
Tamil Nadu Election 2026: Realize & Reflect series – Day 1



This is the time we see more than usual — promises, posters, speeches, and symbols everywhere.
But beyond the noise, this month is also a chance to pause, observe, and question.
What do we really notice around us?
What has changed — and what hasn’t?
What do our everyday surroundings quietly say about governance, priorities, and reality?
Election Month: Realize & Reflect is a series of simple, everyday visuals and thoughts — not to tell you what to think, but to help you see more clearly before you decide.
Because a vote is not just a choice.
It’s a reflection of what we’ve truly understood.
Stay with this series to see clearly and think independently.
If this resonates, share it with your circle.
Let more people see what truly matters.

கோல்கப்பா : என்ன டார்லிங், இந்த படத்துக்கு மாலை போட்டிருக்க?
பூரி குமாரி : அது போயி இன்னையோட ஒரு வாரம் ஆச்சுங்க!!
கோல்கப்பா : ஆமா, ஸ்டார்ட்டப் கட்சி ஆளுங்க இதை சொல்லி தானே கூவிகிட்டு இருந்தாங்க?
பூரி குமாரி : ஆமாங்க, அந்த கூத்த தான் நாலு மாசமா பாத்தோமே…
கோல்கப்பா : இந்நேரம் மஞ்சா பஸ்ஸு, சந்து பொந்தெல்லாம் பறக்க வேணாமா?
பூரி குமாரி : அட போங்க கோல்! இந்த பட்ட படிச்சி பாருங்க, விசில் பாய்ஸ் கோஷ்டி படுற கஷ்டம் புரியும்!
கோல்கப்பா : மக்களே, நம்ம பூரி லேடி மண்டைலேர்ந்து வந்திருக்க இந்த பாட்டை படிச்சி என்ஜாய் பண்ணுங்க!! Bye!!

மாரல் கோடு வந்துடுச்சி!
SOPயும் போயிடுச்சி!!
பஸ்ஸு இன்னும் கெளம்பலியே?
அதுவும் ஏனோ புரியலையே??
மாரல் கோடு வந்துடுச்சி!
SOPயும் போயிடுச்சி!!
பஸ்ஸு இன்னும் கெளம்பலியே?
அதுவும் ஏனோ புரியலையே??
மாரல் கோடு வந்துடுச்சி!
SOPயும் போயிடுச்சி!!
பஸ்ஸு இன்னும் கெளம்பலியே?
அதுவும் ஏனோ புரியலையே??
விசிலு நெசக் குரலு,
அண்ணன் மனமசலு!
ஊர் கோலம் போவது
எப்போது?
அசலு இளம் பவரு,
அண்ணன் கவி கசலு!
சுருதி கேக்கும் லேட்டாவே!
சுருங்கி கேக்கும் லேட்டாவே!!
ஒண்ண எண்ணி நானே,
உள்ளம் வாடி போனேன்!
சின்ன பசங்க தானே,
என் அண்ணனே, என் அண்ணனே!
ஒத்தயில நம்ம கட்சி,
ஒன்ன நம்பி சுத்தும் பட்சிஸ்!
பிளானு ஒண்ணும் காணலையே?
காலம் நேரம் பத்தலையே!!
மாரல் கோடு வந்துடுச்சி!
SOPயும் போயிடுச்சி!!
பஸ்ஸு இன்னும் கெளம்பலியே?
அதுவும் ஏனோ புரியலையே??
அண்ணன் லிஸ்ட விட்டு,
நெதமும் தெறிக்க விட்டு,
போனா… கூட்டம் கூடாதா?
நாளும் அலஞ்சி திரிஞ்சு,
நாமும் ஓட்டு கேட்டு,
போகும் காலம் வாராதா?
அண்ணன் காதில் ஏறாதா??
நேரங்காலம் விரயம்!
நெஞ்சுக்குள்ள பாரம்!!
மேலும் மேலும்
குறையும்,
நம்ம நேரந்தான்,
நம்ம நேரந்தான்!!
ஒண்ண நம்பி,
மொட்டு விட்டேன்!
களத்தில் கால,
எடுத்து வச்சேன்!
இஷ்ட பட்ட,
இளமீசை பச்சான்ஸ்!
நம்ம ஏன்தான்,
காக்க வச்சார்?
மாரல் கோடு வந்துடுச்சி!
SOPயும் போயிடுச்சி!!
பஸ்ஸு இன்னும் கெளம்பலியே?
அதுவும் ஏனோ புரியலையே??

கோல்கப்பா : நியூஸ் பாத்தியா செல்லம்?
பூரி குமாரி : எந்த நியூஸுங்க?
கோல்கப்பா : நம்ம பீச்மேன், டார்ச்மேன் மாதிரி ஆயிட்டாரே, அத தான் சொல்றேன்!
பூரி குமாரி : From Arch-rival to Survival மோடுக்கு போய்ட்டாங்க! என்னத்த சொல்றது?
கோல்கப்பா : ஒண்ணும் சொல்ல வேணாம். பாட்டாவே பாடிடுவோம்!
பூரி குமாரி : மக்களே, இந்த பாட்ட கேட்டுட்டு, நம்ம வெர்ஷனை படிச்சி என்ஜாய் பண்ணுங்க! Bye!!
தர்மயுத்தம்:
பாக்கெட்டுல போட்டோ இல்ல,
தனியா நிக்குற motto இல்ல!
பாக்கெட்டுல போட்டோ இல்ல,
தனியா நிக்குற motto இல்ல!
பாக்கெட்டுல போட்டோ இல்ல,
தனியா நிக்குற motto இல்ல!
என் கூட யாரும் இல்ல,
பூமாலை கட்ட நாறும் இல்ல!
நாறும் இல்ல!!
பீச்சு பக்கம் ஜோலி இல்ல,
சாஞ்சு நிக்க wallம் இல்ல!
