
Cartoon – The Verdict



கோல்கப்பா : என்ன குமாரி, நாள் நெருங்கிடுச்சி எலக்க்ஷன் ரிசல்ட்டுக்கு! உன் கணிப்பு என்ன?
பூரி குமாரி : ஊர்ல கருத்து கணிப்பு சொல்றவங்களையெல்லாம் வண்டை வண்டையா திட்றாங்க கோல்! நமக்கு எதுக்கு வம்பு?
கோல்கப்பா : கரெக்ட்டுதான்..இந்த கணிப்பையெல்லாம் எப்புடி பாக்குற குமாரி?
பூரி குமாரி : ஹிஹிஹீ ..எல்லாம் பை, பையா கவனிப்பு தான்!
கோல்கப்பா : அடிப்பாவி…Clue பங்கமா இருக்கேடி!
பூரி குமாரி : சரி நீங்க சொல்லுங்க எந்த கோஷ்டி வின் பண்ணும்?
கோல்கப்பா : மே மூணு எழுத்து..அதுனால மூணு எழுத்து கட்சில ஒண்ணு ஜெயிக்கும்…
பூரி குமாரி : ஓஓஓ, அப்போ நாலு என்ன தொக்கா? நாலாம் தேதி ரிசல்ட்டு வருது..நாலு எழுத்து கட்சி தான் ஜெயிக்கும்…இது எப்புடி..ஹிஹிஹி..
கோல்கப்பா : எது எப்டியோ..நாளைக்கு அப்புறம் இந்த 2026 நம்ம காதுல கேக்குறது கொஞ்சம் குறையும்..
பூரி குமாரி : அதுவும் நம்ம “இட்டுகினு வந்து இட்டுகினு போறவர்” 2026ன்னு ஒவ்வொரு தடவை சொல்லி முடிக்குறதுக்குள்ள நான் இந்த வருஷமே முடிஞ்சிடும் நெனச்சிருக்கேன்..
கோல்கப்பா : ஆனந்தம் ஆனந்தம் பாடும், மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்…நீ மட்டும் தான் Clue குடுப்பி யா..நா கொடுத்திருக்கேன் பாரு ராகத்தோட!
பூரி குமாரி : எல்லாம் என் கெரகம்..உங்கள நம்பி சொன்னேன் பாருங்க..
கோல்கப்பா : ஏண்டி இந்த கள்ள மௌனம்? வாய தொறந்து சொல்லேன், யாரு இந்த தடவை ஆட்சி அமைப்பாங்கன்னு?
பூரி குமாரி : கடைசி நிமிஷம் வரை காட்சிகள் மாறும் கோல், பொறுமையா இருங்க.
கோல்கப்பா : ரெண்டு பார்ட்டிங்க ஏற்கனவே பவர்ல இருந்திருக்காங்க..இப்போ புதுசா ஒருத்தர் வந்து குதிச்சிருக்கார். களம் எப்புடி இருக்கு குமாரி?
பூரி குமாரி : ரெண்டு பார்ட்டிங்களும் களத்தை வளமா வெச்சிகிட்டாங்க..புதியவர் களத்தை மொத்தமா வளைச்சி வெச்சிக்கிட்டாரு …
கோல்கப்பா : ஹிஹிஹி, அருமையா ஒன் லைன்ல முடிச்சிட்ட..அட்லீஸ்ட் குத்துமதிப்பா ஒரு நம்பரை சொல்லேண்டி எல்லாருக்கும்?
பூரி குமாரி : ஏங்க எலக்சன் ரிசல்ட் என்ன சொத்து மதிப்பாங்க? குத்துமதிப்பா சொல்றதுக்கு?
கோல்கப்பா : குத்துங்க எசமானியம்மா, குத்துங்க..உன் பார்ட்னர்ன்னு கூட பாக்காம இப்படி கருணையே இல்லாமா எப்புடிடீ உன்னால சொல்ல முடியுது?
பூரி குமாரி : ஹிஹிஹி..இனிமே வாய் சும்மாதானே இருக்குன்னு எதுனா பேசுவீங்க?
