Political Parody Rhymes – 3

tamil rhymes

பூரி குமாரி : ஏங்க, இந்த வார ரைம்ஸ்க்கு என்ன தீமுங்க?

கோல்கப்பா : எனக்கு மண்டை வறண்டு கெடக்கு, நீயே யோசிச்சு சொல்லு!

பூரி குமாரி : ஊரே வெள்ள காடா இருக்கு, நீங்க என்ன மண்டை காஞ்சு இருக்கீங்க?

கோல்கப்பா : ஹா, ஐடியா! மழையை வெச்சி ரைம்ஸ் போடலாம்.

பூரி குமாரி : சும்மாவே ஜனங்க மாநகராட்சியை திட்டுவாங்க! இதுல திட்டவான்னு இந்த புயலுக்கு பேரு வச்சிருக்காங்க!!

கோல்கப்பா : ஹீஹீஹீ, அது திட்டவா இல்ல டார்லிங்! “டிட்வா“!!

பூரி குமாரி : ஹாஹாஹா, இது நீங்க கொள்கைப்பா ஆனா மாதிரி இருக்கு! எனக்கு என்னவோ புயலுக்கு பேரு வெச்சவங்க மேல சந்தேகமா இருக்கு!

கோல்கப்பா : பேருல இருக்க அக்கப்போரவிட, ஊருல ஜாஸ்தியா இருக்கு! மக்களே, இந்த ஒரிஜினல் ரைம்ஸ் கேட்டுட்டு, நம்ம வெர்ஷனை படிச்சி என்ஜாய் பண்ணுங்க!

பூரி குமாரி : நம்ம ரைம்ஸ் படிக்கறதுக்கு முன்னாடி இந்த படத்தை நல்லா பாத்துக்குங்க, மக்கள் படுற கஷ்டம் புரியும்!

chennai rain

பொட்டி
கண்ணம்மா!!

இப்போ மழை வந்தா
என்ன பண்றது?

எல்லாரும் சேர்ந்து
போட்டிங் போலாமா?

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

சின்ன தொகையை
விட்டு வைத்தேன்!

பம்பு மோட்டார்
எடுத்து வைத்தேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வீதி பக்கம்
வந்து பார்த்தேன்!

பேட்ச் ஒர்க்க
போட்டு வைத்தேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வெள்ள காடாய்
நகரம் மாறும்!

பாலம் எல்லாம்
பார்க்கிங் ஆகும்!

போ மழையே போ,
போ மழையே போ!!

ஏரி குளம்
விற்று விட்டோம்!

வயல் வெளியில்
கல்லு நட்டோம்!

போ மழையே போ,
போ மழையே போ!!

கள்வர் நாங்கள்
கொழிக்க வேண்டும்!

தொகை என் பையில்
கொட்ட வேண்டும்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வடிகால் நாங்கள்
போடவில்லை!

நீர் நிலைகள்
தூர் வாரவில்லை!

போ மழையே போ!


காட்டி கொடுக்காமல்,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

Political Parody Rhymes – 2

Pani poori rhymes

பூரி குமாரி: இது யாருக்கான ரைம்ஸ் கோல்கப்பா?
கோல்கப்பா : இது சீனியர் தலீவருக்கு பேபி! என்ஜாய் பண்ணு!
பூரி குமாரி: : செமங்க, மக்களே, மொதல்ல ஒரிஜினல் ரைம்ஸ் கேட்டுட்டு, அப்புறம் நம்ம வெர்ஷனை படிச்சி பாருங்க!

நீர்வளத் துறை
செல்லக்குட்டி
எங்க போச்சு?

வாழ்க்கை முழுக்க
உழைச்சி தேஞ்சி
பதவி கேட்டுச்சு!

துணை முதல்வர்
பதவியில்லேன்னு
அழுதுடுச்சி!!

அப்பா வந்து
து.மு உங்க பேர்ல
இருக்குன்னு சொன்னதும்
சிரிச்சிடிச்சு!

நீர்வளத் துறை
செல்லக்குட்டி
என்ன பண்ணுச்சு?

குட்டி குட்டி
வாரிசுகளோட
ரேஸ் வெச்சுது!

வாரிசு பொம்மை
முந்தி சென்றதும்
அழுதுடுச்சி!!

அப்பா வந்து
கொஞ்சினதும்
சிரிச்சிடுச்சி!

நீர்வளத் துறை
செல்லக்குட்டி
ED கண்ணுல
பட்டுருச்சி!

வாரிசு பொம்மையை
அறிவு திருவிழாவுல
அள்ளி உட்டுருச்சி!

பழைய ஸ்டூடண்டுனு
ஸ்டார் சொன்னதும்
அழுதுடுச்சி!

தலைமை
முறைத்து பாத்ததும்
சிரிச்சிடுச்சி!!

Tamil parody song – DMK vs TVK

TVK Thiruchy meeting effect on DMK Udayanidhi Stalin

ஜூனியர் தலீவர்:
திருச்சி குலுங்கையிலே
ஊரே திரள்கையிலே
அந்த அரும்பு மலர்கையிலே
நான் பவரை நெனக்கலியே
கில்லி அருவா வெட்டிருச்சே!

உடன் பிறப்பு:
விஜயி வெட்டருவா
உன் ஆசை பட்டுருமா
உன் கோஷம் எடுபடுமா?

நான் எலக்க்ஷன் நெனக்கலியே
நெஞ்சுறுகி போயிருச்சே
நெஞ்சுறுகி போயிருச்சே!

ஜூனியர் தலீவர்:
பரிசா குடுக்கலியே
என் உழைப்பு குறையலியே
நாம் தாழ்வும் பழகலியே
உன் முகத்தை பார்க்கையிலே
என் துன்பம் ஏறிடுச்சே!

உடன் பிறப்பு:
ராசா தேறிடணும்
நாம் மோசம் புரிஞ்சிக்கணும்
புது பாதை பார்த்துக்கணும்!

நல்ல திசையில் நடக்கையிலே
எதிர் காலம் பொறந்திடுமே
எதிர் காலம் பொறந்திடுமே!

ஜூனியர் தலீவர்:
வாழ்க்கை பூடகமா
என் பொழப்பு பொய் கணக்கா
தினந்தேறும் பெரும் களவா
என் விதிய எழுதையிலே
அந்த சாமியும் உறங்கியதே!

உடன் பிறப்பு:
ஐயா கலங்காதே
சூரியன் உடையாதே
ஊர் வஞ்சம் நெலைக்காதே!

நீ உள நாள் மட்டும் தான்
இந்த உசிரும் போகாதே
இந்த உசிரும் போகாதே!