போஸ்டிங் போட மம்மி இல்ல,
Ghosting பண்ண நா டம்மி இல்ல!
டம்மி இல்ல!!
டெல்லி பேச்ச நம்பி போனா,
தூக்கணாங்கூடு!
நா தியானம் செஞ்சு,
ஓஞ்சு போயி ஆனேன் sad!
கேசையெல்லாம் தூக்கி போடு,
தேவையில்லாத லேட்டு!!
Bylaw பேசுனா வாயிக்கு,
போடணும் பூட்டு !
நேர்த்தி கடனை பூர்த்தி பண்ண,
மறக்க போறேன் நான்!!
மறந்து கொஞ்சம்
எதிரி கூட,
தஞ்சம் ஆனேன் நான்!!
பாக்கெட்டுல போட்டோ இல்ல,
தனியா நிக்குற motto இல்ல!
என் கூட யாரும் இல்ல,
பூமாலை கட்ட நாறும் இல்ல!
நாறும் இல்ல!!
பீச்சு பக்கம் ஜோலி இல்ல,
சாஞ்சு நிக்க wallம் இல்ல!
போஸ்டிங் போட மம்மி இல்ல,
Ghosting பண்ண நா டம்மி இல்ல!
டம்மி இல்ல!!

கோல்கப்பா: கொஞ்ச நாளைக்கு முன்னாடி நாம சொன்ன statement தப்பாயிடுச்சு டார்லிங்!
பூரிகுமாரி : என்னங்க சொல்றீங்க?
கோல்கப்பா: “முட்டு குடுப்பவர்கள் கெட்டு போவதில்லை”ன்னு சொன்னோம். ஞாபகம் இருக்கா?
பூரிகுமாரி : ஆமாங்க, இப்போ ஸ்டார்ட்டப் கட்சி தோழர்களோட நெலமைய பத்தி சொல்றீங்களா கோல்?
கோல்கப்பா: என்னத்த சொல்ல? புண்பட்ட மனச பொலம்பி தான் ஆத்திக்கணும் போல இருக்கு!
பூரிகுமாரி : இதுல ஹைலையிட்டே நம்ம டாக்டர் பேசினது தான்! மக்களே, டைம் இருந்தா இவங்க சொல்றத கேட்டு யோசிச்சு பாருங்க!

பூரிகுமாரி : Meanwhile, ஆட்டோகிராப் படத்துல வர்ற ஒரு பாட்டை, நம்ம கோல்கப்பா மாதிரி ஆளுங்களுக்காக, கொஞ்சம் மாத்தி எழுதி இருக்கேன்! படிச்சி enjoy பண்ணுங்க! Bye!!
நம்பிக்கைகள் நெஞ்சினில் புதைந்ததினால்,
எதிர்பார்ப்பை எந்தன் நெஞ்சில் குறைக்கின்றேன்!
உன் உருவம் நேர்மையென பதிந்ததினால்,
கேள்வி கேட்டு கேள்வி கேட்டு முழிக்கின்றேன்!
நண்பன் நண்பியெல்லாம் சுற்றி திரிய,
ஆதரவை காகிதமாய் தூக்கி எரிய,
அண்ணா உன்னால் முடிகிறதா?
என்னால் ஏனோ முடியவில்லை!
எனக்கே எனக்கே, உன்னை புரியவில்லை,
காரணம் கேட்கும் எண்ணமுமில்லை!!
நம்பிக்கைகள் நெஞ்சினில் புதைந்ததினால்,
எதிர்பார்ப்பை எந்தன் நெஞ்சில் குறைக்கின்றேன்!
உன் உருவம் நேர்மையென பதிந்ததினால்,
கேள்வி கேட்டு கேள்வி கேட்டு முழிக்கின்றேன்!
காத்திருந்து காத்திருந்து பழகியவன்!
நீ என்னை வழி நடத்தும், ஒரு நொடிக்காக,
காத்திருந்து காத்திருந்து பழகியவன்!
இஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு பேசியவன்!
நீ எந்தன் நாடாள, உன் வாய்மொழியை,
இஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு பேசியவன்!
இன்ஸ்டா எல்லாம் Paid posttu,
எனை குறுகி போக வைக்கிறதே!
கமெண்டுகள் எல்லாம் ரணமாகி,
என் கவனத்தை கூட சிதைக்கிறதே!
Decode பண்ண முடியவில்லை!
உன்னை நேசிக்கும் மண்ணில் பதருமில்லை!
எனக்கே எனக்கே உன்னை புரியவில்லை,
காரணம் கேட்கும் எண்ணமுமில்லை!!
நம்பிக்கைகள் நெஞ்சினில் புதைந்ததினால்,
எதிர்பார்ப்பை எந்தன் நெஞ்சில் குறைக்கின்றேன்!
உன் உருவம் நேர்மையென பதிந்ததினால்,
கேள்வி கேட்டு கேள்வி கேட்டு முழிக்கின்றேன்!
நண்பன் நண்பியெல்லாம் சுற்றி திரிய,
ஆதரவை காகிதமாய் தூக்கி எரிய,
அண்ணா உன்னால் முடிகிறதா?
என்னால் ஏனோ முடியவில்லை!
எனக்கே எனக்கே உன்னை புரியவில்லை,
காரணம் கேட்கும் எண்ணமுமில்லை!!

தமிழ்நாடு காங்கிரஸ்:
நீ எங்கே?
என் அன்பே!
வேண்டும் வேண்டும் வேண்டும்,
நீ தான்
எனக்கு வேண்டும்!
நீ எங்கே?
என் அன்பே!
நீ இன்றி
நான் எங்கே?
வேண்டும் வேண்டும் வேண்டும்,
நீ தான்
எனக்கு வேண்டும்!
உந்தன் கூட்டணி இல்லாது,
எந்தன் பார்ட்டி தேறாது!
நீ எங்கே?
என் அன்பே!
