Tamil Parody Song – காலி தொகுதி… மீதி தொகுதி… சேதி ஒண்ணு கேளு!

A paroody song inspired by Karakaatakaaran movie song in tamil

கோல்கப்பா : என்ன குமாரி? அரசியல் நிலவரமெல்லாம் எப்படி இருக்கு?

பூரி குமாரி : அமோகமா இருக்குங்க. ஆமோதிக்குறீங்கன்னா கைய உயர்த்துங்க!

கோல்கப்பா : ஏண்டி, நான் ஒருத்தன் தானே இருக்கேன். கூட்டத்தை பாத்து பேசுற மாதிரி சொல்லுற?

பூரி குமாரி : எழுதி வெச்சுக்குங்க, எழுதி வெச்சுக்குங்க..உங்க கை கறை படிஞ்சி இருக்குறதால தான் நீங்க கைய தூக்க மாட்டேங்குறீங்க!

கோல்கப்பா : மிச்சத்தை நானே சொல்லிடுறேன்..அதனால தான் மக்கள் தேர்தல் அரசியல்லர்ந்து சிலரை தூக்கி போட்டுட்டாங்க..சரியா?

பூரி குமாரி : ஹிஹிஹி…நான் தான் பாதிக்கப்பட்டு இருக்கேன் நெனச்சேன்..நீங்களுமா?

கோல்கப்பா : ஏண்டி, நாம ரெண்டு பெரும் ஒண்ணா தானே டெய்லி சட்டசபை லைவ் பாக்குறோம்?

பூரி குமாரி : என்னமோ போங்க கோல். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஆக்கபூர்வமான விவாதங்களை செய்யாம சும்மா நச நசன்னு பேசிகிட்டு இருக்காங்க.

கோல்கப்பா : வாயில வடை சுடுறீங்கன்னு ரெண்டு தரப்பும் மாத்தி மாத்தி சொல்லறீங்களே, இதை பாக்குற ஜனங்க என்ன நினைப்பாங்கன்னு சபாநாயகர் வருத்தப்பட்டு கமெண்ட் பண்ற அளவுக்கு தான் நிலவரம் இருக்கு.

பூரி குமாரி :வடைன்னு பேசுறவங்களுக்கு பாயசத்தை போடுவோம் கோல். மக்களே, இடை தேர்தலை பெரிதும் நம்பி இருக்கும் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை “மாங்குயிலே பூங்குயிலே” என்ற பாடலை தழுவி நகைச்சுவையாக எழுதி இருக்கிறோம். படித்தும் சிறிதும் மகிழுங்கள். நன்றி.


ஆளும் கட்சி :

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

குத்து குத்து.. ஓட்டாலே..
நான் எட்டி பிடிப்பேன்..டோட்டலே..

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

புட்டு புட்டு வெளக்கி
சொல்ல ஏகப்பட்ட வம்பு!

அத லிஸ்டெடுத்து பைல்ல
வெச்சா பொங்குதடி தெம்பு!

மீட்டெடுத்து குடுத்த
அந்த பரந்தூரு ஊரு!

இப்போ, திட்டம் கொஞ்சம்
மாறுதடி..என்ன பாடு ஜோரு!

கண்ணுக்கழகா, மண்ணு சிரிச்சா,
சன்னு மனச, சுட்டு எரிச்சா..

தன்னந்தனியா ஆட்சி அமைச்சா,
கண்ணில் விரலை ஆட்டி கொடைஞ்சா..

ஏறெடுத்து பார்த்து,
யம்மா, என் சின்னத்துக்கு குத்து!

சீரெடுத்து வாரேன்,
யம்மா, பாத்து என்னை தேத்து!

காத்தடிக்கும்
கருவூல நிலைக்கு,
நிச்சயம் பதிலு
சொல்லிடும் விசிலு!

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

ஒன்ன மறந்திருக்க
ஒரு பொழுதும் அறியேன்!

எம்மா, எண்ணி வெரல விட்டு
வேறெதையும் தெரியேன்!

நெஞ்சத்தில குடியிருக்கும், பஞ்சு
மனசு பேன்ஸு!

யம்மா, இங்க அங்க பேசி
வரும் மீதியிருக்கும் ப்ளான்ஸு!

முறியடிப்போம்
சிண்டு சேட்டை!

பாய்ந்து கடப்போம்
பெரும்பான்மை கோட்டை !

சலவை செய்ய தான்
தேடி அழைச்சேன்!

சம்மதம்னு
சொல்லு தொகுதீ!

பிரச்சாரத்துக்கு வாரேன்..
யம்மா, பில்டப்பூ தாரேன்!

நம்பி நீயும் போட்டா..
யம்மா, மீதி வழி போறேன்!

மத்ததை மறந்து, போடணும் எனக்கு..
உங்கண்ணன் கணக்கு, மொத்தமும் உனக்கு!

