
Cartoon – Peak Power Demand!




கோல்கப்பா : என்ன குமாரி? இடைத் தேர்தல் நிலவரம் எப்படி இருக்கு?
பூரி குமாரி : ஹ்ம்ம், போன மே மாசம் நடந்த பொது தேர்தல் முடிவுகளையே இன்னும் ஏத்துக்க முடியாம எதிர் கட்சிங்க இருக்காங்க. இப்போ இது வேற? என்னத்த சொல்ல?
கோல்கப்பா : என்ன சலிச்சுக்குற?
பூரி குமாரி : பொது தேர்தலா இருந்தா நாடு ஒளிருது, மிளிருதுன்னு ஆட்சியாளர்கள் வழக்கமா சொல்லுவாங்க. இப்போ இடை தேர்தல்னால, எதிர் கட்சிங்க இன்னும் கதறுதுன்னு ஆளும் தரப்பு சொல்லுது!
கோல்கப்பா : அதென்னமோ உண்மை தான் குமாரி. மக்களே, தற்போதய எதிர்க்கட்சிகளின் மனவோட்டத்தை “மே மாதம்” திரைப்படத்தில் வரும் “தென்றலே” என்ற பாடலை தழுவி எழுதி இருக்கிறோம். பாடியும் பகிர்ந்தும் மகிழுங்கள். நன்றி.
எதிர் கட்சிகள்:
தேர்தலே,
நீ வந்ததேனடி?
என் மனதிலே,
தீரா காயம் தந்ததென்னடி?
என் வாழ்விலே,
பதவி மறைந்து போன மாயமென்னடி?
சில நாழிகை,
நீ வந்து போனது!
என் கூட்டணி,
அது பிச்சிக்கினு போனது!
தேர்தலே, என் கனவு
உன்னைத் தேடுதே! (2)
எண்ணி முடித்து
பார்த்தபோது,
கவிழ்ந்த ஆட்சியே!
என் பையிலிருக்கும்
தொகை ஒன்று மட்டும்
நினைவுச் சின்னமே! (2)
கதறிக் கதறி
எனது உள்ளம்
உடைந்து போனதே!
இன்று சிதறிப் போன
சில்லில் எல்லாம்,
எனது ஏக்கமே!
கண்ணீரில் பூ (தாமரை)
வளர்த்தே காத்திருக்கிறேன்!
என் காலடித் தடத்தில்
நான் உறைந்திருக்கிறேன்!
தேர்தலே,
நீ வந்ததேனடி?
என் மனதிலே,
தீரா காயம் தந்ததென்னடி?
என் வாழ்விலே,
பதவி மறைந்து போன மாயமென்னடி?
சில நாழிகை,
நீ வந்து போனது!
என் கூட்டணி,
அது பிச்சிக்கினு போனது!
தேர்தலே, என் கனவு
உன்னைத் தேடுதே!
தோள் கொடுக்க
காத்திருக்கும் தொண்டரில்லையா?
ஒரு சீரமைப்புக்கு
காத்திருக்கும் இயக்கம் இல்லையா? (2)
அறிக்கை வரக்
காத்திருக்கும் தலைவரில்லையா?
நான் சீர்திருத்தினால்
கட்சியின்னும் வளருமில்லையா? (2)
கண்ணீரில் பூ (தாமரை)
வளர்த்தே காத்திருக்கிறேன்!
என் காலடித் தடத்தில்
நான் உறைந்திருக்கிறேன்!
தேர்தலே,
நீ வந்ததேனடி?
என் மனதிலே,
தீரா காயம் தந்ததென்னடி?
என் வாழ்விலே,
பதவி மறைந்து போன மாயமென்னடி?
சில நாழிகை,
நீ வந்து போனது!
என் கூட்டணி,
அது பிச்சிக்கினு போனது!
தேர்தலே, என் கனவு
உன்னைத் தேடுதே!


கோல்கப்பா : என்ன குமாரி? இந்தியா டுடே கருத்து கணிப்பு புகைச்சலை கிளப்பி இருக்கே கவனிச்சியா?
