

கோல்கப்பா : ஜூஸ் ஜார்?

பூரிகுமாரி : ஜூஸ் ஜார் இப்போதைக்கு ஷோ பீஸ். காலம் காலமா பல பேரோட உழைப்பை சக்கையா புழிஞ்சிட்டு, அடுத்து ஜூஸ் ஜார் தான் டாப்புக்கு வரும்னா எப்படிங்க?

கோல்கப்பா : சரி விடு, வேற எந்த மிக்சி வாங்கலாம் சொல்லு?

பூரிகுமாரி : BLDC மோட்டார் வெச்ச புது மாடல் மிக்சி இப்போ மார்க்கெட்ல கலக்குது, அத வாங்கலாமா?

கோல்கப்பா : BLDCனா என்ன?

பூரிகுமாரி : அந்த லீடர் மேல Boys & Ladies Develop Crush!

கோல்கப்பா : ஓஹோ, புரியுது! , உங்க குடும்பத்துல நா ஒருத்தனா இருப்பேன்னு வேற சொல்லுது! அது தானே?

பூரிகுமாரி : கரெக்ட். அத தான் நான் விசாரிச்சு பாக்க போறேன்.

கோல்கப்பா : ஏற்கெனவே ஒரு பச்சை கலர் மிக்சி இருந்துதே, அதை புதுசா வாங்கலாமா?

பூரிகுமாரி : அது கமலா ப்ராப்ளம் இருக்கு! அது வேணாங்க.

கோல்கப்பா : அது என்னடி கமலா ப்ராப்ளம்?

பூரிகுமாரி : நல்லா சத்தம் வரும், ஆனா வேலை செய்யாதுங்க!

கோல்கப்பா : அப்படியா? மாங்கா மிக்சி வாங்கலாமா?

பூரிகுமாரி : அதுல மிக்சி பேசுக்கும், ஜாருக்கும் பொருந்தலையாம்!

கோல்கப்பா : சரி கடல் மான் மிக்சி வாங்கலாமா?

பூரிகுமாரி : அதுக்கு கொஞ்ச நாள்ல ஸ்பேர்ஸ் கிடைக்குமான்னு தெரியல?

கோல்கப்பா : ஸ்பின்னர் மிக்சின்னு ஒரு ப்ராண்ட் இருந்ததே? அத வாங்கலாமா?

பூரிகுமாரி : அதுல ஜாரு சின்ன விஷயத்துக்கே அழுவுதாங்க!

கோல்கப்பா : ட்ரம்ஸ் மிக்சி வாங்கலாமா?

பூரிகுமாரி : அதுல ஜார் மட்டும் தான் கிடைக்கும். எந்த மிக்சி நெறய காசு குடுக்குதோ, அதுல போய் சேந்துக்குமாம்.

கோல்கப்பா : இத்தாலி மிக்சி?

பூரிகுமாரி : அது நாலு ஜாரு மிக்சியோட ஷோ ரூம்ல ஒரு ஓரமா இருக்கு. பழைய டார்ச்சு, டூல்ஸ், பாட் அதையெல்லாம் வெச்சி காம்போ பேக்கா இருக்காங்க!

கோல்கப்பா : பேசாம கல் ஒரல் வாங்கிக்க!

பூரிகுமாரி : அதெல்லாம் வேணாம். எந்த மிக்சி நல்ல ஆபர் குடுக்குதுனு பாத்து முடிவு பண்ணலாம்ங்க!

கோல்கப்பா : ஆமா, யோசிச்சு முடிவு பண்ணலாம். அடுத்த அஞ்சு வருஷத்த டெய்லி அது மூஞ்சில தான் முழிக்கணும்.

பூரிகுமாரி : மக்களே நீங்களும் நல்ல மிக்சியா பாத்து செலெக்ட் பண்ணுங்க.

Bye!