Tamil parody song – வந்தேன் வந்தேன்,மீண்டும் நானே வந்தேன்!

A tamil movie Panchathandhiram poster remake for tamilnadu bypolls election

கோல்கப்பா : என்ன குமாரி? இடைத் தேர்தல் நிலவரம் எப்படி இருக்கு?

பூரி குமாரி : விடை கிடைக்குற நேரம் வந்துருச்சி, கொஞ்சம் பொறுங்க கோல்!

கோல்கப்பா : நேரம் வந்துருச்சோ, இல்லியோ..ஆனா, பல பேரோட தந்திரங்கள் எல்லாம் வெளிய வருது பாத்தியா?

பூரி குமாரி : ஆமாங்க, தன்னை மிஞ்ச ஆளில்லேன்னு சொன்னவங்களை எல்லாம், பஞ்சர் ஆக்காம இந்த தேர்தல் விடாதுன்னு, இப்போ புரிஞ்சிருக்கும் கோல்!

கோல்கப்பா : மக்களே, “பஞ்ச தந்திரம்” என்ற படத்திலிருந்து, “வந்தேன் வந்தேன்” என்ற பாடலை, இந்த இடைத் தேர்தலை மையமாக கொண்டு நகைச்சுவையாக மாற்றி எழுதி இருக்கிறோம்.

பாடியும், பகிர்ந்தும் மகிழுங்கள், நன்றி!


தவெக :

வந்தேன் வந்தேன்,
மீண்டும் நானே வந்தேன்!

நங்கூரம் பாய்ச்ச,
சொச்சம் தேடி வந்தேன்!

எனது கனவு
கோட்டை (line) …

எட்டித்
தொட வந்தேன்!

வந்தேன் வந்தேன்,
தட்டு தடுமாறி நானே!

அதிமுக :

ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்…

யாரப்பா,
உன் பேச்சு காயப்பா!

தள்ளியே,
வண்டியை ஓடிப்போப்பா!

தொகுதியின்,
காவலாளி நான்தான்ப்பா!

Opticஸு பப்சு பேக்கரி,
உருட்டாதப்பா!

உன் ஆசைக்கு,
பை போல்ஸ திணிக்காதப்பா!

கூட்டணிக்கு
கேட்டு வந்தா,
தாங்கி பிடிப்பேன்!

நான் ஒரிஜினலா
ஜெயிச்ச சீட்டை
பங்கு கேட்டா,
பொங்கி விடுவேன்!

அட floor test carvingசுக்கு
ஆர்டர் செய்ய,

இடைத்தேர்தல் ஒன்றும்
செலிப்ரேஷன் கேக் அல்ல!

தவெக :

வந்தேன் வந்தேன்,
மீண்டும் நானே வந்தேன்!

எனது கனவு
கோட்டை (line) …
எட்டித் தொட வந்தேன்!

வந்தேன் வந்தேன்,
தட்டு தடுமாறி நானே!

வந்தேன் வந்தேன்
தட்டு தடுமாறி நானே…

(BGM)

அதிமுக :

என்ன நீங்க? அவரு பாட்டுக்கு ரோடு ரோடா வராரு? ஆரத்தி எல்லாம் எடுக்குறீங்க? இதெல்லாம் சரியில்லை.

(BGM)

மதுராந்தகம் & தாராபுரம் (அதிமுகவிடம்) :

பேசாதே, பேசாதே…

அதிமுக :

அதை அங்க சொல்லுங்க…

மதுராந்தகம் & தாராபுரம் (தவெகவிடம்) :

பேசாதே, பேசாதே…

மிச்ச நம்பருக்காக ஏன்தான் மாட்டினேனோ …
போதும் நான் பட்ட பாடு!

Tractor ஒரு பக்கம்,
Faction மறு பக்கம்,
நடுவில் நான்தானே ஆடு!

அதிமுக :

அட ரீல்ஸ் பசங்க வந்தாலும்,
உன் dilpasand நான் ஜெயிப்பேன்!
Retestல் நீ கொஞ்சம் காப்பாத்தப்பா..

தவெக :

வந்தேன் வந்தேன்,
மீண்டும் நானே வந்தேன்!

எனது கனவு
கோட்டை (line) …
எட்டித் தொட வந்தேன்!

வந்தேன் வந்தேன்,
தட்டு தடுமாறி நானே!

அதிமுக :

ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்..

சொல்லேன்ப்பா,
வெளிப்படையா சொல்லேன்ப்பா?

முட்டிதான் பார்க்கலாம்
வரியாப்பா?

உன்ன தட்டிதான்
தூக்குவேன் ஓடி போப்பா!

தவெக :

நான் பிச்சேன் எலை,
நீ வெட்டுக் கெளை!
போட்டி என்னப்பா?

அதிமுக :

உன்னை தோற்க வைப்பேன்,
ரெண்டையும் மீட்டு வைப்பேன்,
எந்தன் மெயின் ஓனர் மேல் ஆணை!

தவெக :

வந்தேன் வந்தேன்
மீண்டும்…
நானே வந்… ஆஅ…

(BGM)

அதிமுக :

எனக்கு எனக்கு
நீ சரிசமமா கம…
தத்திக் தரிகிட
தோம் தத்தரிகிரிதோம்…

தவெக :

எனக்கு நீயா?
உனக்கு நானா?

ஒண்டிக்கு ஒண்டி
resitல பார்த்துக்கலாமா ?

அதிமுக :

வாயேன்ப்பா,
மிதி வாங்கேன்ப்பா!

(BGM)

தவெக :

வந்தேன் வந்தேன்…
மீண்டும் நானே வந்தேன்..

ரெடியா?

Leave a comment