நீ இன்றி
நான் எங்கே?
துவளர்கிற தொண்டர்களின், முகங்களை பார்த்தால்,
தவிக்குதே தவிக்குதே!
தொடர்கிற கூட்டணியை, முடித்திட மனம்,
இங்கு துடிக்குதே துடிக்குதே!
களத்திலே தொய்விலே, தொண்டர்கள்
உணர்வுகள், மருகுதே மருகுதே!
மனமில்லை மதிப்பில்லை, பெருசுகள்
குழுக்களை, அமைக்குதே அமைக்குதே!
எழும் போது ஒன்றாக,
எழ வேண்டும் வா வா!!
உடையும் போது எல்லோர்க்கும் விடியும் அங்கு வரவா?
உந்தன் கூட்டணி இல்லாது, எந்தன் பார்ட்டி தேறாது!
நீ எங்கே? என் அன்பே!
நீ இன்றி, நான் எங்கே?
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வீதி எங்கும், வெட்டி லைவு பேட்டியெங்கும்,
வெல்த்து கிங்கு, முறைக்குமா முறைக்குமா?
டெல்லி என்றும் ,சாட்டை சொடுக்காது என்று,
கன்ட்ரோல் இங்கு, நினைக்குமா நினைக்குமா?
தொண்டனென்றும், தொங்கு சதை பிண்டமென்றும்,
மேலிடம் நித்தம், பார்க்குமா பார்க்குமா?
சித்தன் என்றும், சர்ச்சை பேசும் தொண்டன் என்றும்,
நம்மை காவியம், ஒதுக்குமா ஒதுக்குமா?
மோதல் கொண்டு ஒட்டாத அணிகள் என்றென்றும் உண்டு!
ஆணி இங்கே புடுங்காது, மீண்டும் ஊதுறாங்க சங்கு!!
உந்தன் கூட்டணி இல்லாது, எந்தன் பார்ட்டி தேறாது!!
நீ எங்கே?
என் அன்பே!
நீ இன்றி
நான் எங்கே?
வேண்டும் வேண்டும் வேண்டும்,
நீ தான்
எனக்கு வேண்டும்!
உந்தன் கூட்டணி இல்லாது,
எந்தன் பார்ட்டி தேறாது!
நீ எங்கே? என் அன்பே!
நீ இன்றி, நான் எங்கே?

காங்கிரஸ்: பவர் காற்று திரும்புமா?
என் பார்ட்டி வெளங்குமா?
காரோட, மண்டையில சைரன் தாலாட்ட…
எனக்கொரு கேபினெட் கெடைக்குமா?
காங்கிரஸ்: பவர் காற்று திரும்புமா?
என் பார்ட்டி வெளங்குமா?
விஜய்: ராசாவே வருத்தமா?
ராசாவே வருத்தமா?
உள்காயம் பொறுக்குமா?
தயங்காதே…
இந்த கழகம் மயங்காதே …
கொடுக்குமா?
சூரியன் இறுக்குமா?
காங்கிரஸ்: என்ன சொல்லுவேன்?
என்னுள்ளம் தாங்கல…
சீட்ட வாங்கினோம் …
ஸ்டியரிங்க வாங்கல…
விஜய்: இந்த வேதனை…
யாருக்குத்தான் இல்ல?
ஒன்ன நினைக்கவே …
ஊருக்குள் ஆளில்ல…
காங்கிரஸ்: ஏதோ என் பார்ட்டி
படும் பாட்ட பாடி
சொல்லாத சோகத்த
சொன்னேனடி…
விஜய்: சோக ராகம் மேகம்தானே…
சோக ராகம் மேகம்தானே…
காங்கிரஸ்: யாரது போறது?
விஜய்: Missile பறக்குமா
நின்னு லோடு ஏத்துமா?
காங்கிரஸ்: பவர் காற்று திரும்புமா?
என் பார்ட்டி வெளங்குமா?
காரோட, மண்டையில் சைரன் தாலாட்ட…
எனக்கொரு கேபினெட் கெடைக்குமா?
காங்கிரஸ்: உள்ள அடிச்சுகிறோம் …
வெளிய சிரிக்கிறோம்…
நல்ல வேஷம்தான்…
வெளுத்து வாங்குறோம்…
விஜய்: உங்க மனசு தான்…
கொஞ்சம் மாறணும்!
எங்க Missionக்கு …
propulsion ஆகணும்!
காங்கிரஸ்: missile ஏ என் நெஞ்சில்..
பால் வார்த்த விசிலே …
win ஐ என் பார்ட்டிக்கு …
தா தா கண்ணே…
விஜய்: தெசப் பாட்டு படிச்சேன் நானே…
நெசப் பாட்டு படிச்சேன் நானே…
காங்கிரஸ்: புது வெயில் யாரது?
விஜய்: கொஞ்சம் பாருங்க…
புது missile நானுங்க…
காங்கிரஸ்: அடி நீதானா அந்தக் missile …
எல்லோர் வீட்டிலும் கேக்கும் விசில் …
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி…
பறந்ததே ஒலகமே மறந்ததே…
விஜய்: நான்தானே அந்த missile …
வாண்டடாக வந்த missile …
ஆத்தாடி நீ பழைய காத்தாடி…
பறந்தியா? ஒலகந்தான் அத மறந்ததா?