பூரி குமாரி : ஹிஹிஹி..பார்த்தேன் கோல்.
கோல்கப்பா : நம்ம ஆட்சியாளர் தான் ராகாவுக்கு புது பங்காளின்னு நியூஸ் வந்ததும் பவனுக்கு அல்லு விட்டு போச்சு போல இருக்கு?
பூரி குமாரி : கருத்து கணிப்பு போட்டவங்களுக்கு விசில்காரங்க மன்மத நன்றிய அள்ளி தெளிச்சு கிட்டு இருக்காங்க கோல்.
கோல்கப்பா : அடியேய், அது மனமார்ந்த நன்றிடி. அறிவாலயத்து ஆளுங்க கூட எலக்சனுக்கு முன்னால கட்டி உருண்டு, எலக்சனுக்கு பின்னாடி பனையூர் கூட ஒட்டி உறவாடி, இன்னிக்கு கதர் கட்சிக்காரங்க முறுக்கி கிட்டு இருக்காங்க.
பூரி குமாரி : மக்களே, அவங்களோட தற்போதய மனக் குமுறலை இந்த பாடல் வழியாக விளக்கி இருக்கிறோம். படித்தும் பகிர்ந்தும் மகிழுங்கள்.
தமிழக காங்கிரஸ்:
மோதல் வளர்த்தேன்,
மோதல் வளர்த்தேன்!
சன் மேல், நானும் நானும்,
கொள்ள மோதல் வளர்த்தேன்!
மோதல் வளர்த்தேன்,
மோதல் வளர்த்தேன்!
என் கோஷ்டிக்குள்ள, மல்லுக் கட்டி
மோதல் வளர்த்தேன்..
ஏ தட்சிணத்தின் கீழே, அண்ணே நான்
குறி ஒண்ணு தான் வச்சு வந்தேன்!
இன்று செங்கோட்டை ரேஸில், நீயே தான்
சேர்ந்தவுடனே மோதல் வளர்த்தேன்!
(தேர்தலுக்கு முன்)
ஏ புள்ள புள்ள,
சன்னை சண்டை புடிச்சேன்!
நா மெல்ல மெல்ல,
முரணை கண்டு புடிச்சேன்!
நா உள்ள வெளிலேன்னு,
கூட்டணில வெடிய வெடிச்சேன்!
ஏ புள்ள புள்ள,
உன்னை உதறி தவிச்சேன்!
ஏ புள்ள…
மோதல் வளர்த்தேன்,
மோதல் வளர்த்தேன்!
சன் மேல், நானும் நானும்,
கொள்ள மோதல் வளர்த்தேன்!
மோதல் வளர்த்தேன்,
மோதல் வளர்த்தேன்!
என் கோஷ்டிக்குள்ள, மல்லுக் கட்டி
மோதல் வளர்த்தேன்..
ஆஹ்ஹ்ஹ் அஹ்ஹ்ஹ் அஹ்ஹ்
உள்ளங்கையின் வெறுமையதை
விரல்கள் அறியுமே!
என்னை
உன் மனம் அறியாதா!
பூட்டி வைத்த
அரை நூற்றாண்டு ஆசைகள்,
உன் PM ஆசை பார்த்ததும்
கலையாதா!
பல நூறு தலைவர்கள் தான்,
பூமியிலே வாழலாம்!
முதல் தேர்தலில் ஆட்சியை,
எட்டி பிடித்தது நீயப்பா!
தயக்கமின்றி ஆதரித்தாலே,
கதர் கனவுக்கு சிறகுகள் முளைக்கும்!
தேர்தலில் வெற்றியும்,
கன்பார்ம் தானே தானே..
(தேர்தலுக்கு பிறகு)
உனது பேரெழுதி பக்கத்துல,
எனது பேரை நானும் எழுதி வச்சேன்!
மொத ஆளா மந்திரி சபையில எடம் புடிச்சேன்..