கோல்கப்பா :வாய்ப்பில்லை ராஜா..வாய்ப்பே இல்ல! ஹா, வாய்ப்புன்னதும் தான் ஞாபகம் வருது? இந்த முறை எந்த கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்குன்னு நினைக்குற?
பூரி குமாரி : திருந்தவே மாட்டீங்களா கோல், நீங்க?
கோல்கப்பா : புதியவர் Just Entering Election..எவ்ளோ % வாங்குவாரு?
பூரி குமாரி : புதியவர் JEEல எவ்ளோ % வாங்குவாருன்னு தெரியல. ஆனா வாக்கு war நிச்சயம்..
கோல்கப்பா : அடியேய், என்னடி பெரும் புள்ளிய பள்ளி கூட பையன் கணக்கா சொல்லிப்புட்ட!
பூரி குமாரி : வேற என்னங்க சொல்ல முடியும்? இவர் எதிர்க்கிறது IIM & AIMS கோஷ்டி..
கோல்கப்பா : ரொம்ப படிச்சவங்களாடி?
பூரி குமாரி : இல்ல, IIMன்னா இலாக்கா இல்லாம மந்திரிய (Ilaakka Illaama Mandhiri) வெச்சிருந்த கோஷ்டி!
கோல்கப்பா : Oh My God..அப்போ AIMSம்ன்னாஆஆ?
பூரி குமாரி : மனச தேத்திக்குறீங்களா? சொல்றேன்..
கோல்கப்பா (நெஞ்சை பிடித்தபடியே) : மொத்தமா முடிச்சிவுட்ரு..கொஞ்ச நஞ்சம் ஏன் மிச்சம் வெச்சிருக்க?
பூரி குமாரி : ஹிஹிஹி..AIMSன்னா அம்மா இதயத்தின் மனசாட்சியாக (Amma Idhayaththin Mana Saatchiyaaga) இருக்குற கோஷ்டி..
கோல்கப்பா : ஹாஹாஹா..யாரு நல்ல ஸ்கோரு வாங்குறாங்களோ இல்லியோ..என் ஸ்வீட்டி, நீ ஸ்கோர் பண்ணிட்ட போ! மக்களே, இந்த ஜோக் நல்லா இருக்கும்னு எங்களுக்கே தெரியும்..அதனால முடிஞ்சவரைக்கும் உங்க கோஷ்டிகளுக்கு ஷேர் பண்ணுங்க. Bye!




மக்களே..தாய் கிழவி படத்துல வர்ற ஒரு காட்சியை உதாரணமாக கொண்டு, தவெக தொண்டர்களின் இன்றைய மனநிலைய பிரதிபலிக்கும் ஒரு பதிவு இது..படித்து பாருங்கள்..உங்களுக்கு பிடித்திருந்தால், நண்பர்களுடன் பகிருங்கள்..நன்றி!
மாற்று கட்சிகள் : ஏண்டி சுருளி, மே நாலாம் தேதி எலெக்க்ஷன் ரிசல்ட் வருது..உங்க புது கட்சிக்கு என்ன ஆகும்னு எங்களுக்கு இருக்குற பயம் துளி கூட உனக்கு இல்ல? உன் பாட்டுக்கு உக்காந்து வேலைய பாத்துகிட்டு இருக்க?
சுருளி : கட்சிக்காரங்க காச குடுத்துட்டு எங்களுக்கு ஓட்டு போடுன்னு சொல்லும்போது, அரசியல்னா அப்டி தான் இருக்கும்..காசு குடுக்குற கட்சிக்கு ஒட்டு போடு அப்டீன்னு நீங்க எல்லாம் சொன்னீங்க..
தவெக மட்டும் தான் அவங்க ஏன் உன் ஓட்ட வேலை குடுத்து வாங்கணும்? நாலு நல்லது கேட்டது தெரிஞ்சிக்கிட்டு, நீயே முடிவெடுன்னு சொல்லுச்சு..
தவெக அது ஜெயிக்க என்ன மாதிரி ஆளுங்களோட சினிமா மோகத்த பயன்படுத்தி கூட்டம் சேக்குதுன்னு ஊர்க்காரங்க எல்லாம்னுநெனச்சிகிட்டு இருக்காங்க..