வடிவேலு: யே விடியலு விடியலு விடியலு விடியலு விடியலு …
யே சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலே…
பிகிலு: ஓட்டுங்கோ ஓட்டுங்கோ ஓட்டுங்கோ …
ஓட்டுங்கோ ஓட்டுங்கோ …
பிகிலு: கொக்க கோலா, பிரவுன் கலருடா…
உங்க அப்பா குடுத்தாரு, பிரவுன் கவருடா…
வோட்டிங் மெஷினுல, விசில அமுக்குடா…
நம்ம வைப்ரேஷன், ரொம்ப தூளுடா…
பிகிலு: ஐயோ விசிலுன்னு நம்ம முடக்க பார்த்தாரடா…
அய்யா காதுக்குள்ள நம்ம ஓசை தான் உறுத்தலடா …
பிகிலு: குளு குளு கவர்ச்சி ஸ்கீமு.…
கலர் கலர் கனவு ஸ்கீமு…
கூட்டணி ஸ்ட்ரீட் பைட்டு …
கடன் வாங்கி ஷோ ஸ்கீமு…
பிகிலு: ஓட்டுங்கோ ஓட்டுங்கோ…
ஓட்டுங்கோ ஓட்டுங்கோ…
வடிவேலு : கோ? வா…
பிகிலு: கொக்க கோலா, பிரவுன் கலருடா…
உங்க அப்பா குடுத்தாரு, பிரவுன் கவருடா…
வோட்டிங் மெஷினுல, விசில அமுக்குடா…
நம்ம வைப்ரேஷன் ரொம்ப தூளுடா…
டீம்: ஹேய் ஹான் ஹேய் வாடி வா…
வடிவேலு: வரவா???
டீம்: ஒத்து…
வடிவேலு: அட கெடுபுடி செயலே…
பிகிலு: ஹே கியான் கியான்னு என கத்துது கூட்டணி கோழி …
கூட்டணி கோழில தானே பல ரகம் உண்டு தோழி…
பசங்களுக்கெல்லாம் அதை ரசிப்பது ஜோலி…
ஹே கியான் ஹே கியான் ஹே கியான் கியான் கியான் கியான்…
பிகிலு: தேசிய கட்சி, அது ஸ்பாய்லர் கோழி…
நம்மூரு கட்சிங்க, மச்சி முட்டுக் கோழி…
கடைசியா கூப்பிட்டு, அவரு முடிச்சிருவாரு ஜோலி …
ஹே கியான், ஹே கியான், ஹே கியான், கியான் கியான் கியான்…
பிகிலு: உள்ளுக்குள்ள அவங்களுக்கு, உதறல் எடுக்குதுடா…
விசிலு சொல்லுறத, முழிச்சி கேட்டுக்கடா…
யே விடியலு விடியலு விடியலு விடியலு விடியலு …
யே சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு
பிகிலு: ஆட்டைய போட்டது, பவள விழா கண்ட கோழிடா…
பக்குன்னு பாக்குது, சின்ன பால்வாடி கோழியடா…
பிகிலு: ஹே பச்சை இலை உத்து பாக்குது…
வடிவேலு: யார?
பிகிலு: பாசிசம் கூட இருந்தும் என்னை பாக்குது…
மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி…

பிகிலு: பச்சை இலை உத்து பாக்குது…
வடிவேலு: ஆமாபா…
பிகிலு: பாசிசம் கூட இருந்தும் என்னை பாக்குது…
பிகிலு: ஓட்டுங்கோ ஓட்டுங்கோ…
ஓட்டுங்கோ ஓட்டுங்கோ…
பிகிலு: கடனுல இருக்கும், நாட்டு நெலைமய பாரு…
அத சுமத்துனது யாரு? அட 1.0ன்னு பேரு…
நிதியையே காணோமே? அதை தின்னது யாரு…
யே ஓட்ரா யே ஓட்ரா யே ஓட்ரா ஓட்ரா ஓட்ரா ஓட்ரா…
பிகிலு: ஜோரா சரக்கு விக்கிற, ஆட்சி தள்ளாடுது பாரு…
கதறுது வுமனு, குல நாசம்னு பேரு…
போதைய வித்து, ஆண்களை அடிமையாக்குனது யாரு?…
யே ஓட்ரா யே ஓட்ரா யே ஓட்ரா ஓட்ரா ஓட்ரா ஓட்ரா…
டீம்: கவுத்துக்கிச்சி, பஸ்ஸு கவுத்துக்கிச்சி …
பங்கு கேட்டது, இப்போ பொத்துக்குச்சி …
யே விடியலு விடியலு விடியலு விடியலு விடியலு …
யே சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு..
பிகிலு: ஆட்சிக்கு பல்லக்கு சுமப்பது, கூட்டணி கட்சிங்கப்பா …
அவங்களுக்கு பங்கு குடுப்பதில், தப்பு ஒண்ணும் இல்லப்பா …
பிகிலு: கொக்க கோலா ,பிரவுன் கலருடா…
உங்க அப்பா குடுத்தாரு, பிரவுன் கவருடா…
வோட்டிங் மெஷினுல, விசில அமுக்குடா…
நம்ம வைப்ரேஷன், ரொம்ப தூளுடா…
பிகிலு: ஐயோ விசிலுன்னு நம்ம முடக்க பார்த்தாரடா…
அய்யா காதுக்குள்ள நம்ம ஓசை தான் உறுத்தலடா …
பிகிலு: குளு குளு கவர்ச்சி ஸ்கீமு.…
கலர் கலர் கனவு ஸ்கீமு…
கூட்டணி ஸ்ட்ரீட் பைட்டு …
கடன் வாங்கி ஷோ ஸ்கீமு…
டீம்: ஓட்டுங்கோ ஓட்டுங்கோ…
ஓட்டுங்கோ ஓட்டுங்கோ…
வடிவேலு: கோ.. வா?
டீம்: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…
ஹையோ ஹையோ ஹையோ ஹோய்…
வடிவேலு: ஏன்பா ஒரு தடவை சொல்லு…
டீம்: ஓட்டுங்கோ..…
வடிவேலு: அதேதான்..

ரமா கல்யாணம் நாளை. ஜித்து வீடியோ கால் செய்து ரமாவின் அலங்காரத்தை பார்த்து சந்தோஷமாக பேசி வெளியே கிளம்பினாள்.
