Political Parody Rhymes – 3

tamil rhymes

பூரி குமாரி : ஏங்க, இந்த வார ரைம்ஸ்க்கு என்ன தீமுங்க?

கோல்கப்பா : எனக்கு மண்டை வறண்டு கெடக்கு, நீயே யோசிச்சு சொல்லு!

பூரி குமாரி : ஊரே வெள்ள காடா இருக்கு, நீங்க என்ன மண்டை காஞ்சு இருக்கீங்க?

கோல்கப்பா : ஹா, ஐடியா! மழையை வெச்சி ரைம்ஸ் போடலாம்.

பூரி குமாரி : சும்மாவே ஜனங்க மாநகராட்சியை திட்டுவாங்க! இதுல திட்டவான்னு இந்த புயலுக்கு பேரு வச்சிருக்காங்க!!

கோல்கப்பா : ஹீஹீஹீ, அது திட்டவா இல்ல டார்லிங்! “டிட்வா“!!

பூரி குமாரி : ஹாஹாஹா, இது நீங்க கொள்கைப்பா ஆனா மாதிரி இருக்கு! எனக்கு என்னவோ புயலுக்கு பேரு வெச்சவங்க மேல சந்தேகமா இருக்கு!

கோல்கப்பா : பேருல இருக்க அக்கப்போரவிட, ஊருல ஜாஸ்தியா இருக்கு! மக்களே, இந்த ஒரிஜினல் ரைம்ஸ் கேட்டுட்டு, நம்ம வெர்ஷனை படிச்சி என்ஜாய் பண்ணுங்க!

பூரி குமாரி : நம்ம ரைம்ஸ் படிக்கறதுக்கு முன்னாடி இந்த படத்தை நல்லா பாத்துக்குங்க, மக்கள் படுற கஷ்டம் புரியும்!

chennai rain

பொட்டி
கண்ணம்மா!!

இப்போ மழை வந்தா
என்ன பண்றது?

எல்லாரும் சேர்ந்து
போட்டிங் போலாமா?

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

சின்ன தொகையை
விட்டு வைத்தேன்!

பம்பு மோட்டார்
எடுத்து வைத்தேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வீதி பக்கம்
வந்து பார்த்தேன்!

பேட்ச் ஒர்க்க
போட்டு வைத்தேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வெள்ள காடாய்
நகரம் மாறும்!

பாலம் எல்லாம்
பார்க்கிங் ஆகும்!

போ மழையே போ,
போ மழையே போ!!

ஏரி குளம்
விற்று விட்டோம்!

வயல் வெளியில்
கல்லு நட்டோம்!

போ மழையே போ,
போ மழையே போ!!

கள்வர் நாங்கள்
கொழிக்க வேண்டும்!

தொகை என் பையில்
கொட்ட வேண்டும்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வடிகால் நாங்கள்
போடவில்லை!

நீர் நிலைகள்
தூர் வாரவில்லை!

போ மழையே போ!


காட்டி கொடுக்காமல்,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

Political Parody Rhymes – 1

Poori singing rhymes

கோல்கப்பா : குமாரி, ரொம்ப நாளா நீ கேட்டுக்கிட்டுருந்த பாலிடிக்ஸ் ரைம்ஸ் இப்போ ரெடி!
பூரி குமாரி: இது யாருக்கான ரைம்ஸ் கோல்கப்பா?
கோல்கப்பா : இது ஜுனியர் தலீவருக்கு பேபி! படிச்சு என்ஜாய் பண்ணு!
பூரி குமாரி: : செமங்க, மக்களே, மொதல்ல ஒரிஜினல் ரைம்ஸ் கேட்டுட்டு, அப்புறம் நம்ம வெர்ஷனை படிச்சி பாருங்க!

கொள்கை வண்டி
தள்ளியே,
வாரிசு தம்பி
வருகிறார்!

தள்ளி போங்கள்
ஓரமாய்,
வாரிசு வண்டி
போகணும்!

வாழ்க்கை முழுக்க
உழைத்தாலும்,
உபி நீ வண்டி
ஏற முடியாது!

வருந்தி நீ
வாழ்வை
தொலைத்தாலே,
விரைந்து
உயர்வார்
பேட்டா!