ஆனா நெசத்துக்கு, தவெக என்ன மாதிரி பெண்களுக்கு பொது ஊடகங்கள்ல வர்ற செய்தில உண்மையெது, பொய்யெதுன்னு பாக்க வெச்சுது..
நான் முன்னாடி அரசியல்னா என்னன்னே தெரியாம இருந்தவ. தேர்தல் வந்தா மட்டும் ஓட்டு போடுவேன்.. அதுவும் வீட்ல யாருக்கு சொல்றாங்களோ பரம்பரை பரம்பரையா அவங்களுக்கு போடுவோம். எதுக்குன்னு கேள்வியே கேக்க மாட்டோம்.
ஆனா இப்போ கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டேன். ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தப்போ, நாங்க எல்லாரும் ஆவலா பாத்தோம். ஆரம்பத்துல அது வெறும் ‘ஆர்வம்’ மட்டும் தான்… ஆனா அந்த ஆர்வம் சுத்தி நடக்குறத பாக்க கத்து குடுத்திச்சு..
இப்போ எனக்கு தெரியும் – வேட்பாளர் யாரு? எந்த கட்சி என்ன சொல்லுது? அவுங்க நம்ம வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்துவாங்க? தேர்தல் வாக்குறுதின்னா என்ன? அது காகிதத்துல மட்டும் இருக்குதா, இல்ல நிஜமாவே நடக்குதா? இதெல்லாம் கவனிக்க ஆரம்பிச்சேன்.
இப்போ எம்மனசுல ஒரு தைரியம் இருக்கு..ஒதுங்கி இருக்காம களப்பணில ஈடுபடுறேன்..இந்த தேர்தல்ல பூத் ஏஜெண்டா போய் மொத தடவையா ஒக்காந்தேன்..ஏதோ ஒண்ண புதுசா கத்துக்கிட்டேன்..நாலு ஜனங்களோட மரியாதையா சம்பாதிச்சேன்…சின்ன வேலைன்னாலும் என் கடமையை நிறைவா செஞ்சேன்…
இதையெல்லாம் நான் என் மகளுக்கும் நான் சொல்லிக்கொடுப்பேன்..தேர்தல் களம்னா தள்ளி நிக்க தேவையில்ல..அதுவும் நம்ம தெருவுல, நம்ம ஊர்ல நடக்குற ஒரு நல்ல விஷயம்னுன்னு…
தவெகாவை எங்களை மாதிரி ஆளுங்கள தவிர மத்தவங்க சரியா புரிஞ்சிக்கல..அதுவும் எல்லார்கிட்டயும் இதை எதிர்பாக்கலை..இந்த கட்சி ஜெயிச்சாலும் சரி, தோத்தாலும் சரி…அது வந்தால நடந்த மாற்றங்களை யாராலயும் இனிமே திருப்பி போட முடியாது!
ரொம்ப கஷ்டப்பட்டுருச்சி..ஆட்சிக்கு வந்தா வரட்டும்..இல்லாட்டி பட்டு தெளிஞ்சு, அடுத்த தடவை வர வைப்போம்…




பூரி குமாரி: ஏங்க, எலக்க்ஷன் நெருங்கிடுச்சி, இன்னும் கூட்டணி இழுபறியா இருக்கேங்க?
கோல்கப்பா: பொதுவெளில பேச கூடாதுனு டெல்லி கை கட்சி மேலிடம் சொல்லி இருக்காம்.
பூரி குமாரி: அது சரி, நம்ம ஸ்டார்ட்அப் கட்சி கூட கூட்டணிக்கு போவார்களா? மாட்டார்களா?
கோல்கப்பா: போனா பூஸ்டு, போலேன்னா வேஸ்டு….
பூரி குமாரி: வாவ்..செம பன்ச் கோல்…மக்களே இந்த கூட்டணி பாட்ட படிச்சி என்ஜாய் பண்ணுங்க..

விஜய் : இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்…
இல்லை என்று சொல்லி
நீ வெல்லுவதென்றால்
இன்னும் இன்னும் உனக்கொரு ஜென்மம் வேண்டும்…
என்ன சொல்லப் போகிறாய்?