அங்கே பாண்டியில் ரமாவுக்கு நல்லபடியாக திருமண முடிந்தது. வெளியாட்கள் பெரும்பாலானோர் கிளம்ப நெருங்கிய சொந்தங்கள் மட்டும் மண்டபத்தில் இருந்தது.
ராஜுவின் அக்கா கணவர் ரவீந்தர் தாதிபத்திரி சிமெண்ட் பேக்டரியில் என்ஜினீயராக இருக்கிறார். அவரின் பள்ளி நண்பரும் பாண்டியில் வங்கி மேனேஜராக இருக்கும் பாலாவும் உறவுக்கார சிறுவர் சிறுமிகளின் அருகே அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.
சற்று நேரத்தில் ராஜும் அவரது தந்தையும் அங்கே வந்து அமர்ந்தார்கள். பேச்சுவாக்கில் சிறுவர்கள் எதிர்காலத்தில் என்ன படிப்பது என ரவியுடன் விவாதித்து கொண்டிருந்தார்கள்.
எல்லாவற்றையும் கேட்ட குமரேசன் “எல்லாரும் நல்லா படிச்சு நம்ம ராஜு மாதிரி நல்ல அரசாங்க வேலைக்கு போகணும்” என பெருமை தூக்கலாக சொன்னார். “ஆமா கவர்மெண்டு வேல தான் காலத்துக்கும் நல்லது” என பக்கத்தில் இருந்தவர் ஆமோதித்தார்.
“என்ன பெரிய கவர்மெண்டு வேல. பசங்களா, நல்லா படிச்சு நம்ம ஜித்து மாதிரி வேலைக்கு போகணும். நல்ல சம்பளம். வெளி நாட்டுக்கு போய் வேல பாக்கலாம். இங்க குண்டு சட்டியில குதிரை ஓட்ட வேணாம்” என சத்தமாக சொன்னார் ரவீந்தர்.
ராஜூவுக்கும் குமரேசனுக்கும் சங்கடமாக இருந்தது.
“உங்களுக்கு தெரியுமா ரவீந்தர்? இவங்க ஹவுசிங் லோன் எங்க பிரான்ச்ல தான் இருக்கு. ஜித்துவோட இன்கம்னால தான் நல்ல அமவுண்ட்டுக்கு லோன் சேங்க்ஷன் ஆச்சு. ஜித்து தான் மெயின் அப்ளிக்கன்ட். இவங்க ரெண்டு பேரும் கோ-அப்ளிக்கன்ட்ஸ்” என விலாவரியாய் சொன்னார் பாலா.
சிறுவர்கள் ஆர்வமாகி விசாரிக்க ரவீந்தரும் பாலாவும் மேற்கொண்டு விஷயங்களை ராஜு ஜித்து தம்பதிகளை உதாரணம் காட்டி விளக்க ஆரம்பித்தார்கள்.
குமரேசனுக்கு அந்த இடத்தில் இருக்க மனம் ஒப்பவில்லை. அவர் கிளம்ப ராஜுவும் அவரை தொடர்ந்து வெளியேறினான்.
அடுத்த அரை மணி நேரத்தில் மண்டபம் முழுவதும் இதுவே பேசு பொருளாக இருந்தது.
ரமாவின் மாமியார் வந்து காமாட்சியின் அருகே உட்கார்ந்து ஜித்துவை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள். காமாட்சி எல்லா விஷயங்களையும் கெத்தாக சொல்ல அவர் ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தார்.
“ஜித்துக்கிட்ட பேசணும். நா போய் அவரை கூட்டிட்டு வரேன்” என சொல்லி எழுந்து போனார்.
அதுவரை காத்திருந்த குமரேசன் காமாட்சியை ரூமிற்குள் அழைத்து ஜித்துவை திட்டி தீர்த்தார். ஏன் சம்மந்தமில்லாமல் இங்கு இல்லாத ஒரு பெண்ணை திட்டுகிறார் என காமாட்சிக்கு விளங்கவில்லை. ராஜுவும் முகம் தெளிவில்லாமல் சுற்றிக் கொண்டிருந்ததை கவனித்தார்.
“ஏண்டா அப்பாவும் பையனும் ஒரு மாதிரி இருக்கீங்க?” என கேட்டார் காமாட்சி.
ஒன்றும் சொல்லாமல் ராஜு முறைத்துவிட்டு நகர, “கல்யாணாத்த வெச்சிக்கிட்டு ஊருக்கு போக வேணாம்னு சொன்னா கேட்டாளா? இப்ப பாரு இவன் அவமானபட்டு நிக்குறான். அடுத்த வாரம் போயிருந்தா காதும் காதும் வெச்ச மாதிரி நமக்குள்ளேயே இருந்திருக்கும். இப்ப இவன குண்டு சட்டினு கிண்டல் பண்றாங்க” என எகிறினார்.
ரவீந்தரை மனதில் கரித்துக் கொட்டினாள் காமாட்சி.
“எல்லாம் நீ குடுக்குற எடம். குடும்ப கவுரவம் இப்ப காத்துல பறக்குது” என மனைவியையும் சேர்த்து திட்ட ஆரம்பித்தார்.
எப்படியோ புலம்புங்கள் என காமாட்சி அங்கேயிருந்து நகர்ந்தார்.
அன்று மாலை ரிசப்ஷன் ஆரம்பித்து அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. இரவு பத்தரை வாக்கில் ரமாவின் மாமனார் சற்று ஓய்வெடுக்க மேடையின் கீழே வந்து குமரேசன் அருகே உட்கார்ந்தார்.
“உங்க மருமக பாரின்ல இருக்காங்களா? என விசாரித்தார்.
“ஆமாம், ரெண்டு வாரம் ஒர்க்ஷாப். அதுக்கு போயிருக்கு” என இறுக்கமாய் சொன்னார்.
“வீடியோ கால் போடுங்க. ரமாவ பாத்து பேசட்டும். அப்படியே நாங்களும் பேசுறோம்” என சொல்லி சிரித்தார்.