கொள்கை வண்டி
தள்ளியே,
வாரிசு தம்பி
வருகிறார்!

தள்ளி போங்கள்
ஓரமாய்,
வாரிசு வண்டி
போகணும்!

வாழ்க்கை முழுக்க
உழைத்தாலும்,
உபி நீ வண்டி
ஏற முடியாது!

வருந்தி நீ
வாழ்வை
தொலைத்தாலே,
விரைந்து
உயர்வார்
பேட்டா!

Thank you, Dairy Milk!

Pani puri couple enjoying dairy milk

கோல்கப்பா : Cadbury Daily Milk போட்டுருக்குற New Neighbour சாக்லேட் விளம்பரத்தை பார்த்தியா?

பூரி குமாரி : அருமையா இருக்குங்க!

Dairy mil ad

கோல்கப்பா : இந்த கம்பெனிக்கு நம் மக்கள் சார்பாக நன்றியும், வாழ்த்துக்களும்!

பூரி குமாரி : ஆமாங்க, கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும். அதே சமயம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் மொழி உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆளும் தரப்புக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்ளுவோம்!

கோல்கப்பா : நியாயம் தான் குமாரி! வாசக நண்பர்களே, இந்த பதிவை படித்து நீங்களும் உங்கள் வாழ்த்தை கமெண்டில் சொல்லுங்கள்!

Dairy mil ad

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

பூரி குமாரி : மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்! நன்றி!

Tamil novel – OTP – Part 10/20

TN politician aiming for power

ரத்தினத்திற்கு தெரிந்த ஒரே தொழில் கட்சிப்பணி. தெரிந்த ஒரே கட்சி அவர் கட்சி மட்டுமே. கட்சியில் என்ன பணி என்றால் அவர் இருக்கும் நிலையில் பணம் தவிர மற்ற எல்லாமும் என சொல்லலாம்.

கிளை மட்டத்தில் இருந்து ஆரம்பித்து இருபது ஆண்டுகளாக களத்தில் பணியாற்றி ஒன்றியத்தின் அருகே இப்போது தான் கரை சேர்ந்திருக்கார்.

மாவட்ட அளவில் நல்ல அறிமுகம் இருந்தாலும் இன்னும் ஒரு படி முன்னேற்றத்திற்க்காக காத்திருக்கிறார்.

நிரந்தர தொழில் என்று எதுவும் கிடையாது. வருமானம் மழையாக இல்லெயென்றாலும் சமயங்களில் தூறலாகவோ இல்லை சாரலாகவோ இருக்கும்.

கருமேகம் சூழ்வது போல் எங்கு பிரச்சினையோ, வில்லங்கமோ இருக்கிறதோ, அங்கே வீசும் காற்றின் திசைக்கேற்ப சாய்பவர்.

விசுவாசத்தையும் உழைப்பையும் மட்டுமே கொட்டி கட்சியில் முன்னேற முடியும் என்று இன்று வரை நம்புபவர்.

தன் அனுபவத்தாலும் திறனாலும் தன்னால் நூதனமான முறையில் செயலாற்ற முடியும் என ஆழமான எண்ணம் உடையவர்.

கட்சி சகாக்களை ஒருங்கிணைத்தாலும் சிறு ஒளி கீற்று கூட மற்றவர் மீது விழாமல் பார்த்துக்கொள்வார்.

இப்போது அவர் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம். கார்பொரேஷன் தேர்தல் காலம்.

ரத்தினத்தின் ஏரியாவில் அவர் கட்சி வேட்பாளராக நிற்பது எக்ஸ் எம்எல்ஏ மனைவி திருமதி புஷ்பா.

எக்ஸ் எம்எல்ஏ சமீபத்தில் ரத்தினத்திற்கு ஆருயிர் அண்ணனாக கிடைத்தவர்.

நீண்ட காலம் தூரத்தில் இருந்து ரத்தினத்தின் செயல் பாடுகளை பார்த்தவர் அண்ணன்.

சில மாதங்கள் முன்பு அவர் வலது கரம் அகால மரணமடைய புது வலது கரமாய் ஆனார் ரத்தினம்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்ட சபை தேர்தல். அண்ணனுக்கு அருமையான வாய்ப்பு இருக்கிறது.