எடம் புடிச்சும் இப்போ நான் நவுந்தேன்..
ஏ புள்ள புள்ள,
உன்னை தாங்கி புடிச்சேன்!
ஏ புள்ள புள்ள,
என்னை கண்டு புடிச்சேன்!
ஏ புள்ள புள்ள,
உன்னை கையில் புடிச்சேன்!
ஏ புள்ள புள்ள,
உன்னை நெஞ்சில் பதிச்சேன்!
ஏ புள்ள ஏ புள்ள(ஏ புள்ள ஏ புள்ள)
மோதல் வளர்த்தேன்,
மோதல் வளர்த்தேன்!
சன் மேல், நானும் நானும்,
கொள்ள மோதல் வளர்த்தேன்!
மோதல் வளர்த்தேன்,
மோதல் வளர்த்தேன்!
என் கோஷ்டிக்குள்ள, மல்லுக் கட்டி
மோதல் வளர்த்தேன்..
உன்னை தவிர இங்கு
எனக்கு யாரண்ணா!
உனது கூட்டணியில்
உயிர்த்தெழுவேன்!
உனது இலக்கு
மாநில எல்லை தாண்டினால்,
பிணக்கு வந்து
நான் விலகிடுவேன்!
உன் முகத்தை பார்க்கவே,
பல வாக்குகள் விழுகுதே!
வெண்ணை திரளும் நேரத்தில்,
பானை உடைக்கிறாய் நீயண்ணா!
சமத்துவ சமூக நீதி அனைத்தும்..
உனக்கெனவே தருவேன் அண்ணே!
உன் அணியில்
ஐக்கியம் போதும்
அண்ணே..
அண்ணே…
வெல்த்து கிங்கு அன்பு
அது சித்திரை வரை!
இரத்தின கவி அன்பு
அது சத்திரம் வரை!
ரவுண்டு வர்த்தி வந்து
தரும் அன்போ,
இருபத்தொம்போதில்
எண்ணும் வரை! அண்ணே ..
ஏ புள்ள புள்ள
மோதல் வளர்த்தேன்,
மோதல் வளர்த்தேன்!
சன் மேல், நானும் நானும்,
கொள்ள மோதல் வளர்த்தேன்!
மோதல் வளர்த்தேன்,
மோதல் வளர்த்தேன்!
என் கோஷ்டிக்குள்ள, மல்லுக் கட்டி
மோதல் வளர்த்தேன்..
ஏ தட்சிணத்தின் கீழே, அண்ணே நான்
குறி ஒண்ணு தான் வச்சு வந்தேன்!
இன்று செங்கோட்டை ரேஸில், நீயே தான்
சேர்ந்தவுடனே மோதல் வளர்த்தேன்!
ஏ புள்ள புள்ள,
சன்னை சண்டை புடிச்சேன்!
நா மெல்ல மெல்ல,
முரணை கண்டு புடிச்சேன்!
நா உள்ள வெளிலேன்னு,
கூட்டணில வெடிய வெடிச்சேன்!
ஏ புள்ள புள்ள,
உன்னை உதறி தவிச்சேன்!

கோல்கப்பா : என்ன குமாரி? அரசியல் நிலவரமெல்லாம் எப்படி இருக்கு?
பூரி குமாரி : அமோகமா இருக்குங்க. ஆமோதிக்குறீங்கன்னா கைய உயர்த்துங்க!
கோல்கப்பா : ஏண்டி, நான் ஒருத்தன் தானே இருக்கேன். கூட்டத்தை பாத்து பேசுற மாதிரி சொல்லுற?
பூரி குமாரி : எழுதி வெச்சுக்குங்க, எழுதி வெச்சுக்குங்க..உங்க கை கறை படிஞ்சி இருக்குறதால தான் நீங்க கைய தூக்க மாட்டேங்குறீங்க!
கோல்கப்பா : மிச்சத்தை நானே சொல்லிடுறேன்..அதனால தான் மக்கள் தேர்தல் அரசியல்லர்ந்து சிலரை தூக்கி போட்டுட்டாங்க..சரியா?