வேறு வழியில்லாமல் குமரேசன் காமாட்சியை கூப்பிட்டு போன் போட சொன்னார்.
காமாட்சி போன் போட ஜித்து பதிலளிக்கவில்லை. அப்போது ஜித்து ரேஷ்மியுடன் முதல் நாள் போட்டிங்க் போன இடத்துக்கு மீண்டும் தனியே போய் இருந்தாள். போன் பையில் சைலென்டில் இருந்தது.
நாலைந்து முறை காமாட்சி போன் போட்டு பார்த்தார்.
“எடுக்கலீங்க. ஏதாவது வேலையா இருப்பா. மிஸ்ட் கால் பாத்தா அவளே கூப்பிடுவா” என சொல்லி போனை பையில் போட்டு கொண்டார் காமாட்சி.
“என்ன பெரிய வேலை. பாரின் போனா குடி கூத்துனு கும்மாளம் போடுவாங்க. எங்க நெதானத்துல இருக்க போறாங்க போன எடுக்க” என ஒரு சொந்தகார மூதேவி சொன்னது.
காமாட்சி அந்த ஆளை திட்ட குமரேசன் விருட்டென்று அங்கிருந்து எழுந்து கிளம்பினார்.
வீட்டுக்கு போய் குமரேசன் பேயாட்டம் ஆடி தீர்த்தார். வாய்க்கு வந்த வார்த்தைகளை கொட்டினார். அந்த நேரம் பார்த்து ஜித்து போன் வந்தது.
காமாட்சி முழிக்க “எடுத்து பேசு” என அதட்டினார்.
காமாட்சி பேச ஆரம்பிக்க பின்னாலிருந்து குமரேசன் கத்த ஆரம்பித்தார்.
“இவ்ளோ நேரம் எங்க போனானு கேளு, எத்தனை முறை போட்டோம் ஏன் எடுக்கலைனு கேளு” என கத்தினார்.
“ஆன்ட்டி, நா போட்டிங் போயிருந்தேன். இப்ப தான் பார்த்தேன். ஏன் டென்ஷான இருக்காரு?” என கேட்டாள் ஜித்து.
அவளுக்கு பதில் சொல்வதற்கு முன் அவர் வாயை அடைப்பதற்காக “ஏங்க அவ போட்டிங் போயிருக்கா. இப்ப தான் போன பாத்து திரும்ப கூப்பிடுறா. சும்மா கத்தாதீங்க” என்றார் காமாட்சி.
“என்ன இங்க பாண்டில இல்லாத போட்டிங்கா? அங்க போய் புதுசா பாக்க. ஒரு போன் வந்தா எடுத்து பேச முடியாதா?” என மீண்டும் எகிறினார்.
தான் போனை எடுக்காததால் பயந்து போய் இருக்கிறார். அதனால் கோபப்படுகிறார் என நினைத்தாள் ஜித்து.
“ஏங்க போட்டிங் போனது ஒரு குற்றமா? விடுங்க” என்றார் காமாட்சி.
“போட்டிங் போனாளா இல்ல பெட்டுக்கு போனாளா, யாருக்கு தெரியும்? இதுக்கு தான் பம்பாய்க்காரி வேணாம்னு படிச்சு படிச்சு சொன்னேன். அம்மாவும் பையனும் ஒத்த கால்ல நின்னீங்க. இப்ப பாரு இவன் தலை குனிஞ்சு நிக்குறான்” என தேவையில்லாமல் வார்த்தையை விட்டார் குமரேசன்.
“என்ன பேச்சு பேசுறீங்க, நாக்கை அடக்குங்க” என கத்தினார் காமாட்சி.
ஜித்துவுக்கு தான் கேட்ட வார்த்தை எதையும் ஏற்று கொள்ள இயலவில்லை.
“ஏன்டா மரம் மாதிரி நிக்குற, நாலு கேள்வி நல்லா கேளு அவளை”என்றார் குமரேசன்.
ராஜு அந்த இடத்தில் இருக்கிறான். அவன் முன்பு தான் இவ்வளவு பேச்சும் என தெரிந்து கொண்டாள்.
காமாட்சி சுதாரித்து போனை கட் செய்வதற்குள் “நா உங்க பேச்ச கேக்காதது தப்பு தான்ப்பா” என்றான் ராஜு.
காமாட்சி போனை கட் செய்வதற்குள் ஜித்துவே போனை வைத்து விட்டாள்.
ஜித்துவுக்கு அது நிலவை நோக்கிய பயணமாக தோன்றியதால் மறுநாளும் அதே இடத்திற்கு வந்திருந்தாள். இப்போது இந்த பேச்சுகளை கேட்ட பிறகு இப்படியே பயணப்பட்டு இந்த பூமியை விட்டு எங்கோ தொலைதூரம் போய் விட்டால் நல்லது என தோன்றியது. முதல் நாள் ரசித்த நிலவை மீண்டும் பார்க்கும் விருப்பமில்லாமல் தரையை பார்த்தபடியே வெகு நேரம் அமர்ந்திருந்தாள்.
அந்த வார்த்தைகள் கொடுத்த வலி எவ்வளவு வீரியமானது என உணரவே அவளுக்கு சற்று நேரமானது.
மீண்டும் காமாட்சியின் போன் வந்தது.
ஜித்து எடுத்தவுடன் “இவங்களுக்கு நல்ல சாவே வராது. பொம்பளைங்கள தப்பா பேசுனவனுங்க நல்ல கதி காண மாட்டானுங்க. நீ எதுவும் மனசுல வெச்சுக்காதே. பத்திரமா ரூமுக்கு போயிட்டு எனக்கு போன் பண்ணு. இருக்குற கொஞ்ச நாள்ல அங்க இதையே நெனச்சுக்கிட்டு இருக்காதா. அவ்வளவு தூரம் தனியா போன பொண்ணு நல்லபடியா வந்து சேரணும்னு நா கடவுளை வேண்டிக்கிட்டு இருக்கேன். இந்த நாதாரி மனுஷன் புத்தி கெட்டு பேசுறார். எனக்காக மன்னிச்சுடுமா” என தயங்கியபடியே சொன்னார் காமாட்சி.