இப்போது மனைவி கவுன்சிலராகி, பிறகு அவரும் எம்எல்ஏ ஆகி விடுவார் என திட்டம்.

கார்பொரேஷன் அளவிலும் மாநில அளவிலும் தனக்கு இன்னும் சற்று பவர் கூடும் என நாடி நரம்பெல்லாம் நம்பிக்கை கொப்பளிக்க இருப்பவர் ரத்தினம்.

அரசாங்க கேபினட்டை விட கிச்சன் கேபினட்டின் செல்வாக்கு அதிகம் என கண்கூடாக பார்த்தவர் ரத்தினம். சில இடங்களில் ரெண்டு மூணு கிச்சன் கூட இருக்கும்.

அதற்கு வாழும் உதாரணம் அவர் அண்ணன். மாநில கிச்சன் கேபினட்டின் செல்லபிள்ளை.

ஸ்டேட்டு கிச்சனோ லோக்கல் கிச்சனோ, க்ளவுடு கிச்சனோ, எந்த கிச்சன் செல்வாக்கு கிடைத்தாலும் மிக்சர் சாப்பிட்டே அடுத்த நிலைக்கு போலாம் என்பது எழுதப்படாத விதி.

அண்ணியை வெற்றிக்கொடி நாட்ட வைத்துவிட்டால் பொலீரோ காரின் பின் சீட் தனக்கு மட்டும் தான் என தீர்க்கமாக நம்பினார் ரத்தினம்.

ஒரு பக்கம் எம்எல்ஏக்கு அருகாமை, இன்னொரு புறம் பொலீரோவில் ட்ரிப் அடித்து எப்படியாவது மேயருக்கு அறிமுகமாவது.

அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை அரசாங்கம் போட்டதோ இல்லையோ ரத்தினம் தன் வளர்ச்சிக்கான திட்டத்தை தெளிவாக போட்டார்.

பிற்காலத்தில் இருவரில் காற்று யார் பக்கம் வீசுகிறதோ அங்கே சாமரம் வீசுவது என முடிவெடுத்தார்.

ஒரு திரைப்படத்தில் சொப்னா அண்ணிக்கு கேன்சர் என போலியாக அவருக்காக உருகி உருகி பிராத்திப்பார் அண்ணனின் நண்பர். அது போல போலியாக அண்ணிக்காகவும் அண்ணனுக்காகவும் உருகுவதாகவும் உயிரையே கொடுக்க தயாராக இருப்பதாகவும் ஒரு கூட்டம் இப்போது சமூகத்தில் ஊடுருவி இருக்கிறது.

அந்த கூட்டம் உண்மையானது இல்லை என்பதும் எல்லா அண்ணன் அண்ணிகளுக்கும் தெள்ளத் தெளிவாக தெரியும். ஆனால் இரு தரப்பும் மக்கள் மன்றத்தில் அதை ஒரு கலாச்சாரமாக கடை பிடித்து வருகிறார்கள்.

அது உட்கட்சி ஜன நாயகத்துக்கும், தேர்தல் ஜன நாயகத்துக்கும் வந்திருக்கும் கேன்சர் என மக்களுக்கு மட்டும் தெரியும்.

Diwali Gift Hamper – part 5

பூரி குமாரி : ஏங்க, மக்கள் பிரதான எதிர்கட்சி தலைவருக்கு என்ன செலக்ட் பண்ணி இருக்காங்க?

கோல்கப்பா : பல சிரமங்களை தாண்டி, தன்னை தலைவராக அவர் நிலை நிறுத்திக் கொண்டிருப்பதால் இந்த ஐட்டத்தை பரிசாக கொடுக்கிறார்கள்.

பூரி குமாரி : தர்ம யுத்த தலைவருக்கு என்ன பரிசு?

கோல்கப்பா : இதோ இருக்கு பாரு!

பூரி குமாரி : ஹிஹிஹி, குக்கர் தலைவருக்கு என்ன பரிசு?

கோல்கப்பா : இந்த ஆப்ஷன் எப்புடி?