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

குத்து குத்து.. ஓட்டாலே..
நான் எட்டி பிடிப்பேன்..டோட்டலே..

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

Tamil Parody Song – பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு!

How alliance leader flexes the muscle with coalition parties

கோல்கப்பா : என்ன குமாரி? கூட்டணி முடிஞ்சுது போல இருக்கு?

பூரி குமாரி : ஐயோ முறிஞ்சிருச்சா?

கோல்கப்பா : அடியேய், நீ ஒருத்தி…முடிஞ்சுதுடி! முடிஞ்சுதுடி!!

பூரி குமாரி : ஓகே, ஓகே, மூணு மாசமா “முறியுமா, உடையுமா”ன்னு நியூஸ் பாத்து பாத்து, நல்ல வார்த்தையே நினைவுக்கு வர மாட்டேங்குதுங்க!!

கோல்கப்பா : பரவால்ல விடு…

பூரி குமாரி : சீட்டு நம்பர் சொல்லிட்டு, இது நல்ல நம்பர்னு வேற சொல்றாரு!

கோல்கப்பா : இது என்ன பம்பர் ப்ரைஸா? எல்லாம் காம்ப்ரமைஸ் தான்..

பூரி குமாரி : இருந்துட்டு போகட்டும் கோல்…மக்களே, நம்ம தோழர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிட்டு, இந்த பாட்ட படிச்சி என்ஜாய் பண்ணுங்க!

தோழமை கட்சி தலைவர் :

பத்துக்குள்ளே நம்பர்
ஒண்ணு சொன்னால்,
என் நெஞ்சுக்குள்ளே முள்
என்று சொல்வேன்! (2)

தோழமை கட்சி தலைவர் :

சிக்ஸ் என்கிறார், meanwhile
முரசு fix செய்கிறார்!
எயிட்டு தருகிறார்,
muscle flex செய்கிறார்!!

அவர் வேறு யாரு?
முன்னோடி பாரு!!

கூட்டணி தலைவர் :

பத்தை தாண்டி நம்பர்
ஒண்ணு கேட்டால்,
என் நெஞ்சுக்குள்ளே முள்
என்று சொல்வேன்!

ரெட்டை இலக்கம் என்கிறார்,
என் இலக்கு தெரிந்தவர்!
ரெட்டை பத்தாண்டாக,
பல்லக்கு சுமப்பவர்!
அவர் வேறு யாரு?
முன்னோடி பாரு!!

தோழமை கட்சி தலைவர் :

பத்துக்குள்ளே நம்பர்
ஒண்ணு சொன்னால்,
என் நெஞ்சுக்குள்ளே முள்
என்று சொல்வேன்!

காயங்கள் தந்தது
நெடு முயற்சி!
என் வேர்வைக்கு முன்னே
தோற்கும் நீர் வீழ்ச்சி!!

கூட்டணி தலைவர் :

ஹோ, எட்டுக்கு
ஏன் அய்யா அயர்ச்சி?

என் மாட்சிக்கு,
பதில் சொல்லும் நம் வளர்ச்சி!!

தோழமை கட்சி தலைவர் :

ஒடுக்கப்பட்ட கூட்டில்,
அட சுருக்கம், என்ன புதுசா?

ராஜராஜன் ஏட்டில்,
அட வெற்றி, என்ன புதுசா?

கூட்டணி தலைவர் :

அட, டென்சன் என்றால்,
உதடுகள் பிரியும் ……

எனக்கு, my son என்றால்,
உதடுகள் இணையும்……

தோழமை கட்சி தலைவர் :

தகராறு எதற்கு,
நம் வரலாறு பாரு??

கூட்டணி தலைவர் :

பத்தை தாண்டி நம்பர்
ஒண்ணு கேட்டால்,
என் நெஞ்சுக்குள்ளே முள்
என்று சொல்வேன்!

Bar போற்றும்
நல்லாட்சி மலர,
நம் Car pooling,
அலயன்ஸ் தொடர,

தோழமை கட்சி தலைவர் :

ஹா, பன்னீரில்
விழுந்த பூ போல,
நான் கண்ணியமாக
இருந்தேன், நானாக!!

கூட்டணி தலைவர் :

வந்த துாரம் பார்த்தால்,
நீங்கள் வைரம் பாய்ந்த மேனி!

போகும் பாதை பார்த்தால்,
நீங்கள் தொடும் உயரம் Many!!

தோழமை கட்சி தலைவர் :

மைக்கில் புதைத்தேன்
பல நாள் எனையே……

உங்கள் விடியல் கருப்பாய்
வெறுப்பாய் வெளியே……

கூட்டணி தலைவர் :

கொல்லும் வார்த்தை வேண்டாம்
களமாடும் தீயே!!

கூட்டணி தலைவர் :
பத்துக்குள்ளே நம்பர்
ஒண்ணு சொன்னால்,
என் நெஞ்சுக்குள்ளே முள்
என்று சொல்வேன்!

