Tamil Parody Song – நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்!

A sad panipoori

கோல்கப்பா: கொஞ்ச நாளைக்கு முன்னாடி நாம சொன்ன statement தப்பாயிடுச்சு டார்லிங்!

பூரிகுமாரி : என்னங்க சொல்றீங்க?

கோல்கப்பா: “முட்டு குடுப்பவர்கள் கெட்டு போவதில்லை”ன்னு சொன்னோம். ஞாபகம் இருக்கா?

பூரிகுமாரி : ஆமாங்க, இப்போ ஸ்டார்ட்டப் கட்சி தோழர்களோட நெலமைய பத்தி சொல்றீங்களா கோல்?

கோல்கப்பா: என்னத்த சொல்ல? புண்பட்ட மனச பொலம்பி தான் ஆத்திக்கணும் போல இருக்கு!

பூரிகுமாரி : இதுல ஹைலையிட்டே நம்ம டாக்டர் பேசினது தான்! மக்களே, டைம் இருந்தா இவங்க சொல்றத கேட்டு யோசிச்சு பாருங்க!

Dr.Shalini's speech compilation

பூரிகுமாரி : Meanwhile, ஆட்டோகிராப் படத்துல வர்ற ஒரு பாட்டை, நம்ம கோல்கப்பா மாதிரி ஆளுங்களுக்காக, கொஞ்சம் மாத்தி எழுதி இருக்கேன்! படிச்சி enjoy பண்ணுங்க! Bye!!

நம்பிக்கைகள் நெஞ்சினில் புதைந்ததினால்,
எதிர்பார்ப்பை எந்தன் நெஞ்சில் குறைக்கின்றேன்!

உன் உருவம் நேர்மையென பதிந்ததினால்,
கேள்வி கேட்டு கேள்வி கேட்டு முழிக்கின்றேன்!

நண்பன் நண்பியெல்லாம் சுற்றி திரிய,
ஆதரவை காகிதமாய் தூக்கி எரிய,

அண்ணா உன்னால் முடிகிறதா?
என்னால் ஏனோ முடியவில்லை!

எனக்கே எனக்கே, உன்னை புரியவில்லை,
காரணம் கேட்கும் எண்ணமுமில்லை!!

நம்பிக்கைகள் நெஞ்சினில் புதைந்ததினால்,
எதிர்பார்ப்பை எந்தன் நெஞ்சில் குறைக்கின்றேன்!

உன் உருவம் நேர்மையென பதிந்ததினால்,
கேள்வி கேட்டு கேள்வி கேட்டு முழிக்கின்றேன்!

காத்திருந்து காத்திருந்து பழகியவன்!
நீ என்னை வழி நடத்தும், ஒரு நொடிக்காக,
காத்திருந்து காத்திருந்து பழகியவன்!

இஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு பேசியவன்!
நீ எந்தன் நாடாள, உன் வாய்மொழியை,
இஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு பேசியவன்!

இன்ஸ்டா எல்லாம் Paid posttu,
எனை குறுகி போக வைக்கிறதே!

கமெண்டுகள் எல்லாம் ரணமாகி,
என் கவனத்தை கூட சிதைக்கிறதே!

Decode பண்ண முடியவில்லை!
உன்னை நேசிக்கும் மண்ணில் பதருமில்லை!

எனக்கே எனக்கே உன்னை புரியவில்லை,
காரணம் கேட்கும் எண்ணமுமில்லை!!

நம்பிக்கைகள் நெஞ்சினில் புதைந்ததினால்,
எதிர்பார்ப்பை எந்தன் நெஞ்சில் குறைக்கின்றேன்!

உன் உருவம் நேர்மையென பதிந்ததினால்,
கேள்வி கேட்டு கேள்வி கேட்டு முழிக்கின்றேன்!

நண்பன் நண்பியெல்லாம் சுற்றி திரிய,
ஆதரவை காகிதமாய் தூக்கி எரிய,

அண்ணா உன்னால் முடிகிறதா?
என்னால் ஏனோ முடியவில்லை!

எனக்கே எனக்கே உன்னை புரியவில்லை,
காரணம் கேட்கும் எண்ணமுமில்லை!!

Political Parody Rhymes – 3

tamil rhymes

பூரி குமாரி : ஏங்க, இந்த வார ரைம்ஸ்க்கு என்ன தீமுங்க?

கோல்கப்பா : எனக்கு மண்டை வறண்டு கெடக்கு, நீயே யோசிச்சு சொல்லு!

பூரி குமாரி : ஊரே வெள்ள காடா இருக்கு, நீங்க என்ன மண்டை காஞ்சு இருக்கீங்க?

கோல்கப்பா : ஹா, ஐடியா! மழையை வெச்சி ரைம்ஸ் போடலாம்.

பூரி குமாரி : சும்மாவே ஜனங்க மாநகராட்சியை திட்டுவாங்க! இதுல திட்டவான்னு இந்த புயலுக்கு பேரு வச்சிருக்காங்க!!