எதுவும் சொல்லும் மன நிலையில் அவள் இல்லை. சரியென்று சொல்லி போனை வைத்தாள்.
நேரம் ஆக ஆக குளிர் அதிகமானது. ஜித்து எழுந்து கோட்டை மாட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
மனைவியாக, அம்மாவாக, மருமகளாக அல்லாமல் ஜித்து என்ற தனி பிறவியை மட்டும் நோக்கி வீசப்பட்ட அம்புகள் அவை. அந்த வார்த்தைகளை கடப்பது அவ்வளவு எளிதல்ல என தோன்றியது அவளுக்கு.
ஒரு மணி நேரம் நடந்தவள் அப்பகுதியில் நதியின் கடைசி முனை வரை போய் சேர்ந்திருந்தாள். சற்று நேரம் முன்பு அவளை சந்தோஷமாக சுமந்த நதி இப்போது அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.
அவள் நின்ற இடத்தின் அருகே அவளையே வாஞ்சையாய் பார்த்துக் கொண்டிருந்தது லிண்டன் மரம்.
“நீ ஒரு அருமையான மனைவி ஜித்து. ராஜு ஈஸ் கிப்ட்டட். ஸோ இந்த மரம் உன்ன ப்ளேஸ் பண்ணுதுனு நா நம்புறேன்” என ரேஷ்மி சொல்லிய வார்த்தைகள் அவளின் மனதை இன்னும் ரணமாக்கியது.
அங்கிருந்து பார்த்தால் ஒரு பெரிய டாய் ஹவுஸ் தெரிந்தது. மீண்டும் இந்த பக்கம் வருவாளா என தெரியாததால் அந்த கடைக்குள் நுழைந்தாள். வண்ண வண்ண பொம்மைகள் குவிந்து கிடந்தன. புஷ்கருக்கும் கல்யாணிக்கும் பிடித்த மாதிரியான பொம்மைகளை தேர்வு செய்து கொண்டு பணம் செலுத்த வரிசையில் போய் நின்றாள்.
“நா உன்னோட பில் பே பண்ணட்டுமா? என பின்பக்கமிருந்து ஒரு குரல் கேட்டது. வேறு யார் கார்சன் தான்.
அவள் அருகே குனிந்து “பியாண்ட் இமாஜினரி லேவிஷ் லைப்ஸ்டைல்” என முணுமுணுத்தார்.
நாம் ஏன் கார்சனை அடிக்கடி சந்திக்கிறோம் என ஜித்து நினைக்கையில் வரிசை நகர அவள் போய் பணம் செலுத்தி பொருட்களை கவரில் போட்டு எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
ஆட்டோமேட்டிக் டோர் தானாய் திறக்க கடையை விட்டு வெளியே வந்தாள். கார்சனும் பக்கத்தில் நடக்க ஆரம்பித்தார்.
“ஜித், நா உன்னை வேணும்னே பாலோ பண்ணலை. ஜஸ்ட் ஷாப்பிங் வந்த போது உன்னை பார்த்தேன். இப்ப அந்த ஆட்டோ டோர் தொறந்தது இல்ல, அது போல தான் உன்ன பார்த்தா என்னால ரியாக்ட் பண்ணாம இருக்க முடியல. ஐ அம் ஜஸ்ட் லைக் தட் சென்சார் அண்ட் ஆக்ட்ஸ் ஈவன் வித்தவுட் பிஸிக்கல் கான்டாக்ட்” என விஷமமாய் சொன்னார்.
இந்த ஆள் என்ன ஜென்மம் என நினைத்தபடியே போனை பார்க்க அவள் புக் செய்த டாக்ஸி அங்கே வந்தது. பேசாமல் ஏறி உட்கார்ந்து கதவை சார்த்த கார்சன் அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தார்.

செஷன் முடிந்ததும் விருட்டென்று கிளம்பி ரேஷ்மியின் ப்ளோருக்கு போனாள். இருவரும் கிளம்பி டாக்ஸி பிடித்து ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்கள்.
இயல்பு நிலை என்பது இங்கிருந்து கிளம்பும் வரை சத்தியமாக இருக்காது என நினைத்தாள். திரும்ப ஆபீஸ் போகும் எண்ணமில்லை ஜித்துவுக்கு.
சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்தில் ரேஷ்மிக்கு ஒரு முக்கியமான அழைப்பு வர அவள் வீட்டுக்கு கிளம்பினாள். ஜித்துவும் கெஸ்ட் ஹவுஸ் போய் உடையை மாற்றிக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள். மாலை ஐந்து மணிக்கு காபி குடித்துக் கொண்டே மெயில் செக் செய்தாள். தான் பதிலளிக்க வேண்டிய எந்த செய்தியும் இல்லை.
நிம்மதியாக ஆப் செய்து டேபிள் மீது வைத்து வெளியே கிளம்ப ரெடியானாள்.
ரஷ்மியின் போன் வந்தது. மதியம் பாதியிலேயே கிளம்பி விட்டதால் இப்போது கெஸ்ட் ஹவுஸ் வந்து கொண்டிருக்கிறாள். ஜித்துவை போட்டிங் அழைத்து சென்று பிறகு ஷாப்பிங் முடித்து இரவு திரும்புவதாக சொன்னாள்.
இருவரும் கிளம்பி பஸ் பிடித்து பிரின்சஸ் கேனல் வந்து சேர்ந்தார்கள்.

சூரியன் மறையும் மஞ்சள் மாலைப் பொழுது.