பூரி குமாரி : ஹிஹிஹி…நான் தான் பாதிக்கப்பட்டு இருக்கேன் நெனச்சேன்..நீங்களுமா?
கோல்கப்பா : ஏண்டி, நாம ரெண்டு பெரும் ஒண்ணா தானே டெய்லி சட்டசபை லைவ் பாக்குறோம்?
பூரி குமாரி : என்னமோ போங்க கோல். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஆக்கபூர்வமான விவாதங்களை செய்யாம சும்மா நச நசன்னு பேசிகிட்டு இருக்காங்க.
கோல்கப்பா : வாயில வடை சுடுறீங்கன்னு ரெண்டு தரப்பும் மாத்தி மாத்தி சொல்லறீங்களே, இதை பாக்குற ஜனங்க என்ன நினைப்பாங்கன்னு சபாநாயகர் வருத்தப்பட்டு கமெண்ட் பண்ற அளவுக்கு தான் நிலவரம் இருக்கு.
பூரி குமாரி :வடைன்னு பேசுறவங்களுக்கு பாயசத்தை போடுவோம் கோல். மக்களே, இடை தேர்தலை பெரிதும் நம்பி இருக்கும் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை “மாங்குயிலே பூங்குயிலே” என்ற பாடலை தழுவி நகைச்சுவையாக எழுதி இருக்கிறோம். படித்தும் சிறிதும் மகிழுங்கள். நன்றி.
ஆளும் கட்சி :
காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?
காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?
குத்து குத்து.. ஓட்டாலே..
நான் எட்டி பிடிப்பேன்..டோட்டலே..
காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?
புட்டு புட்டு வெளக்கி
சொல்ல ஏகப்பட்ட வம்பு!
அத லிஸ்டெடுத்து பைல்ல
வெச்சா பொங்குதடி தெம்பு!
மீட்டெடுத்து குடுத்த
அந்த பரந்தூரு ஊரு!
இப்போ, திட்டம் கொஞ்சம்
மாறுதடி..என்ன பாடு ஜோரு!
கண்ணுக்கழகா, மண்ணு சிரிச்சா,
சன்னு மனச, சுட்டு எரிச்சா..
தன்னந்தனியா ஆட்சி அமைச்சா,
கண்ணில் விரலை ஆட்டி கொடைஞ்சா..
ஏறெடுத்து பார்த்து,
யம்மா, என் சின்னத்துக்கு குத்து!
சீரெடுத்து வாரேன்,
யம்மா, பாத்து என்னை தேத்து!
காத்தடிக்கும்
கருவூல நிலைக்கு,
நிச்சயம் பதிலு
சொல்லிடும் விசிலு!
காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?
ஒன்ன மறந்திருக்க
ஒரு பொழுதும் அறியேன்!
எம்மா, எண்ணி வெரல விட்டு
வேறெதையும் தெரியேன்!
நெஞ்சத்தில குடியிருக்கும், பஞ்சு
மனசு பேன்ஸு!
யம்மா, இங்க அங்க பேசி
வரும் மீதியிருக்கும் ப்ளான்ஸு!
முறியடிப்போம்
சிண்டு சேட்டை!
பாய்ந்து கடப்போம்
பெரும்பான்மை கோட்டை !
சலவை செய்ய தான்
தேடி அழைச்சேன்!
சம்மதம்னு
சொல்லு தொகுதீ!
பிரச்சாரத்துக்கு வாரேன்..
யம்மா, பில்டப்பூ தாரேன்!
நம்பி நீயும் போட்டா..
யம்மா, மீதி வழி போறேன்!
மத்ததை மறந்து, போடணும் எனக்கு..
உங்கண்ணன் கணக்கு, மொத்தமும் உனக்கு!
காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?
காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?
குத்து குத்து.. ஓட்டாலே..
நான் எட்டி பிடிப்பேன்..டோட்டலே..
காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?