விஜய் : புல்லட்டு என்ஜினை
மீன்பாடி
தண்டித்தல்…
நியாயமா..நியாயமா?
கூட்டணி கேள்விக்கு, கைகளின் பதில் என்ன?
மௌனமா..மௌனமா?
விஜய் : இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்…
இல்லை என்று சொல்லி
நீ வெல்லுவதென்றால்
இன்னும் இன்னும் உனக்கொரு ஜென்மம் வேண்டும்…
என்ன சொல்லப் போகிறாய்?
விஜய் : புல்லட்டு என்ஜினை
மீன்பாடி
தண்டித்தல்…
நியாயமா..நியாயமா?
கூட்டணி கேள்விக்கு, கைகளின் பதில் என்ன?
மௌனமா..மௌனமா?
விஜய் : அன்பே எந்தன் கட்சி ஜெயிக்க …
என் புள்ளிங்கோ போதுமே…
உன்னை நானும் உயிர்ப்பிக்கத்தானே…
ஒரு ஆயுள் வேண்டுமே…
விஜய் : இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்…
இல்லை என்று சொல்லி
நீ வெல்லுவதென்றால்
இன்னும் இன்னும் உனக்கொரு ஜென்மம் வேண்டும்…
என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய்?
விஜய் : புல்லட்டு என்ஜினை
மீன்பாடி
தண்டித்தல்…
நியாயமா..நியாயமா?
கூட்டணி கேள்விக்கு, கைகளின் பதில் என்ன?
மௌனமா..மௌனமா?
விஜய் : அன்பே எந்தன் கட்சி ஜெயிக்க …
என் புள்ளிங்கோ போதுமே…
உன்னை நானும் உயிர்ப்பிக்கத்தானே…
ஒரு ஆயுள் வேண்டுமே…
விஜய் : இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்…
இல்லை என்று சொல்லி
நீ வெல்லுவதென்றால்
இன்னும் இன்னும் உனக்கொரு ஜென்மம் வேண்டும்…
என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய்?
விஜய் : மைனாரிட்டி வோட்ஸ் இங்கே மேட்டரடி …
உனக்கு பிம்பம் இருக்குதடி…
இதுதான் உன் சொந்தம்
என் இதயம் சொன்னதடி…
செக்யூலர் பிம்பம் நீ கட்ட…
ஒயர் பிஞ்சி தொங்குதடி…
பவர் ஷேரிங் கெஞ்சல் கும்மி அடிக்குதடி…
விஜய் : நீ என்னோடு நில்லடி பெண்ணே…
இல்லை ப்ளாஸ்ட்டு கல்லடி கண்ணே…
உந்தன் வாழ்க்கையே உன் ஒரு முடிவில் …
என்னைத் தவறாதே நெவர் கரையாதே…
விஜய் : இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்…
இல்லை என்று சொல்லி
நீ வெல்லுவதென்றால்
இன்னும் இன்னும் உனக்கொரு ஜென்மம் வேண்டும்…
என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய்…
விஜய் : புல்லட்டு என்ஜினை
மீன்பாடி
தண்டித்தல்…
நியாயமா..நியாயமா?
கூட்டணி கேள்விக்கு, கைகளின் பதில் என்ன?
மௌனமா..மௌனமா?
விஜய் : விடியல் ஆட்சி வந்த பின்னும் …
விடியாத நாடு இது……
இவர் சகவாசம் உன் கதை கந்தலடி…
இவ்வுலகமே ஓளிர்ந்த பின்னும்…
நீ ஒளிராத சோகம் என்ன …
Power பங்கு தராத உந்தன் பங்காளி…
விஜய் : பல இளைஞர் சக்திகள் கூடி…
உன்னை build பண்ணலாம் வாடி…
என் கதர் டவரே இன்னும் தயக்கமென்ன…
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா…
விஜய் : என்ன சொல்லப் போகிறாய்…
என்ன சொல்லப் போகிறாய்…
என்ன சொல்லப் போகிறாய்…
என்ன சொல்லப் போகிறாய்…
நியாயமா நியாயமா…