Tamil Parody Song – காத்திருக்கும் தேசம்!

A leader addressing a public rally

கோல்கப்பா : என்ன குமாரி, ஸ்டார்ட்டப் ஆட்சி அமைப்பதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கிறதே?

பூரி குமாரி : “முறுக்கு குழலுல மூணு ஓட்டை, முட்டு சந்துல காணோம் குட்டை”ங்கற கதையா இருக்கு கோல்!

கோல்கப்பா : என்னடி இது? புது பன்ச்சா இருக்கு?

பூரி குமாரி : பின்ன என்ன கோல். இத்தனை வருஷமா, முறுக்கிக்கிட்டு மூஞ்ச திருப்பிகிட்டு போனவங்க, இன்னைக்கு முட்டு சந்துல நிக்குறதால ஒண்ணா சேரலாமான்னு யோசிக்கிற நிலைமைக்கு வந்துட்டாங்க.

கோல்கப்பா : ஹிஹிஹி…எதுக்கும் ரெண்டு நாளைக்கு மனச திடமா வச்சிக்க.

பூரி குமாரி : நியூஸ் சர்குலேட் ஆகுற வேகத்துக்கு ஈடா, கால்குலேட்டரை தட்டி தட்டி நாக்கு தள்ளுது கோல்.

கோல்கப்பா : என்னவோ போ, இந்நேரம் தளபதி CM ஆனதுக்கு கங்கிராஜுலேட் பண்ணிட்டு அவங்கவங்க வேலைய பாக்க போயிருப்பாங்க. இப்போ என்னடான்னா manipulate, speculateன்னு எல்லா விஷயமும் லேட் ஆகுது.

பூரி குமாரி : என்னமா articulate பண்றீங்க கோல்!

கோல்கப்பா : நமக்கே இப்படி இருக்கே, ஸ்டார்ட்டப் கட்சிக்காரங்களுக்கு இந்த எவ்வளவு கஷ்டமா இருக்கும்? அதனால் மக்களே, காதல் தேசம் படத்தில் வரும் “தென்றலே” என்ற பாடலை தழுவி இந்த பாடலை ஸ்டார்ட்டப் கட்சி தொண்டர் அவர்கள் தலைவருக்காக பாடுவதாக உருவாக்கி இருக்கிறோம்.

படித்தும், பகிர்ந்தும் மகிழுங்கள். நன்றி!


காத்திருக்கும் தேசம்!

இளவலே இளவலே,
உள்ளத்தை நீ பேசு!
ஊருடன் நீ பேசு!

அண்ணலே அண்ணலே,
உள்ளத்தை நீ பேசு!
ஊருடன் நீ பேசு!

தேய்ந்த பாதை பார்த்து போகும்,
பயந்த கூட்டம் இங்கு இருக்கு!

புதிய வழியை காலம் காட்டும்,
துணிந்து எதிர்த்து நீ இறங்கு!

இளவலே இளவலே,
உள்ளத்தை நீ பேசு!
ஊருடன் நீ பேசு!

அண்ணலே அண்ணலே,
உள்ளத்தை நீ பேசு!
ஊருடன் நீ பேசு!

மக்கள் மனதை
வென்றும் இன்னலா?
மாளிகை மனது
கனன்று தொல்லையா?

உன் நோக்கம் உயர்த்தும்,
ஒருபடி மேல்நிலை!
உள் நோக்கம் கொண்டோர்,
செல்வார் கீழ்நிலை!

இன்று உனக்கு மட்டும்
தனி நிலை,
வெல்வாயே, என்றும்
நீ வெல்வாயே!

வென்ற பிறகு தேடி வரும்
வெறும் குழாம்,
தோல்வி தாங்க மறுக்கும்
எதிர் முகாம்!

இளவலே இளவலே,
வெளியே வந்து நீ பேசு!
ஊருடன் நீ பேசு!

தோற்றோர் கூடி போடும் ஆட்டம்,
பகை மறந்து சேரும் கூட்டம்,

நிலை தாழ்ந்து போகுமய்யா,
இடிந்திடாமல் எழுந்து நில்லய்யா!

வென்ற பிறகும்
வரும் பாதகம்
மக்கள் மன்றம்
என்றும் உனக்கு சாதகம்

நீ சொல்லும்
வார்த்தை கேட்கத்தான்,
இந்த நாடும்
நிறுத்தும் ஓட்டம் தான்!

உன்னை வெல்ல வைக்க
நேற்று வேண்டினோம்,
உன்னை வீழ்த்தும் நாடகம்
இன்று பார்க்கிறோம்!

இளவலே இளவலே,
உள்ளத்தை நீ பேசு!
ஊருடன் நீ பேசு!

அண்ணலே அண்ணலே,
உள்ளத்தை நீ பேசு!
ஊருடன் நீ பேசு!

தேய்ந்த பாதை பார்த்து போகும்,
பயந்த கூட்டம் இங்கு இருக்கு!

புதிய வழியை காலம் காட்டும்,
துணிந்து எதிர்த்து நீ இறங்கு!

Leave a comment