அடர் பச்சை நிற நதியோடையின் இருகரையிலும் வெளிர் பச்சை மரங்கள் வரிசையாக நின்றன. கிட்டத்தட்ட ரெண்டு மைல் தூரம் ஒரே நேர்கோடாக ஓடுகிறது நதி.
ரேஷ்மி டிக்கட் வாங்கி வர இருவரும் படகில் ஏறி உட்கார்ந்தார்கள். இரண்டு மணி நேர படகு சவாரி நகரின் முக்கிய நதியோடைகள் வழியாக.
அடர் நிற முன் பக்க கோபுர அமைப்பு கொண்ட பதினேழாம் நூற்றாண்டு கால கட்டிடங்களும், தேவாலயமும் நகரின் வரலாற்றையும் பண்பாட்டையும் பிரதிபலித்தன. மெதுவாய் ஊர்ந்த படகிலிருந்த ஜித்துவின் மீது கரையோரம் இருந்து லிண்டன் மரங்கள் சில ஹார்ட் ஷேப் இலைகளை தூவியது.
“ஜித்து, இந்த லிண்டன் மரங்களுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது” என அவள் தோளின் மீதிருந்த பூக்களையும் சில இலைகளையும் எடுத்து ஜித்துவிடம் கொடுத்தபடியே சொன்னாள் ரேஷ்மி.
“என்ன ஸ்பெஷல் இந்த மரத்துக்கு?” என கேட்டாள் ஜித்து.
“லிண்டன் மரம் பெரேயா என்ற ஜெர்மானிய பெண் கடவுளோடு தொடர்புடையது. அன்பு, காதல், உண்மை மற்றும் பாதுகாப்பை குறிக்கும் கடவுளாக கருதப்படுகிறார். இந்த மரம் காதலர்களின் புனித மரம் என வணங்கி இதன் அருகில் திருமண நிகழ்வுகள் நடத்தியிருக்கிறார்கள். இந்த மரத்தடியில் மனிதர்கள் பொய் பேச மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த காலத்தில் இதன் அடியில் நீதி விசாரணைகள் நடத்துவார்களாம். கிரீக்கர்கள் லிண்டன் மரத்தை நல்ல திருமண பந்தத்துக்கும், அருமையான மனைவிக்குமான குறியீடாக நம்புகிறார்கள்” என விளக்கினாள்.
“இந்த ரெண்டு இலை, நாலு பூ என் மேல விழுந்ததுக்கு ஏண்டி மைத்தாலஜியெல்லாம் பேசுற” என சிரித்தாள் ஜித்து.
ஜித்து நீ என்ன கோ த்ரூ பண்றேன்னு எனக்கு தெரியும். நீ ஒரு அருமையான மனைவி. ராஜு ஈஸ் கிப்ட்டட். ஸோ இந்த மரம் உன்ன ப்ளேஸ் பண்ணுதுனு நா நம்புறேன்” என ஆதரவாய் சொன்னாள் ரேஷ்மி.
ரேஷ்மி சொல்வதை புன்னகையோடு கேட்டுக்கொண்டே அவள் மீது விழுந்த லிண்டன் இலையையும் பூக்களையும் பர்சில் பத்திரப்படுத்தினாள் ஜித்து.
சற்று நேரத்தில் இருள் சூழ கரு நீல நீரில் பக்கவாட்டு கட்டிடங்களின் தங்க நிற விளக்குகள் பட்டு ஒளி வீச அந்த குறுகலான நீரோடை மினுக்க ஆரம்பித்தது. படகின் நேரெதிராக வானத்தில் பௌர்ணமி நிலா கம்பீரமாக தோன்றியது. இரண்டு மைல் நீளத்திற்கு ஒரே நேர் கோடாக அந்த படகு பயணம் இருந்தது.
ஜித்துவுக்கு அது நிலவை நோக்கிய பயணமாக தோன்றியது.
இப்படியே பயணப்பட்டு நிலவில் போய் இறங்கும்படியான மனநிலை அவளுக்கு மிகுந்த பரவசத்தை தந்தது. அக்கம்பக்கம் சுற்றிப் பார்க்கும் விருப்பமில்லாமல் நிலவை மட்டும் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
இரண்டு மணி நேரம் ரம்மியமாக இருந்தது. படகிலிருந்து வெளியேறி இரவு உணவு சாப்பிட்டு ரேஷ்மி நாளை ஆபீசில் சந்திக்கலாம் என சொல்லி விடை பெற்றுக்கொண்டு கிளம்பினாள்.
ஜித்து அந்த நதியோரம் இருந்த சிமெண்ட்டு பெஞ்சில் போய் உட்கார்ந்தாள். லிண்டன் மர நினைவு வர போனை எடுத்து அதைப் பற்றி தேடினாள். அது நம்ம ஊர் எலுமிச்சை மர வகை என தெரிந்ததும் லேசாய் புன்னகைத்தாள் கொண்டாள். அந்த மரத்தின் இன்னோர் சிறப்பம்சம் அது தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் என இருந்தது. சடாரென கார்சனின் நினைவு வந்தது ஜித்துவுக்கு.
ரேஷ்மி சொன்னது சரிதான். இந்த லிண்டன் மரம் தன் பாதுகாப்பை உறுதி செய்வதாக மனதார நம்பினாள்.
இதன் மூலமாக குறியீடாக இயற்கை ஒரு விதமான மனவலிமையை அவளுக்கு கொடுத்தது.
கார்சனின் அன்றைய செய்கை அநாகரீகத்தின் உச்சமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அத்துமீறிய அவரின் நடத்தையோ சொல்லோ அவளின் முழு நாளையும் பாதித்தது. இன்னும் ஒரு வாரம் எப்படி ஓட்டுவது என ஒரு புறம் மேலோட்டமாய் கவலையாய் இருந்தாலும், ஆழ்மனம் கார்சனுக்கான எதிர்வினையை யோசிக்க ஆரம்பித்தது.