ரெட்டை இலக்கம் என்கிறார்,
என் இலக்கு தெரிந்தவர்!
ரெட்டை பத்தாண்டாக,
பல்லக்கு சுமப்பவர்!
அவர் வேறு யாரு?
முன்னோடி பாரு!!

தோழமை கட்சி தலைவர் :

பத்துக்குள்ளே நம்பர்
ஒண்ணு சொன்னால்,
என் நெஞ்சுக்குள்ளே முள்
என்று சொல்வேன்!

Tamil joke – விட்டுக் கொடுப்பவர்கள், கெட்டு போவதில்லை!

பூரி குமாரி : என்னங்க நம்ம கடைல கூட்டமே வரல, காத்து வாங்கிட்டு இருக்கு? ஏதாவது ப்ரோமோஷன் பண்ணலாம்னு யோசிக்குறேன். நல்ல ஐடியாவா சொல்லுங்க கோல்!

(கோல்கப்பா யோசிக்கிறார்)

Pani poori shop

கோல்கப்பா : பெரிய கட்சிங்களே கூட்டணி முடிவு ஆகாம காத்து வாங்கிட்டு இருக்கு! நாம எம்மாத்திரம்?

பூரி குமாரி : அவங்களும் நாமளும் ஒண்ணாங்கா? அவங்க சீட்டிங் பார்ட்டிங்க! ஆனா, நாம சாட் பார்ட்டிங்க!!

(கோல்கப்பா போனை பார்த்து விட்டு ஆர்வமாகிறார்)

கோல்கப்பா : ஆஹா, ஒண்ணு சேந்துட்டாங்கம்மா! ஒண்ணு சேந்துட்டாங்கம்மா!!

பூரி குமாரி : யார் யாருங்க? காட்டுங்க பாப்போம்.

கோல்கப்பா : அம்மா வளர்த்த பிள்ளைகள்தான்மா!

ttv

பூரி குமாரி : அட ஆமா, இவ்வளவு நாள் மக்கர் பண்ண குக்கர், இப்போ குதூகலமா இருக்காரு போல…

கோல்கப்பா : “விட்டுக் கொடுப்பவர்கள், கெட்டு போவதில்லை”ன்னு மகராசன் சொல்லியிருக்கார்..

பூரி குமாரி : வாவ், செம ஸ்டேட்மென்ட் கோல்!

கோல்கப்பா : சரி வா, ரேபிட் பயர் கேள்வி கேக்குறேன்..மத்த கட்சிகளுக்கும் இதே மாதிரி ஒன் லைனர் டக்கு டக்குனு சொல்லு..மொதல்ல ட்ரம்ஸ் பார்ட்டிக்கு சொல்லு?

பூரி குமாரி : நோட்டுக் கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை”

கோல்கப்பா : ஹிஹிஹி, you nailed it!! ஆளும் கட்சிக்கு சொல்லு.

பூரி குமாரி : கிட்டு (kit) கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை! பொங்கல் கிட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை!

கோல்கப்பா : நன்று, நம்ம மய்ய மேனுக்கு சொல்லுமா..

பூரி குமாரி : (ராஜ்யசபா) சீட்டு கொடுப்பவர்கள், கெட்டு போவதில்லை!

கோல்கப்பா : அருமை..ஆளும் கட்சி கூட்டணிகளுக்கு ஒரு பன்ச் சொல்லு டார்லிங்..

பூரி குமாரி : முட்டுக் கொடுப்பவர்கள், கெட்டு போவதில்லை!

கோல்கப்பா : கலக்குறியே, நம்ம ஸ்டார்ட்டப் கட்சிக்கு சொல்லு..

பூரி குமாரி : சீட்டி (விசில்) அடிப்பவர்கள், கெட்டு போவதில்லை!

கோல்கப்பா : அட்டகாசம். சரி இவங்களுக்கெல்லாம் மக்கள் என்ன சொல்ல போறாங்க?

பூரி குமாரி : கெட்டு போனவர்களுக்கு, ஓட்டு போடுவதில்லை!!

கோல்கப்பா : என் வெல்ல கட்டி, ஊர் அக்கபோருக்கெல்லாம் சொல்லிட்ட! நம்ம கடைக்கு என்ன பேனர் வெக்கலாம் சொல்லு?

பூரி குமாரி : ட்ரீட்டு கொடுப்பவர்கள், கெட்டு போவதில்லை!!!

chat party

கோல்கப்பா : அருமை! அருமை!! மக்களே அவங்க கல்லா கட்டுறதுக்கு கூட்டணில ஜெல்லாய்ட்டோம்னு சொல்வாங்க…நல்ல ட்ரீட்மெண்டா அவங்களுக்கு குடுங்க!

பூரி குமாரி : ஆமாங்க, ட்ரீட்மெண்ட் கொடுப்பவர்கள், கேட்டு போவதில்லை!!! Bye.

happy chat cafe