கோல்கப்பா : ஹீஹீஹீ, அது திட்டவா இல்ல டார்லிங்! “டிட்வா“!!

பூரி குமாரி : ஹாஹாஹா, இது நீங்க கொள்கைப்பா ஆனா மாதிரி இருக்கு! எனக்கு என்னவோ புயலுக்கு பேரு வெச்சவங்க மேல சந்தேகமா இருக்கு!

கோல்கப்பா : பேருல இருக்க அக்கப்போரவிட, ஊருல ஜாஸ்தியா இருக்கு! மக்களே, இந்த ஒரிஜினல் ரைம்ஸ் கேட்டுட்டு, நம்ம வெர்ஷனை படிச்சி என்ஜாய் பண்ணுங்க!

பூரி குமாரி : நம்ம ரைம்ஸ் படிக்கறதுக்கு முன்னாடி இந்த படத்தை நல்லா பாத்துக்குங்க, மக்கள் படுற கஷ்டம் புரியும்!

chennai rain

பொட்டி
கண்ணம்மா!!

இப்போ மழை வந்தா
என்ன பண்றது?

எல்லாரும் சேர்ந்து
போட்டிங் போலாமா?

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

சின்ன தொகையை
விட்டு வைத்தேன்!

பம்பு மோட்டார்
எடுத்து வைத்தேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வீதி பக்கம்
வந்து பார்த்தேன்!

பேட்ச் ஒர்க்க
போட்டு வைத்தேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வெள்ள காடாய்
நகரம் மாறும்!

பாலம் எல்லாம்
பார்க்கிங் ஆகும்!

போ மழையே போ,
போ மழையே போ!!

ஏரி குளம்
விற்று விட்டோம்!

வயல் வெளியில்
கல்லு நட்டோம்!

போ மழையே போ,
போ மழையே போ!!

கள்வர் நாங்கள்
கொழிக்க வேண்டும்!

தொகை என் பையில்
கொட்ட வேண்டும்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வடிகால் நாங்கள்
போடவில்லை!

நீர் நிலைகள்
தூர் வாரவில்லை!

போ மழையே போ!


காட்டி கொடுக்காமல்,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

Political Parody Rhymes – 1

Poori singing rhymes

கோல்கப்பா : குமாரி, ரொம்ப நாளா நீ கேட்டுக்கிட்டுருந்த பாலிடிக்ஸ் ரைம்ஸ் இப்போ ரெடி!
பூரி குமாரி: இது யாருக்கான ரைம்ஸ் கோல்கப்பா?
கோல்கப்பா : இது ஜுனியர் தலீவருக்கு பேபி! படிச்சு என்ஜாய் பண்ணு!
பூரி குமாரி: : செமங்க, மக்களே, மொதல்ல ஒரிஜினல் ரைம்ஸ் கேட்டுட்டு, அப்புறம் நம்ம வெர்ஷனை படிச்சி பாருங்க!

கொள்கை வண்டி
தள்ளியே,
வாரிசு தம்பி
வருகிறார்!

தள்ளி போங்கள்
ஓரமாய்,
வாரிசு வண்டி
போகணும்!

வாழ்க்கை முழுக்க
உழைத்தாலும்,
உபி நீ வண்டி
ஏற முடியாது!

வருந்தி நீ
வாழ்வை
தொலைத்தாலே,
விரைந்து
உயர்வார்
பேட்டா!

கொள்கை வண்டி
தள்ளியே,
வாரிசு தம்பி
வருகிறார்!

தள்ளி போங்கள்
ஓரமாய்,
வாரிசு வண்டி
போகணும்!

வாழ்க்கை முழுக்க
உழைத்தாலும்,
உபி நீ வண்டி
ஏற முடியாது!

வருந்தி நீ
வாழ்வை
தொலைத்தாலே,
விரைந்து
உயர்வார்
பேட்டா!

Thank you, Dairy Milk!

Pani puri couple enjoying dairy milk

கோல்கப்பா : Cadbury Daily Milk போட்டுருக்குற New Neighbour சாக்லேட் விளம்பரத்தை பார்த்தியா?

பூரி குமாரி : அருமையா இருக்குங்க!

Dairy mil ad

கோல்கப்பா : இந்த கம்பெனிக்கு நம் மக்கள் சார்பாக நன்றியும், வாழ்த்துக்களும்!

பூரி குமாரி : ஆமாங்க, கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும். அதே சமயம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் மொழி உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆளும் தரப்புக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்ளுவோம்!

கோல்கப்பா : நியாயம் தான் குமாரி! வாசக நண்பர்களே, இந்த பதிவை படித்து நீங்களும் உங்கள் வாழ்த்தை கமெண்டில் சொல்லுங்கள்!

Dairy mil ad

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

பூரி குமாரி : மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்! நன்றி!