பூரி குமாரி : செம, நம்ம மேங்கோ பார்ட்டிக்கு என்ன கிப்ட்ங்க?

கோல்கப்பா : சீனியருக்கும் ஜுனியருக்கும் இந்த ஐட்டம் தான்!

பூரி குமாரி : ஹாஹாஹா, டாப்பான செலெக்ஷன். நம்ம ட்ரம்ஸ் பார்ட்டிக்கு என்ன இருக்கு?

கோல்கப்பா : இங்கே பார்!

பூரி குமாரி : அட்டகாசமான பரிசுங்க! கூட்டணி பேச்சுவார்த்தை இவங்க எப்படி நடத்துவாங்கன்னு மக்கள் நல்லா புரிஞ்சு வெச்சிருக்காங்க! சரி, நம்ம டார்ச் லைட் மேனுக்கு என்ன இருக்கு?

கோல்கப்பா : அவருக்கு ஒரு சேஞ்சுக்கு ஜனங்க கேம் கார்டு குடுத்திருக்காங்க!

பூரி குமாரி : ஹய்யோ, கோல்கப்பா! ஒரு செல் அமீபா மாதிரி இப்போ இருக்காரு. அப்புறம், அவரோட நிலைப்பாட்டை மாத்திகிட்டதால இந்த பரிசுக்கு சொந்தக்காரர் ஆகிட்டாரு போல?

கோல்கப்பா : கரெக்ட் குமாரி!

பூரி குமாரி : ஒரு முக்கியமான தலைவரை மறந்துட்டோமே? நம்ம கடல்மான் சாருக்கு என்ன ஐட்டம்?

கோல்கப்பா : அவருக்கு, ஒரு ஐட்டம் இல்ல, ரெண்டு பரிசு தராங்க மக்கள்.

பூரி குமாரி : ஆஹா, அருமையான பொருள். இன்னொன்னு என்ன?

கோல்கப்பா : கோல்கப்பா : இது ரெண்டாவது ஐட்டம்.

பூரி குமாரி : அடடா, அடடா! அற்புதம்.நம்ம புது கட்சி தலைவருக்கு என்ன பரிசு தந்திருக்காங்க?

கோல்கப்பா : அவருக்கும் டபுள் தமாக்கா! ரெண்டு ஐட்டம் இருக்கு. இந்த கிப்ட ஆளுங்கட்சி குடுக்குது, ரெண்டாவதை மக்கள் குடுக்கறாங்க!

பூரி குமாரி : வாவ், மாசா இருக்கே ஜனங்க செலெக்ஷன்! இவ்வளவு தலைவர்களுக்கு பரிசு தந்த ஜனங்க அந்த கட்சிகளுக்காக பேசும் வாடகை வாய்களுக்கு என்ன கிப்ட தந்திருக்காங்க?

கோல்கப்பா : நீயே பாரு!

பூரி குமாரி : சான்ஸே இல்லீங்க, ஜனங்க நெஜமாவே கலக்குறாங்க!

கோல்கப்பா : ஜனங்க கலக்குறது இருக்கட்டும். ஜனங்களை காப்பாத்த வேண்டிய அதிகாரிகள் துப்புகெட்டத்தனமா இருக்காங்களே, அவங்களுக்கு இதான் கெடச்சிருக்கு!

பூரி குமாரி : இவ்வளவு பேருக்கும் மக்கள் தீபாவளி பரிசு கொடுத்திருக்காங்க. அந்த மக்கள் தலைவர்களிடம் இருந்து என்ன பரிசு எதிர்பாக்குறாங்க?

கோல்கப்பா : வேறென்ன? இதை தான்!

பூரி குமாரி : ஆமாங்க! மக்கள் உண்மையையும் நேர்மையான ஆட்சியையும் தான் எதிர்பாக்குறாங்க!

கோல்கப்பா : கடைசியா, மக்கள் நம்ம ஸ்டோரி பூரிக்கு என்ன குடுத்திருக்காங்க தெரியுமா? இங்கே பார் !

பூரி குமாரி : நன்றி மக்களே! மிக்க நன்றி! இந்த தீபாவளி கிப்ட் ஹாம்பர் சீரீஸ் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிரவும்! Bye!